இனிய காலை வணக்கம் ."
அதைப்போலவே முத்திரை குத்தும் பழக்கமும் நம்மிடம் இருக்கிறது.
'ஆண்கள் வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்ய மாட்டார்கள்'
'பெண்கள் சரியாகக் கார் ஓட்ட மாட்டார்கள்'
'முதலாளிகள் என்றால் திமிரின் மொத்த வடிவம்'
'பணக்காரர்கள் தன்முனைப்புடையவர்கள்'
என்பன போன்ற பல பொதுப்படையான முடிவுகளை நாம் வைத்திருக்கிறோம். இதுதான் முத்திரை குத்துதல். சிலரைப் பார்த்தவுடனேயே, அவர்களைப் பற்றிய தீர்மானத்திற்குத் தாவுவதே முத்திரை குத்துதல். உடனடியாக அவர்களைப் பற்றிய தீர்ப்பு சொல்லிவிடுவோம்.
ஒருவரைப் பார்த்தவுடனேயோ, அவர் மதத்தையோ, இனத்தையோ, கல்வித்தகுதியையோ கேட்ட மாத்திரத்திலேயே அவர்களைப் பற்றி முடிவுக்கு வருபவர்கள் உண்டு. தன்னையே சான்றாண்மையின் இலக்கணமாக எண்ணி அதிலிருந்து மாறுபடுபவர்கள் மீதெல்லாம் முத்திரை குத்துவது மனிதர்கள் பலரது இயல்பு. "
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 471
இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.
மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பசார், சென்னை-600 017. விலை : ரூ. 180. ***** புதுக்கவிதை என்று சொன்னவுடன் அனைவரின் நினைவிற்கும் மோனையைப் போல முந்தி வந்து நிற்பவர் கவிஞர் மு. மேத்தா. கவி வேந்தர் பட்டம், பரிசு, விருது, பாராட்டு என்று பல பெற்று இருந்த போதும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர், இனியவர், பண்பாளர், பந்தா எதுவும் இல்லாத மாமனிதர், பெரும்பாலும் அவர் மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்திப்பது உண்டு. தொடர்வண்டி நிலையம் வரை சென்று வழியனுப்பியதும் உண்டு. தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுடன் நான் உள்பட பட்டிமன்ற குழுவினர் அனைவரும், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் சென்னையில் உள்ள இல்லத்திற்கு முன்அறிவிப்பு இன்றி சென்று இருந்தோம். அவர் சென்னைக்காரர்கள் போல இல்லாமல் பழங்கள் வழங்கி உபசரித்து கலந்துரையாடி வழிஅனுப்பி வைத்தார். அப்போது முனைவர் பட்ட ...

கருத்துகள்
கருத்துரையிடுக