ஞாயிறு, 31 ஜூலை, 2011
பார்த்து மகிழுங்கள்
http://www.tamilsguide.com/kavithaidetails.php?gallid=20&tid=9929
https://groups.google.com/group/anbudan/browse_thread/thread/4e76982ea63f50a2?hl=en&pli=௧
http://www.tamilvishai.com/home/?p=20459
http://www.viyapu.com/news/?p=18985
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி

நேற்று
னல் 4 பார்த்துவிட்டு இலங்கையின் முன்னால் அதிபர் சந்திரிகாவின் மகன் கண்ணீர் விட்டு அழுது சிங்களன் என்று வெளியில் சொல்லவே வெட்கமாக உள்ளது.என்றார் .இவ்வளவு கொடூரம் புரிந்த சிங்கள ராணுவத்துடன் தமிழன் எப்படி ?இணைந்து வாழ முடியும் .மனிதநேய ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும்
மதுரையில் மு .வரதராசனார் விழாவில் பேசிய முனைவர் இரா .மோகன் சொன்னார் 1950.ஆண்டு இலங்கை சென்று வந்த மு .வ .எழுதிய பயணக் கட்டுரையில் இலங்கையில் சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழ முடியாது .பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது .சிங்களர் புத்தரின் பல்லை வைத்து வணங்குகின்றனர். புத்தரின் பல் முக்கியம் அல்ல புத்தரின் சொல்லே முக்கியம்.ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் .சிங்களர் பேராசை பிடித்து அலைகின்றனர்.ஒன்றுபட்ட இலங்கை என்று இங்கு இருந்து பேசுபவர்களிடம் ஒரு கேள்வி .இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மன்மோகன் இந்தியாவின் பிரதமர் ஆக முடிந்தது .அனால் இலங்கையில் ஒரு தமிழர் அதிபர் ஆக முடியுமா ?முடியவே முடியாது .இலங்கையில் தமிழர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தி வந்தனர் .அற வழியில் போராடினார்கள் நியாயம் கிடைக்கவில்லை ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்கு தள்ளப் பட்டார்கள் .தெற்குபூடான் விடுதலைப் போராட்டமும் ஈழ விடுதலைப் போராட்டமும் ஒன்றுதான் .அடக்குமுறைக்கு எதிராகவேப் போராடினார்கள் .போராட்டத்தில் இருவருமே பல போராளிகளை இழந்தார்கள் .பல அப்பாவி பொதுமக்களையும் இழந்தார்கள் .ஐநா மன்றம் தெற்கு பூடான் விடுதலைக்கு முன் நின்று வாங்கித் தந்தது. .அது போல ஈழத்திலும் விடுதலையை ஐநா முன் நின்று வாங்கித் தர வேண்டும் .உலகத் தமிழர்கள் அனைவரின் கோரிக்கை இனி இதுதான் . இலங்கையை இரண்டாகப் பிரிப்பதுதான் அறிவார்ந்த செயலாகும் .இனி சிங்களரும் தமிழரும் ஒன்று சேர்ந்து வாழவே முடியாது .அதை உலக சமுதாயம் உணர் வேண்டும் சம உரிமை ,தனி மாநிலம் இவை எல்லாம் வெட்டிப் பேச்சு . . விடுதலைப்புலிகள் வான்படை, கடல்படை ,கடவுச்சீட்டு, அரசாட்சி என உலகம் வியக்கும் வண்ணம் நடத்தி வந்தனர் . விடுதலைப்புலிகள் இலங்கை ராணுவத்தை தாக்கி இருக்கிறார்கள்.ஆனால் ஒருபோதும் சிங்களப் பொது மக்களை தாக்கியது இல்லை .தாக்க நினைதத்தும் இல்லை .தாக்க நினைத்து இருந்தால் இன்று இலங்கையில் ஒரு சிங்களர் கூட உயிரோடு இருந்து இருக்க மாட்டார்கள். விடுதலைப்புலிகள் போர் நெறி கடைபிடித்து வந்தனர் .ஒழுக்கம், கட்டுப்பாடு இருந்தது.இலங்கை ராணுவம் வெள்ளைக்கொடி ஏந்தி வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொன்றதற்கு இலங்கை ராணுவ வீரர் சாட்சி உள்ளதை சேனல் 4 காட்டி உள்ளது இப்படிப்பட்ட கொடியவர்களுடன் சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?சிந்திப்பீர் .இலங்கை ராணுவம் இந்தியா, சீனா ,இஸ்ரேல் உள்ளிட்ட பன்னாட்டு ராணுவ உதவியுடன் ,ராடார் கருவிகளுடன் ,.செயற்கை கோள் உதவிகளுடன் தமிழ் இனத்தையே பெண்கள் , குழந்தை, முதியவர் என்று பாராமல் தடை செய்ப்பட்ட கொத்துக் குண்டுகளை வீசி ,பாலியல் வல்லுறவு செய்து உயிரோடு மண்ணில் புதைத்து ,காட்டுமிராண்டிகளைவிட மோசமாக விலங்குகளைவிட மோசமாக நடந்து கொண்டவர்களுடன் இனி சேர்ந்து தமிழர் வாழ முடியுமா ?. இந்தியா தன் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் .தமிழரை வெளிஉறவு அமைச்சராக ,செயலராக நியமிக்க வேண்டும் இந்தியா இனியாவது தமிழர்களின் இன உணர்விற்கு மதிப்பு அளித்து மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும் .மனித நேய ஆர்வலர்கள் இந்தியாவிடம் அதைதான் எதிர் பார்க்கின்றோம் .உலகில் சில ஆண்டுகளுக்கு முன் 50 நாடுகள் மட்டுமே இருந்தது .ஆனால் இன்று 193 நாடுகள் உள்ளது .ஐநா மன்றத்தில் 193 கொடிகள் பறக்கின்றன.194 வது கொடியாக தமிழ் ஈழக் கோடி பறக்க உதவ வேண்டும் .உலகத்தமிழர்கள் யாவரும் இன்று ஒரே குரலில் ஈழத்தில் தனி நாடு அமைத்துக் கொடுக்க உதவ வேண்டும் .முடிந்தால் உதவுங்கள் .முடியாவிட்டில் தள்ளி நில்லுங்கள் .ஒரு நாள் தனித் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும்
சனி, 30 ஜூலை, 2011
Channel 4 Srilanka's Killing Fields Full dialogues in தமிழ் and English
பார்க்க : www.sthalapathy.wordpress.com
செவ்வாய், 26 ஜூலை, 2011
திங்கள், 25 ஜூலை, 2011
eraeravi: படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது
நூல்: சில்லறை சப்தங்கள் (கவிதை)
ஆசிரியர்: வித்யாசாகர்
வெளியீடு: முகில் பதிப்பகம்
வணக்கம்
ஆசிரியர் வித்யாசாகரின் உலக அசைவிற்கேற்ப அகபுற செயல்பாடுகளையும், வாழ்க்கை சூழலையும் கருத்தியல்பாகக் கொண்ட படைபிலக்கியத்தை அவர் வசிக்கும் குவைத்தில் இருந்தே நன்கு அறிந்தவள் என்கிற பெருமையில்.............. இதோ...... 'சில்லறை சப்தங்கள்' எனும் கவிதை பூங்காவிற்குள் நுழைந்து வார்த்தைகளின் வசியத்தில் வாழ்ந்து, ஒவ்வொரு தமிழ் மணம் கமழும் வரிகளிலிருந்தும் வாழ்வின் நிதர்சனத்தை கண்டு பிரம்மித்தவளாய், இலக்கிய நிழலில் நின்று இளைப்பாரிய பாலைக்குயிலாக நிறைவு பெற்ற மனதோடு மீண்டும் சற்றே யதார்த்தத்திற்கு வந்தமர்ந்து என் பணிந்துரையை எழுதுகிறேன்.
