சனி, 30 அக்டோபர், 2010
திங்கள், 18 அக்டோபர், 2010
கரந்தடி மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் புதுமை சீனு தமிழ் மணி
நூலின் அட்டைப்பட ஓவியமே அசத்தலாக உள்ளது. நன்றி பெயர் பட்டியல் ஆசிரியரின் நன்றி உணர்வுக்கு எடுத்துக்காட்டு. கரந்தடி பற்றிய விளக்கம் நன்று. முதல் ஹைக்கூ மறைந்திருந்து அடிக்கும் அடியாக கரந்தடியாக உள்ளது.
மாந்த நேய எதிரிகளே
கரந்தடியா
துளிப்பா
நூலில் உள்ள நவீன ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. நூலின் தரத்தை மேலும் கூட்டும் விதமாக ஓவியங்கள் இன்றைக்கு காவிரி தண்ணீர் தர கர்நாடகா மறுப்பு, பெரியாறு நீர் மட்டம் உயர்த்த கேரளா எதிர்ப்பு, ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணைகட்ட முனைப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் உதாசீனப்படுத்தி விட்டு இந்திய ஒருமைப்பாட்டை கேலி கூத்தாக்கிவரும் அவலத்தை அற்புதமாக விளக்கிடும் அழகிய ஹைக்கூ
கண்ட இடங்களில் துப்பாதீர்கள்
இங்கே இங்கே துப்புங்கள்
ஒருமைப்பாடு பேசுவோர் முகம்
இடி மின்னலைப் போல அதிர்வுகளை ஏற்படுத்தும் ஹைக்கூகளின் அணிவரிசை கரந்தடி.இருபத்தி ஒறாம் நூற்றாண்டிலும் தீண்டாமை சுவர்கள் அதனை இடித்து விட்டால் போராட்டங்கள்.இவற்றை விளக்கும் மூலத்தின் மூலவேரை ஆட்டிப் பார்க்கும் அற்புத ஹைக்கூ.
தொட்டால் பார்த்தால் அண்டினால்
தீட்டு தீட்டு தீட்டு
தீட்டு கத்தியை
தமிழன் மிகவும் ஏமாளியாக எனக்கென்ன என்று இருக்கும் சோம்பேறியாக இருப்பதற்கு கண்டனத்தைப் பதிவு செய்யும் நல்ல ஹைக்கூ
மூன்று முறை முகத்தில் குத்தினால்
புத்தருக்கும் சினம் வரும்
வரவில்லை தமிழனுக்கு
கொடியது ஏழ்மை, பசி கொடிதிலும் கொடிது. பசியோடு இருக்கும் போது ரசனைக்கும் வேலை இல்லை என்பதை பறைசாற்றிடும் ஹைக்கூ
சுவைக்கவில்லை
குயில் பாட்டு
பசி
நம் நாட்டில் குடியிருக்க அம்பானிகள் கோடிக்கணக்கில் வீடு கட்டுவதும், நடைபாதையில் கூட படுக்க வழியின்றி விரட்டியடிக்கப்படும் ஏழைகள் நிரம்பி வழிவதும்,
இந்த முருண்பாட்டை சுட்டிக் காட்டும் பொதுவுடமை ஹைக்கூ,
எரிவது அடுப்பில்லை
ஏழைகளின் வயிறு
தனியுடைமை
செருப்பு விலையும் ஏறிவிட்டது என்பதை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தும் சிறந்த ஹைக்கூ
காலை மட்டுமல்ல
கையையும் கடித்தது
புதுச் செருப்பு