படித்த ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் எழுத்தின் லாவகத்தையே காண முடிகிறது இச் சில்லறை சப்தங்கள் எனும் படைப்பு முழுதும். பொதுவாக, கவிதைக்கு கற்பனை தேவை என்போம், உண்மைதான்; ஆனால் அந்த கற்பனையினோடு கூட கண்ணியம் தேவை என்பதை இவரின் பலதரப் பட்ட கவிதைகளில் காணலாம். அதிலும் குறிப்பாகக் காதல் கவிதைகளில் காணலாம்.
இதுவரை, நான் இவரின் அதிக பட்ச படைப்புகளை படித்துள்ளேன் படித்தவை ஓவ்வொன்றும் படிப்போருக்கு அரிய பாடங்களை கற்பிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதில் சற்றும் மாறுபடவில்லை இந்த சில்லறை சப்தங்களும்.
உதாரணத்திற்கு ஒரு சில கவிதைகளை மட்டுமிங்கே மேற்கோள் காட்ட எண்ணுகிறேன். உடைந்த முகங்கள் எனுமொரு கவிதையில் –
//பேராசை சுயநலம் பொறாமை
இம் மூன்றையும் அன்பு என்ற
மூன்று எழுத்தினால் அடிமை படுத்தி விட்டால்;
வீடு மாத்திரமல்ல –
நாடே சுபேட்சம் பெற முடியும்// என்கிற வலிய கருத்தை எளிய வரிகளில் வடித்திருக்கிறார்.
ஜன்னலோர கம்பிகள் எனும் கவிதை இளஞர்களின் அவசர முடிவினையும், முதுமையின் வலியையும் வாழ்க்கையின் யதார்த்தத்தையும் உணர வைத்த உயிரோட்டம் நிறைந்த கவிதையாகும்.
உன் கல்லறையில் பூத்த புற்கள் எனும் கவிதையில் -
//கண்ணீரில் நனைந்த கல்லறையில்
உன்னை பிரிந்த சோகமே புற்களாய் பூத்திருக்க,
எனக்குள் இறவாத உன்
உயிர் கொண்டு தானே மெல்ல மெல்ல உயிர் துறக்கிறேன்// என்று காதலின் உள்ளம் கசியும் கண்ணீர் வரிகளை எத்தணை வலிமையாக பதிவு செய்திருக்கிறார்.
பெண்களின் இதயம் தைக்கும் இரும்புசிகள்' என்றொரு கவிதை. இந்தக் கவிதையினை கண்டிப்பாக பெண்கள் மட்டுமல்ல எல்லோருமே மிக கவனத்தோடு ஒவ்வொரு வரியாக உணர்ந்து படிக்கக் கேட்கிறேன். காரணம், உலகின் மொத்த பெண்களின் அவஸ்தையில் ஒன்றேனும் இக்கவிதையில் நிச்சயமாக இருக்கவே செய்யும்.
//பிறந்தவுடன் சலிப்பு!
வளர்ந்த உடன் மொட்டையடிப்பு!
வளரும்போதே சிறகருப்பு!
மலர்ந்ததும் விழா எடுப்பு!
நடக்கும் இடமெல்லாம் காம பார்வை முள் பதிப்பு!
பின்பும், முட்டி மோதி படிக்க செல்லவே
ஆயிரம் பல தடுப்பு// அப்பப்பா..... இவருக்கு தான் எத்தணை பரிதவிப்பு...." என பிரம்மிக்கும் அளவிற்கு ஒரு பெண்ணாகவே உருவெடுத்து எம் உணர்வுகளை வார்த்தைகளாக்கி, அதன் வலியையே கவிதையாக பிரசவித்திருகிறார் வித்யாசாகர்!
இப்படி இப்புத்தகமெங்கும் பெருமையாகவே பேசிச் செல்ல நீளும் கவிதைகளும், உள்ளத்தை பொங்குவிக்கும் உணர்வு பெட்டகமுமே இச் 'சில்லறை சப்தங்கள்' என்றால் அது மிகையில்லை.
என்றாலும், என் பங்கினை மனம் நிறைந்த அன்போடும் வாழ்த்துக்களோடும் மட்டுமிங்கே முடித்துக் கொண்டு, மொத்தத்தில் சில்லறை சப்தத்தின் சுகமான ராகதிற்குள் என் சுமைகளை இறக்கிவைத்த நிறைவோடு, மௌனத்தின் ஆழத்தில் முடியாத இவரின் படைப்புக்களை அசை போட்டவளாய் விடைகொள்கிறேன்.
நன்றிகளுடன்..
இவள்
கவிதாயினி ராணிமோகன்
சனி, 23 ஜூலை, 2011
தன் முன்னேற்றப் பயில் அரங்கு
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற தன் முன்னேற்றப் பயில் அரங்கிற்கு வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .வாசகர்வட்டத்தின் தலைவர் எ .எஸ் .ராஜராஜன் வரவேற்றார் ..ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .பேராசிரியர் ஞானகுரு தன் முனேற்றப் பயிற்சி அளித்தார் .வாசகர் வட்டத்தினர் பலர் கலந்து கொண்டனர் .
வெள்ளி, 22 ஜூலை, 2011
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மெய்ப்பித்தனர்
பேராசைப் பெருநஷ்டம்
அரசியல்வாதிகள்
கோடிகள் கொள்ளை
கேடியாக இருந்து
கம்பி எண்ணுகிறான்
அசைவம் அணியலாமா ?
சைவம் என்றாயே
பட்டுச்சேலை
பட்டுச்சேலையைவிட
பருத்திச்சேலையே
அவளுக்கு அழகு
காந்தியடிகளுக்கு அவமரியாதை
இன்றும் தொடர்கின்றது
கிராமங்களில் தீண்டாமை
கணினி யுகத்தில் களங்கம்
கிராமங்களில்
தீண்டாமை
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
வியாழன், 21 ஜூலை, 2011
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கவிஞர் இரா .இரவி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கவிஞர் இரா .இரவி
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ
தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ
பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ
பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ
நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவன் நீ
நல்ல வசன உச்சரிப்பைப் புகுத்தியவன் நீ
நாடகத்தில் நடித்துப் பயின்றுத் திரைப்படம் வந்தவன் நீ
திரைப்படத்தில் நடித்து வாழ்க்கையில் நடிக்காதவன் நீ
கூட்டுக்குடும்பப் பெருமையைக் கட்டிக் காத்தவன் நீ
குடும்பத்தின் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தியவன் நீ
அன்பில் பலரை வென்று அரசியலில் தோற்றவன் நீ
நடிப்பில் நிலையாக நின்றுதிரை உலகில் வென்றவன் நீ
ஒன்பதுப் பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டியவன் நீ
ஒன்பது மணி என்றால் எட்டு முப்பதுக்கே இருந்தவன் நீ
தாமதத்தை என்றும் வெறுத்துத் தவிர்த்தவன் நீ
சமாதானத்தை என்றும் எப்பொதும் விரும்பியவன் நீ
போலிப் பிம்பங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் நீ
பாத்திரங்கள் எதுவென்றாலும் ஏற்று நடித்தவன் நீ
முகபாவத்தில் நாதஸ்வர வித்துவான்களையே வென்றவன் நீ
முகம் முதல் நகம் வரை நடிப்பைக் காட்டியவன் நீ
வீரபாண்டிய கட்டபொம்மனை அறிமுகம் செய்தவன் நீ
கப்பல் ஒட்டியத் தமிழனைக் கண் முன் நிறுத்தியவன் நீ
பகுத்தறிவுப் பகலவனிடம் சிவாஜிப் பட்டம் பெற்றவன் நீ
படிக்காதப் பாமரர்களுக்கும் தமிழ்க் கற்பித்த ஆசான் நீ
உணர்ந்தோம் கள்ள வாக்கு அளிப்போரின் திறனை
உனது வாக்கையே வாக்களித்துச் சென்றனர் அன்று
இந்திய தேசத்தில் உன்னைப் போல நடிகர் இல்லை
இந்தியாவோ உனக்கு தேசியவிருதை தரவே இல்லை
செவாலியர் விருதுத் தந்து அயல் நாடுப் பாராட்டியது உன்னை
செந்தமிழனின் திறமையை உலகிற்கு பறை சாற்றியவன் நீ
--
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
புதன், 20 ஜூலை, 2011
படைப்பாளர்களுக்கு பயற்சி முகாம் நடந்தது
மதுரை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் இளமைக் கனல் இளம் படைப்பாளர்களுக்கு
பயற்சி முகாம் நடந்தது .கவிஞர் இரா .இரவி மாணவர்களுக்கு படைப்பாற்றல்
பயிற்சி அளித்தார் .தமிழ்நாடு முழுவதிலும் படைப்பாற்றல் ஆர்வம் உள்ள
மாணவர்ககள் கலந்துக் கொண்டனர் .கவிஞர் சந்திரன், அருட்த் தந்தை ஜோ
.சேவியர் பயிற்சிசிக்கு ஏற்பாடு செய்தனர்
தெய்வத்திருமகள் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நடிப்பு சீயான் டாக்டர் விக்ரம்
இயக்கம் திரு விஜய்
விமர்சனம் கவிஞர் இரா .இரவி
இந்தப்படத்திற்கு தெய்வத்திருமகன் என்று முதலில் பெயர் சூட்டப்பட்டு
,வழக்குத் தொடுக்கப்பட்டு பின் தெய்வத்திருமகள் என்று பெயர்
மாற்றப்பட்டது .ஒரே ஒரு எழுத்தை மட்டும் மாற்றினாலும் அதுவும்
படத்திற்குப் பொருத்தமாகவே உள்ளது .
இந்தப்படத்திற்காக இயக்குனர் விஜய் ,நடிகர் விக்ரம் ,நிலவாக நடித்துள்ள
குழந்தை மூவருக்கும் தேசியவிருது உறுதியாக உண்டு .
விக்ரம் மன நலம் குன்றிய கிருஷ்ணாவாக நடிக்கவில்லை வாழ்ந்து உள்ளார் .
மன நலம் குன்றியவர்களிடம் காட்ட வேண்டிய மனித நேயத்தை உணர்த்திடும் படம்
.அன்பே வாழ்க்கை அறிவுறுத்தும் அற்புதமான படம்.குடும்பத்துடன் பார்க்க
வேண்டிய படம் .குறிப்பாக இன்றைய இளைய தலைமுறை அவசியம் பார்க்க வேண்டிய
படம் .தரமான படம் வந்து நாட்கள் ஆகிவிட்டது
வெட்டுக்குத்து ,குத்துப்பாட்டு என்ற இன்றைய வழக்கமான திரைப்படங்களில்
இருந்து மாறுபட்ட சிறந்த படம் .மன நலம்குன்றியவர்கள் மிகச் சரியாக சில
விசயங்களில் உள்ளனர் என்பதை பல காட்சிகளில் படம் முழுவதும் உணர்த்தியுள்ள
இயக்குனர் விஜயுக்குப் பாராட்டுக்கள்.
மிக நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் ..குஞ்சுப் பறவையைப் பூனை தின்னப்
பார்க்கும் .பூனையை விரட்டிவிட்டு குஞ்சுப் பறவையை எடுத்து அது இருந்த
மரத்தின் மீது ஏறிச் சென்று கூ ட்டில் வைத்து விட்டு வரும் கிருஷ்ணாவின்
மூலம் ,மன நலம்குன்றியவர்களின் பறவை நேசத்தை உணர்த்துகின்றார் .பொய் பேச
மாட்டார்கள் .பேசச் சொன்னாலும் மறுப்பார்கள் .அவசரச் சூழ்நிலை காரணமாக
வழக்கு உரைஞர் சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடந்து வர
வற்புறுத்தும் போது வராமல் நின்று பச்சை விளக்கு வந்த பின் வரும்
கிருஷ்ணாவின் மூலம் ,தவறுப் புரியும் சராசரி மனிதர்களின் கன்னத்தில்
அரைகிறார் இயக்குனர் விஜய் .