இப்படி ரசிக்கக் கூடிய சிந்திக்க வைக்கக் கூடிய மிகச் சிறந்த ஹைக்கூ கவிதைகளின் அணிவகுப்பு இந்நூல்.நகைத்துளிப்பாக்கள் சென்ரியுக்கள் நம்மை உண்மையிலலேயே நகைக்க வைக்கின்றன. அது தான் நூலின் வெற்றி
இந்தி பேசினால் இந்தியன்
ஆங்கிலம் பேசினால்
அவன் தமிழன்
இன்றைக்கும் நமது தமிழர்கள் அந்நிய மொழியான ஆங்கிலத்தில் பேசுவதைப் பெருமையாகக் கருதிடும் அவலநிலை தொடர்வதைப் பார்க்கிறோம். ஹைக்கூ
கவிதைகளும் இந்நூல் உள்ளது. எல்லா வகை துளிப்பாக்களின் சங்கமம் இந்நூல். எல்லா வகையிலும் சிறப்பாக படைத்துள்ள படைப்பாளி நூல் ஆசிரியர் திரு.புதுவை சீன தமிழ்மணி பாராட்டுக்குரியவர், ஹைக்கூ ஆய்வாளர்களுக்கு இந்நூல் பாடப்புத்தகம் என்றால் மிகையன்று
கரந்தடியில் பகுத்தறிவு கருத்துக்கள் உள்ளன. மூடநம்பிக்கைச் சாடல் உள்ளது. அரசியல் எள்ளல் உள்ளது. காலத்தின் வரலாற்றுப்பதிவு இலக்கியம். இன்றைய வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் சுக துக்கங்கள் வலிகள், உணர்வுகள் ஆகியவற்றின் சிறப்பான பதிவாக கரந்தடி உள்ளது. ஹைக்கூ பற்றிய புரிதல் இல்லாதவர்களுக்கும் புரிதலை ஏற்படுத்துகின்றது. படிக்கின்ற வாசகர்கள் அனைவருக்கும் எளிமையாக புரியும் வண்ணம் எல்லா ஹைக்கூவும் இருப்பது நுலின் தனிச்சிறப்பு, ஹைக்கூ, லிமரைக்கூ, ஐபுன்கள், சென்ரியு, ஹைக்கூ அந்தாதி என ஹைக்கூவில் எத்தனை வடிவங்கள் உள்ளதோ அத்தனை வடிவிலும் கவிதை படைத்து இருப்பது நூலாசிரியன் திறமைக்கு எடுத்துக்காட்டு
மதக்கலவரங்கள் சாதிக்கலவரங்கள் நாட்டில் அமைதியை சீர் குலைத்து வருவதுமன்றி மனித உயிர்களையும் பலி வாங்கித வருகின்றது
வேண்டாம் என்கிறோம் மதம்
மிடித்து அலைந்து திரிகின்றனர்
அழியப் போகின்றனர் நிதம்
இது போன்ற முற்போக்குக் கருத்துக்களும் கருத்தாழம்மிக்க கவிதைகளும் நிறைய உள்ளது. இது ஹைக்கூ காலம் என்று சொல்லுமளவிற்கு இன்று பரவலாக ஹைக்கூ எல்லோராலும் வாசிக்கப்படுகின்றது. ஹைக்கூ தளத்தில் தொடர்ந்து இயங்கி வரும் மிகச்சிறந்த படைப்பாளி நூலாசிரியர் ஹைக்கூ கவிதையை கிண்டல் செய்து கேலி பேசியவர்களின் கன்னத்தில் அரையும் விதமாக இந்நூல் வந்துள்ளது. ஹைக்கூ பற்றிய உயர்வான எண்ணத்தை வாசகர்களின் உள்ளத்தில் உருவாக்கும் விதமாக உள்ளது. இந்நூல் படித்து முடித்தவுடன் நமது உள்ளம் அசைபோடும் கருத்துக்கள் தான் இந்நூலின் வெற்றி.
இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கின்றது கரந்தடி. கரந்தடி எதிரிகளை கவிதைகளால் தாக்கும் கைத்தடி.