கிருஷ்ணாவை அடித்து வைத்து இருக்கும் வழக்கு உரைஞர் குழந்தைக்குக்
காய்ச்சல் இருப்பதுக் கண்டு மருந்து வாங்கி வரும் மனிதநேயம் .மன
நலம்குன்றிய கிருஷ்ணாவிடம் இருந்து பணத்தை திருடி விட்டு ஓடிய திருடன்
வலைத் தட்டிக் கிழே விழுந்ததும் வலையை எடுத்துவிட்டு துக்கி விடுவது
கண்டு திருந்தி திருடனே பணத்தைத் திருப்பித் தரும் காட்சி நெகிழ்ச்சி
.சாலையில் வரும் போது தெருவில் குழாயில் வீணாகக் போகும் தண்ணீரை மூடி சரி
செய்வது ,இப்படி பல காட்சிகள் சொல்லிக் கொண்டேப் போகலாம் .
மன நலம்குன்றியவர்கள் கூட சரியாக வாழும் போது .மன நலம் குன்றாதவர்கள்
சரியாக வாழுங்கள் என்று உணர்த்திடும் உன்னதத் திரைப்படம் .பணக்காரகளில்
பலர் மனதநேயம் இன்றி உள்ளனர் என்பதைப் பறை சாற்றிடும் படம் .செல்வந்தரின்
முதல் மகள் திருமணம் வேண்டாம் என்று சமூக சேவகியாக வாழ்ந்தவர் மன
நலம்குன்றிய கிருஷ்ணாவை மணக்க செல்வந்தர் எதிர்க்க வெளியே வந்து
விடுகிறாள் .நிலா என்றப் பெண் குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்து
போகின்றாள் .கிருஷ்ணா அன்பைப் பொழிந்து நிலாவை
வளர்க்கின்றார்.பலவருடங்கள் கழித்து நிலாவை பார்த்த செல்வந்தர்
கிருஷ்ணாவிடம் இருந்து நிலாவைப் பிரிக்கிறார் .பாசப் போராட்டம் ஓவியமாக
மனதில் பதிகின்றது .
நடிகை அனுஷ்காவை ஆபசமாகவேக் காட்டி வந்த இயக்குனர்களின் கன்னத்தில்
அரையும் வண்ணம்அனுஷ்கா. வழக்கு உரைஞராக மிகச் சிறப்பாக நடித்து உள்ளார்
.அனுஷ்காவிற்கு மனித நேயம் மிக்க நல்ல பாத்திரம் .பெண்மையின் மேன்மையை,
திறமையை உணர்த்தும் பாத்திரம்.
கிருஷ்ணா நிலாவிற்கு சூ,சாக்ஸ் வாங்கக் கடைக்கு சென்றபோது பணம் குறைவாக
இருப்பதால் கடைக்காரர் தர மறுக்க ,அருகில் இருந்த மன நலம் குன்றிய
கிருஷ்ணா நண்பர்கள் பணம் கொடுத்து உதவிடும் காட்சி நெகிழ்ச்சி .
நடிகர் நாசர் சிறந்த நடிகர் என்பதை நிருபித்து உள்ளார் .தெய்வத்திருமகள்
திரைப்படம் அல்ல இயந்திர மயமான மனிதர்களுக்கு பாடம் .இது போன்ற நல்ல
படத்தை வெற்றிப் பெறச் செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு .விக்ரம்
மிக சிறந்த நடிகர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார்
.பாராட்டுக்கள் .
படைப்பாளர்களுக்கு பயற்சி முகாம் நடந்தது
பயற்சி முகாம் நடந்தது .கவிஞர் இரா .இரவி மாணவர்களுக்கு படைப்பாற்றல்
பயிற்சி அளித்தார் .தமிழ்நாடு முழுவதிலும் படைப்பாற்றல் ஆர்வம் உள்ள
மாணவர்ககள் கலந்துக் கொண்டனர் .கவிஞர் சந்திரன், அருட்த் தந்தை ஜோ
.சேவியர் பயிற்சிசிக்கு ஏற்பாடு செய்தனர்
செவ்வாய், 19 ஜூலை, 2011
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
அரசியல்வாதிகளின்
கால் பந்தானது
கல்வி
வேதனையில்
தமிழ் அன்னை
தமிங்கிலம்
பறவையின் எச்சத்தால்
வளர்ந்தது உச்சம்
மரம்
உழவனுக்கு
உதவமுடியா மண்புழு
பாலித்தீன் பைகள்
மரத்தை வெட்டி
எரித்த விறகு
அழவைத்தது
அவமானச்சின்னங்கள்
இந்தியாவிற்கு
முதியோர் இல்லங்கள்
காண முடியவில்லை
குருவிக்கூடு
குருவி
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
திங்கள், 18 ஜூலை, 2011
கவிஞர் இரா .இரவி படைப்புகள் பிற இணையங்களில்

கவிஞர் இரா .இரவி படைப்புகள் பிற இணையங்களில்
http://eluthu.com/user/index.
http://tamilparks.50webs.com/
http://www.lankasripoems.com/?
http://www.tamilvishai.com/
http://www.thannambikkai.net/
http://meenakam.com/tag/%E0%
http://www.adhikaalai.com/
http://www.eelakkural.com/
http://www.vaarppu.com/poet/
http://www.noolulagam.com/
http://www.ikavithai.com/
http://www.globalpeacesupport.
http://www.koodal.com/poem/
http://www.viruba.com/
ஞாயிறு, 17 ஜூலை, 2011
என்னவளே கவிஞனுக்கு கற்பனையே அழகு கவிஞர் இரா .இரவி
கவிஞர் இரா .இரவி
உனக்காக எழுதிய கவிதைகளை
நூலாக்கினேன் .
கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம்
கொடுத்து மகிழ்கின்றேன் .
படித்த பலரும் பாராட்டினார்கள் .
தொலைக்காட்சிகளிலும்
வலம் வந்தது என் கவிதைகள்
விமர்சனம் செய்தார்கள்
பாராட்ட வேண்டிய நீயோ
அருகில் இல்லை
படிக்க வேண்டிய நீயோ
கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
கடைகளிலும் என் நூல்கள்
கிடைக்கும்
கண்ணில் பட்டால்
வாங்கிப் படிப்பாய்
நம்பிக்கை உண்டு
படித்துவிட்டுக்
கருத்துச் சொல்லமாட்டாய்
நிருபர்களின் சிக்கலான
கேள்விக்கு பதில் சொல்லாத
அரசியல்வாதிபோல
இருந்துவிடுவாய்
உன் மனம் நான் அறிவேன்
சொல்லாவிட்டாலும்
சொன்னதாக நினைத்துக் கொள்வேன்
கவிஞனுக்குக் கற்பனையே அழகு
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
சிபி டிரஸ்ட் விழா
16.7.2011 அன்று மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் சிபி பவுண்டேசன் சார்பாக எழை ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச நோட்டுகள் ,பரிசுகள் வழங்கப்பட்டது .மகளிர் திட்டம் சார்பாக நடத்தப்பட்ட பயிற்சிகளுக்கான சான்றிதழ்வழக்கப்பட்டது சிபி இயக்குனர் எ .எஸ் .ராஜராஜன் தலைமை வகித்தார் கவிஞர் இரா .இரவி சான்றிதழ் வழங்கிச் சிறப்புரையாற்றினார் .கணேஷ் சந்தர் வாழ்த்துரை வழங்கினார் சோலை டிரஸ்ட் எம் .சுமதி ,லேஜியோ டிரஸ்ட் எம் ஸ்டெல்லா கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் .
சனி, 16 ஜூலை, 2011
ஹைக்கூ ஆற்றுப்படை நூல் விமர்சனம் முனைவர் , பேராசிரியர் இராம .குருநாதன்
ஹைக்கூ ஆற்றுப்படை
நூல் விமர்சனம் முனைவர் , பேராசிரியர் இராம .குருநாதன்
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி
ஹைக்கூ வடிவக் கவிதை வளர்ச்சி மலரும் புலர் பொழுதுகளில் இருந்து விடுபட்டு மெலிந்து போய்விட்ட உணர்வு இருந்து வருகிறது .அந்தக் கவலை நீங்கும் நாள் எந்நாளோ என்று நினைக்கையில் ஊட்டச்சத்தாக வெளிவந்து இருப்பது கவிஞர் இரா .இரவி எழுதியுள்ள
ஹைக்கூ ஆற்றுப்படை என்னும் நூலாகும் .ஒரு படைப்பாளியை இன்னோரு படைப்பாளி நன்கு அறிந்து கொள்வது இயல்புதானே .ஹைக்கூ கவிஞரான கவிஞர் இரா .இரவி தன்னொத்த ஹைக்கூக் கவிஞர்களின் படைப்புகளைத் திறம்பட திறனாய்வு செய்துள்ளார் .
கவிஞர் ஒவ்வொரு நாளையும் கூர்ந்தறிந்து தமக்கே உரிய பாணியில்
மதிப்பீடு செய்துள்ளார்.படைப்பாளிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில் தம் கண்ணோட்டங்களை நடுநிலையோடு திறனாய்கிறார்.படைப்பாளி ஒரு நல்ல சுவைஞனாக இருக்கும் நிலையில் இது சாத்தியமே .கவிஞர் இரா .இரவிதாம் படித்துச் சுவைத்திருக்கும் நூல்களில் இருந்து திரட்டித் தந்துள்ள பாடல்களும் ,அவற்றின் மீதான கருத்தோட்டங்களும் அவர் நுனிப்புல் மேய்பவர் அல்லர்என்பதனை நிலைநாட்டும் .அவர் நுணுகி ஆய்ந்து சுவைத்த ஹைக்கூ மேற்கோள்கள் அனைவரையும் ஈர்க்கச் செய்யும் .ஹைக்கூ என்றால் என்ன என்பதனை எளிமையான விளக்கத்தால் சொல்லி அதற்கானஎடுத்துக்காட்டைச் சுவைபடத் தந்துள்ளதைப் பலவாறு புகழ்ந்துரைக்கலாம் .அமுதபாரதியின் ஹைகூகளைப் பற்றிச் சுருக்கமாகத் தொடக்கத்திலேயே குற்றால் அருவியில் குளித்து முடித்த இன்பம் கிடைக்கிறது .என்று சொல்லி நூலில் நுழையச் செய்கிறார் .கவிஞர் மு .முருகேஷ் எழுதிய நிலா முத்தம் என்னும் நூலினைச் சுவைத்த கவிஞர்,முழு நிலவு நாளன்று அமைதியாகத் தனிமையில் நிலவை ரசித்த இன்பத்தைத் தருகின்றதுஎன்று எழுதியுள்ளமை மு .முருகேஷ் கவிதைகளைப் படிக்கத் தூண்டும்.
இன்றைய சூழ்நிலையில் இயற்கையை இரசிக்க மனிதனுக்கு நேரம் இல்லாது போய் விட்டது .அதனை ஹைக்கூவிலாவது ரசிக்கலாமே என்ற தம் ஆதங்கத்தையும் ,ஆர்வத்தையும் சிபி எழுதியுள்ள மகரந்த ரகசியங்கள் என்ற நூலிற்கான மதிப்பீட்டை அழகுற மொழிந்து உள்ளதை ஏற்கும் அதே வேளையில் அந்த நூலாசிரியருக்கு ஒரு வேண்டுகோளையும் வைக்கிறார் .இன்வரும் காலங்களில் பட்டாம்
பூச்சி ,பனித்துளி தவிர்த்துப் பாடுங்கள் .நீங்களே நிறைவாகப் பாடி உள்ளீர்கள் .என்று கூறி இருப்பது ,அன்பின் பொருட்டே ,அது கூறியதாகாது . இயற்கைக் காட்சிகள் ஊடே வாழ்வியலை வடித்து வட்டிலில் வடிவதை
சிமிழுக்குள் செதுக்கும் வித்தையோடுமட்டும் விளங்கி நிற்பதில்லை இன்றைய ஹைக்கூப் பாடுபொருள்ஹைக்கூ இன்றைய நடப்பு நிலைகளையும் எடுத்துக் காட்டப் பயன் படுகிறது .ஹைக்கூ வடிவம் அதற்கும் அடிபணிந்துள்ளது .குறிஞ்சி பூக்கள் என்னும் வீ .தங்கராசுவின் கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இன்றைய நடப்பைச் சித்தரிக்கும் ஒரு ஹைக்கூ கவிஞர் இரவியால் அடையாளப் படுத்தப் பட்டுள்ளது .இது அந்த ஹைக்கூ .
தேர்தல் கமிசன் பெயரே சரியில்லை
தேர்தலுக்குப் பின் எல்லாமே
கமிசன் மயம்
இது வருவது உரைத்தலா ? வந்தது உரைத்தலா ? என்னும் அளவிற்கு இன்றிய நடப்பினைக் காட்டுகிறது .பரிமளம் சுந்தரின் ஆய்வேடான ஜப்பானிய -தமிழ் ஹைக்கூக் கவிதைகள் ஓர் ஒப்பாய்வு என்ற நூல் பற்றிய இரவியின் கருத்துக்கள் சரியான மதிப்பீடாகத் திகழ்கிறது .
ஹைக்கூ பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்குரிய செய்தியாக அவர் கூறி இருக்கும் கருத்தான ,ஹைக்கூ பற்றி குறைவான மதிப்பிடு உள்ளவர்கள் இந்நூலைப் படித்தால் மாறுவது உறுதி .என்று ஹைகுப் பற்றி மாறான கருத்துக் கொண்டோரை வசை பாடாமல் கனிவோடு கடிதோச்சும் பண்பினைக் கவிஞர் இரா .இரவி வசம் காண்கிறோம் .
கவிஞர் நாணற் காடனின் கவிதைத் தொகுப்பை கவிஞர் படித்ததும் எழுதுகிறார் .கடுகு சிறியதுதான் காரம் பெரிது .அது போல ஹைக்கூ வடிவம் சிறியதுதான்.அனால் தாக்கம் பெரிது .என்று சுட்டி இருப்பது ஹைக்கூ பற்றிய எளிய விளக்கம் .ம .ஞானசேகரனின் இரு ஹைக்கூ நூல்களை ரசித்து எழுதியுள்ள கருத்துக்கள் இனிமை .அருமை .தமிழ்மணி ,விநாயமூர்த்தி ,கவிமுகில் ,வசீகரன், கன்னிக்கோயில் ராஜா,தமிழ்நெஞ்சன்,அமரன் ஆகியோரது ஹைக்கூக் கவிதைகளில் மனம் பதித்துக் கவிஞர் இரா .இரவி உளந்தோய எழுதி உள்ள கருத்துக்கள் .அவர் ஒரு படைப்பாளி மட்டும் அல்ல ,நல்ல திறன் ஆய்வாளர் என்பதனை மெய்பிக்கும் .அதனை எண்ணிப் பெருமிதம் அடையலாம் .அந்த அளவிற்கு அவரது ஹைக்கூக் குறித்த மதிப்பீடுகள்நூலை உயர்த்துவன .பலரிடம் கொண்டு செல்லும் தூதுவனாக விளங்குவன .
ஆற்றுப்படை என்பதன் இலக்கணமே தாம் பெற்றதை அடித்தவருக்கு எடுத்துச் சொல்லி அவரும் தக்கவாறு பயன் கொள்ளச் செய்வதுதான் என்பதற்கு எடுத்துக்காட்டாக நூலின் தலைப்பினைத் தெரிவு செய்து இருப்பது போற்றுதற்குரியது
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
வெள்ளி, 15 ஜூலை, 2011
படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது
தீவிரவாதிகள் ந .பாலாஜி GRT
சமூகத்தில் நாசக் கிருமிகள்
சாத்தானின் போர் வீரர்கள்
தீவிரவாதிகள்
மதத்தின் போர்வையில்
ஊடுருவி இருப்பவர்கள்
தீவிரவாதிகள்
அறிவு அன்பு காதல் பாசம்
இவை அனைத்தும் துறந்தவன்
துறவி அல்ல பின் ?
தீவிரவாதி
தீண்டாமை ஒழிக்க நினைக்கும் அரசு
ஒழிக்க வேண்டும்
தீவிரவாதம்
மொழி மீதுப் பற்றுக்
கொண்டவன் கவிஞன்
பெண் மீதுப் பற்றுக்
கொண்டவன் காதலன்
மதத்தின் மீது ஈர்ப்புக்
கொண்டவன் தீவிரவாதி
வேண்டாம் என்று சொன்னாலும்
தள்ளிப் போட நினைத்தாலும்
வருவது மரணம்
கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் படைப்புகள்

கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் படைப்புகள்
http://denaldrobert.blogspot.
வியாழன், 14 ஜூலை, 2011
உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் இரவீந்திரநாத் தாகூர் கவிஞர் இரா .இரவி

உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் இரவீந்திரநாத் தாகூர் கவிஞர்
இரா .இரவி
கீதாஞ்சலி மூலம் கவிதாஞ்சலி வழங்கிய தாகூர்
கவிஞர்களின் இலக்கணமாக வாழ்ந்துக் காட்டியவர் தாகூர்
நோபல் பரிசுக்கே நோபல் பரிசுத் தந்தவர் தாகூர்
நோபல் பரிசின் மதிப்பை உயர்த்தியவர் தாகூர்
புகழை வெறுத்த முதல்க் கவிஞர் தாகூர்
போரை வெறுத்த இரண்டாம் புத்தர் தாகூர்
தாடியைக் கண்டதும் அனைவரின் நினைவுக்குத் தாகூர்
தந்தை பெரியார் அடுத்து நினைவிற்கு வருவார்
டயர் என்ற ராணுவ அதிகாரியின் காட்டு மிராண்டித் தனத்திற்காக
சர் பட்டத்தையும் சர் என்று தூக்கி எறிந்துக் கண்டித்தவர் தாகூர்
காந்தியடிகளுடன் மாணவர்கள் ஒத்துழையாமையில் வேறுபட்டாலும்
காந்தியடிகளின் நெறிக் கண்டு மகாத்மா பட்டம் தந்தவர் தாகூர்
தேவேந்திரநாத் தாகூரின் மகனாகப் பிறந்தார் தாகூர்
பதினான்காம் குழந்தையாகக் கடைசியாகப் பிறந்தார் தாகூர்
குழந்தையில் கதைகள் பலக் கேட்டு அறிவு வளர்த்து
குவளயத்தில் நாவலும் நாடகமும் கவிதையும் வடித்தவர்
கவிஞர் ஓவியர் நடிகர் எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றலோடு
கவிதைகளில் மட்டும் தனிப்பெரும் முத்திரைப் பதித்தவர்
இயற்கையை நேசிப்பதில் இயற்கையோடு ஒன்றானவர்
இந்தியாவின் பெருமைகளில் ஒன்றானவர் தாகூர்
குழந்தைப் பருவத்தில் பள்ளியைச் சிறையாக நினைத்தவர்
குழந்தைகளைக் குழந்தைகளாக வாழ விடுங்கள் குரல் தந்தவர்
மாலைப் பாடல்கள் எனும் முதல் நூலின் மூலம்
மலை என கவிதை மாமலை என உயர்ந்த கவிஞர் தாகூர்
வங்கத்து நாவல் எழுத்தாளர் பக்கிம் சந்திர சட்டர்ஜியிடம்
வாழ்த்தும் பாராட்டு மழையும் மலர் மாலையும் பெற்றவர்
ஆடம்பரத்தை என்றும் விரும்பாத எளிமையின் சின்னம்
அன்பு நெறியை அகிலத்திற்கு உணர்த்திய நல் அன்னம்
தாய்மொழிப் பற்று மிக்கவராகத் திகழ்ந்தவர் தாகூர்
ஆங்கில மோகம் அகற்றுக அன்றே உரைத்தவர் தாகூர்
சிலை வழிபாடு வேண்டாம் என்று சொன்னவர் தாகூர்
சக மதங்களைச் சாடுவது தவறு கூறியவர் தாகூர்
விலங்குகள் பறவைகள் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்காதீர்
வனங்களையும் மரங்களையும் ரசிக்க வைத்தவர் தாகூர்
பிற நாட்டின் மீது பகை வளர்க்கும் தேசபக்தி
பிற்போக்குத்தனமானது என்று சாடியவர் தாகூர்
மூடப் பழக்கங்களை வெறுத்துப் பகுத்தறிவை நாடியவர்
மூச்சாகத் தாய் மொழியை நேசிக்கச் செய்தவர்
ஆங்கிலம் இத்தாலி எனப் பன்னாட்டு மொழிகளில்
அகிலம் முழுவதும் பரவியது தாகூரின் படைப்பு
அயல்நாடுகளில் இந்தியாவிலிருந்து வருகிறோம் என்றால்
அற்புதக் கவிஞர் தாகூர் நாட்டிலிருந்து வருகிறீர்களா? என்றனர்
உடலால் இவ்வுலகை விட்டு மறைந்திட்ட போதும்
உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் தாகூர்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
மூளைச்சலவையால்
மூளை இழந்தவர்கள்
தீவிரவாதிகள்
விலங்குகளை விடக்
கீழானவர்கள்
தீவிரவாதிகள்
உயிர்களை அழிக்கும்
கொடூரன்களே
உருவாக்க முடியுமா ?
மதி இழந்ததால்
மதச் சார்பற்ற நாட்டில்
மதக்கொலைகள்
அறிவிழந்த
மத வெறியால்
அப்பாவி மக்கள் பலி
வாழ்ந்தவர்களை விட
வீழ்ந்தவர்களே அதிகம்
மதத்தால்
மதம் அபீன் என்றார் லெனின்
மதம் புரட்டு என்றார் பெரியார்
மெய்யானது இன்று
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!
புதன், 13 ஜூலை, 2011
இலக்கிய இமயம் மு .வரதராசனார் கவிஞர் இரா .இரவி

இலக்கிய இமயம் மு .வரதராசனார் கவிஞர் இரா .இரவி
அம்மாக்கண்ணு பெற்றெடுத்த செல்லக்கண்ணு மு. வ
முனுசாமியின் பெயர் சொல்லும் பிள்ளை மு. வ
திருவேங்கடம் என்பது இயற்பெயர்
தாத்தாவின் பெயரான வரதராசன் நிலைத்த் பெயர்
எழுத்தராகப் பணித் தொடங்கி உயர்ந்த
துணைவேந்தராகப் பணி முடித்த முதல்வர்
எழுத்தர் ஆசிரியர் விரிவுரையாளர் துணைப் பேராசிரியர்
துறைத் தலைவர் துணைவேந்தர் படிப்படியாக உயர்ந்தவர்
இழப்பைக் கண்டு என்றுமே வருந்தாதவர்
உழைப்பின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர்
சென்னைப் பல்கலைக் கழகத்தில் அன்றே
செந்தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல்வர்
அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் நன்றே
மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற முதல்வர்
உலக நாடுகள் பல கண்ட தமிழ் அறிஞர்
இந்திய மொழிகள் பல அறிந்த பண்டிதர்
இந்தியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில்
இனிய நட்பும் தொடர்பும் கொண்டவல்லவர்
பன்னாட்டுப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றில்
பண்பான உதவிகள் புரிந்த நல்லவர்
சிறுகதை நாவல் கட்டுரை என இவர்
செதுக்கியதில் ஈடு இணையற்ற இலக்கிய சிற்பி
மனதில் பூத்த கருத்துக்களைத் தொகுத்து
முதல் நாவலாக செந்தாமரை தந்த எழுத்தாளர்
கள்ளோ காவியமோ இரண்டாம் நாவல் மூலம்
கள்வரென அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தவர்
புன்னகை அணிந்திருக்கும் பூ முகம் பெற்றவர்
புத்திக் கூர்மையால் சுடர் முகம் கொண்டவர்
அறுபத்தி இரண்டு வயதில் காலத்தால் அழியாத
எண்பத்தி அய்ந்து நூல்கள் எழுதிய சகலகலா வல்லவர்
மாநிலத்தில் முதல் மாணவனாகப் புலவர் பட்டம் பெற்றவர்
மக்கள் மனங்களில் நூற்றாண்டு கடந்தும் நின்றவர்
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் கவிஞர் இரா .இரவி

அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் கவிஞர் இரா .இரவி
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்
குடித்திட்டால் அறிஞன் இல்லை உணர்ந்திடுவாய்
குடி குடியைக் கெடுக்கும் அத்தோடு
உந்தன் உயிரையும் குடிக்கும்
பீரில் ஆரம்பித்து பிராந்தியில் முடிக்கிறாய்
வாந்தி எடுத்து அவமானப்பட்டு தவிக்கிறாய்
இலவசமாகக் கிடைத்தாலும் என்றும் குடிக்காதே
தன் வசம் இழந்து பின் அல்லல் படாதே
குடிப்பது நாகரீகம் மடையன் சொன்னது
குடிப்பது அநாகரீகம் நான் சொல்கிறேன்
இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டும்
கொடியக் குடிப் பழக்கத்தாலா? வர வேண்டும்
போதையால் உன் வாழ்க்கைப்பாதைத் தவறாகும்
பாதை தவறினால் வசந்த வாழ்க்கை வீணாகும்
குடிக்கும் நண்பனைத் திருத்துவதுதான் நட்பு
கூடக் குடித்துக் கும்மாளமிடுவது தப்பு
மதுவால் மடையனாக நீ மாறிடுவாய்
மரியாதை இழந்து அவதிப்படுவாய்
பணத்தோடு நல்ல குணத்தையும் இழப்பாய்
சினத்தோடு குற்றம் புரிந்து தண்டனை பெறுவாய்
குடும்பத்தின் மொத்த நிம்மதியை அழிப்பாய்
குழந்தைகளின் ஒப்பற்றப் பாசத்தை இழப்பாய்
மதுவால் மனிதநேயம் மறப்பாய்
மதி மயங்கி விலங்காக மாறுவாய்
சிறப்புகள் இருந்தும் சிதைக்கப்படுவாய்
சிறிது குடித்தாலும் சீரழிந்துப் போவாய்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
செவ்வாய், 12 ஜூலை, 2011
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.
சனி, 9 ஜூலை, 2011
UK Tamil News (தமிழ்): கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்க...
இன வெறியர் ராசபட்சேயை கூண்டில் ஏற்றக் கோரி மதுரை மாவட்ட மகளிர் ஆயம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது .
இன வெறியர் ராசபட்சேயை கூண்டில் ஏற்றக் கோரி மதுரை மாவட்ட மகளிர் ஆயம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது .கவிஞர் இரா .இரவி கலந்து கொண்டார் .
வெள்ளி, 8 ஜூலை, 2011
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
நானே பெரியவன்
நினைக்கும்போதே
மிகச் சிறியவனாவாய்
சிந்திச் சென்றது
குப்பையோடு மணத்தையும்
குப்பைவண்டி
காசாக்கலாம்
குப்பையையும்
பெயர் எடுத்துவிட்டால்
மணத்தோடு அவள் மனமும்
பரப்பியது
மலர்ந்த மலர்
ஒளிப் பாய்ச்சியது
ஓடியது இருள்
விளக்கு
நீண்ட பிரிவிக்குபின்
சந்திப்பு
கூடுதல் இன்பம்
வெட்கப் பட வேண்டும்
வல்லரசுகள்
சோமாலியா சோகம்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
வியாழன், 7 ஜூலை, 2011
www.tamilauthors.com இணையத்தில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்

www.tamilauthors.com இணையத்தில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
http://www.tamilauthors.com/
புதன், 6 ஜூலை, 2011
செவ்வாய், 5 ஜூலை, 2011
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
கோடிகளும் லட்சங்களும்
கோயில்களின் உள்ளே
வெளியே பிச்சைக்காரர்கள்
தமிழர்களின் நெஞ்சில்
நீரு பூத்த நெருப்பு
முள்ளிவாய்க்கால் படுகொலைகள்
அன்று கர்மவீரர் காமராசருக்கு
இன்று சாராய வியாபாரிகளுக்கு
கல்வி வள்ளல் பட்டம்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
கவிஞர் இரா .இரவி Wall Photos
Wall Photos
http://www.orkut.co.in/Main#http://www.facebook.com/media/
படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது
மதுரையில் மகிழுந்தில் எழுதி இருந்தது
தெருவில் கண்டவளை நேசிப்பதை விட
கருவில் கொண்டவளை நேசி
கவிஞர் இரா.இரவி அவர்களின் கட்டுரை , நூல் மதிப்புரை படித்து மகிழுங்கள்
கவிஞர் இரா.இரவி அவர்களின் கட்டுரை , நூல் மதிப்புரை படித்து மகிழுங்கள்
https://groups.google.com/
திங்கள், 4 ஜூலை, 2011
சனி, 2 ஜூலை, 2011
காற்றுவெளி இதழ்: Open publication - Free publishing - More free
வெள்ளி, 1 ஜூலை, 2011
world38B-news: அன்னை கவிஞர் இரா .இரவி | Eraeravi's Blog
மதுரையில் பாரதி தேசியப் பேரவை சார்பில் கவியரசு கண்ணதாசன் விழா புகைப்படங்கள்
பாராட்டு

பண்புள்ள கவிக்கு வணக்கம்.இன்று தூத்துக்குடி -பன்னாட்டு வானொலி நிலையத்தில்
ஒலிபரப்பான படைப்பரங்கம் நிகழ்ச்சி கேட்டுணர்ந்தேன்.கண்ணதாசன் கவிதையில்
வனவாசம்-மனவாசம் தொடர் நன்று.ஜப்பானியர்- கவிதையில் இறுதி இருவரிகள்
'நச்'.பிறப்பு-இறப்பு ஹைக்கூக்கள் முரண்சுவையுடன் அமைக்கப்பட்டிருந்தவிதம் மனதை
ஈர்த்தது.பூக்காரி கவிதையில் கவியின் கவித்திறம் நன்று.அதிசயம் கவிதை நன்று.மழை
கவிதையோ மிக நன்று.
முனைவர் ச .சந்திரா
தமிழ்த் துறைத் தலைவர்
கலச லிங்கம் பல்கலைக் கழகம்
கிருஷ்ணன் கோயில்
மதுரை விமான நிலையம் வந்த புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்கள் ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுத்து வருவதற்கு கவிஞர் இரா .இரவி ,அப்துல்லா ,கணேசன் ஆகியோர் பாரா
மதுரை விமான நிலையம் வந்த புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்கள் ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுத்து வருவதற்கு கவிஞர் இரா .இரவி ,அப்துல்லா ,கணேசன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி
உடன் நிறுத்தியது
குழந்தையின் அழுகையை
பொம்மை
விசமாக இருந்தாலும்
அழகுதான்
அரளிப் பூவும்
கூறியது
வரலாறு
குட்டிச்சுவரு
உருவம் இன்றியே
தாலாட்டியது
தென்றல்
பிரிவினை விரும்பாதவள்
இணைந்தே இருக்கும்
இரு புருவமும்
பட்டப் பகலில்
கூவியது சேவல்
கணினிப் பொறியாளனுக்கு
இங்கு பெய்த மழை
அங்கு பெய்யவில்லை
இயற்கையின் அதிசயம்
அசிங்கம்தான்
அனைவருக்கும்
அந்தரங்கம்
உருப்படியான
ஒரே திட்டம்
நான்கு வழிச் சாலை
அனுமதிக்கவில்லை
ஊருக்குள்
காவல் அய்யனாரை
வருமானத்தைவிட
கழிவால் தீங்கு அதிகம்
ஆலைகள்
அழகைக் கூட்டியது
காதோரம் பறந்த
அவள் சிகை
இடித்த பின்னும்
பயன்பட்டது வீடு
நிலை சன்னல்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் செய்வோம் !!!!!
1.07.2011 இன்று 8.30 இரவு 8.30 மணி முதல்8.45 மணி வரை படைப்பரங்கத்தில் தூத்துக்குடி அகில இந்திய பன்னாட்டு வானொலியில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் வாசிக்கி

1.07.2011 இன்று 8.30 இரவு 8.30 மணி முதல்8.45 மணி வரை படைப்பரங்கத்தில் தூத்துக்குடி அகில இந்திய பன்னாட்டு வானொலியில் ,கவியரசு கண்ணதாசன் ,அன்னை தெரசா, இயற்கை நேசம் பற்றிய கவிதைகளும், பல்வேறு ஹைக்கூ கவிதைகளும் கவிஞர் இரா .இரவி வாசிக்கின்றார்.கேட்டு மகிழுங்கள்