தானாய் கழிந்தது பொழுது (நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி)
தானாய் கழிந்தது பொழுது
(நூல் விமர்சனம் - கவிஞர் இரா.ரவி)
நூல் ஆசிரியர் - இரா.ஆனந்தி
சங்க காலத்தில் நிறையப் பெண்பாற் புலவர்கள் இருந்தார்கள்.அவ்வையார் என்ற பெயரில் பலர் இருந்ததாக சொல்கிறனர்.பெண் கவிஞர்கள் இன்று குறைவாகவே இருக்கின்றனர்.ஆணாதிக்க உலகில் பெண் கவிஞர்கள் வெளிவருவதற்கு நிறைய தடைகள் உள்ளது என்பதும் உண்மை. அப்படிப்பட்ட தடைகளை எல்லாம் தகர்த்து பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இரா.ஆனந்தி, இந்த நூலை மகாகவி பாரதிக்கு காணிக்கையாக்கியிருப்பது மிகச்சிறப்பு. மிகப்பொருத்தமாக திரு.வெ.சுப்பிரமணிய பாரதி என்ற பெயர் உடையவரிடமே அணிந்துரை வாங்கி இருப்பது இன்னும் பொருத்தமாக உள்ளது.
இந்நூலில் ஹைக்கூ புதுக்கவிதை, மரபுக்கவிதை என பல்சுவை விருந்தாக முத்தாய்ப்பாக தனி முத்திரை பதித்து உள்ளார். முதல் ஹைக்கூ கவிதையை பாருங்கள். இதை படித்தவுடனேயே நூல் முழுவதையும் வாசிக்க வேண்டுமென்ற ஆவல் பிறக்கின்றது. உடன் ஒரே மூச்சில் கவிதைகளை ஆர்வமாக படித்து விடுகின்றோம்.
கவிதை எழுதினீர்களா?
உம். எழுதினேன்
உன் பெயரை!
இவருடைய ஹைக்கூ கவிதைகள் நம் சிந்தனையில் சிறு மின்னலை ஏற்படுத்துவது உண்மை என்பதை நீங்கள் உணர இதோ அவரது ஹைக்கூ கவிதைகள்.
வண்ணத்துப்பூச்சி உன்
வண்ணம் வேண்டாம்
சிறகு மட்டுமாவது
சின்னத்தாய் செல்லாமாய்
ஸ்பரிசித்தது
தென்றல் - மலரை
சிம்னி ஒளி முன்
சிரிக்கும் கபற்றே
சிறிது தள்ளிப்போ
அணிலே அணிலே
பழம் வேண்டாம்
பதறாமல் உண்
எரிதலைக் குமுறல்
சாம்பல் பூக்கும்
மனம் ஆடும் மௌனம்
மெல்லத் தொட்டு
இதழில் முத்தமிட
நாணியது சரோஜா
ஜப்பானிய ஹைக்கூ கவிதைனளின் இலக்கணப்படி இயற்கையை நம் முன் காட்சிப்படுத்தி ஹைக்கூ எழுதி வெற்றி பெற்றுள்ளார் நூல் ஆசிரியர். நூல் ஆசிரியர் சகலகலா வல்லவர் என்பதை பறைசாற்றுவதாக உள்ளது. புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத கவிதை எழுதும் கூட்டம் ஒன்று உள்ளது. ஆனால் எல்லோருக்கும் எனிதில் புரியும் வண்ணம் மிகச் சிறப்பாக புதுக்கவிதை படைத்துள்ளார். நூல் முழுவதும் மிகச் சிறப்பாக புதுக்கவிதைகள் உள்ளது. சில மற்றும் உங்கள் பார்வைக்கு இதோ!
உன்னைப் பார்க்கவே கூடாது
ஏன்று நினைத்துக் கொள்வேன்
உன் விழிகளைச் சந்திக்கும் வரை
உன்னிடம் பேசவே கூடாது
என்று நினைத்துக் கொள்வேன்
உன் வார்த்தைகளை கேட்கும் வரை
உனக்கு எழுதவே கூடாது
என்று நினைத்துக் கொள்வேன்
உன் வாக்கியங்களை உச்சரிக்கும் வரை
எனக்கு என்னாயிற்று ? என்று என்னிடமே
கேட்டுக் கொள்வேன் அது மட்டும் எப்போதும்.
காதலர்களுக்கான ஊடல், கூடல் நிகழ்வுகள் கவிதையாக வடித்து இருப்பதனால் படிக்கும் வாசர்களுக்கு அவரவர் மலரும் நினைவுகளை மலர்விக்கின்றது கவிதைகள். குழந்தையின் விமான ஆசையை கவிதையாக்கி இருக்கிறார் நுட்பமாக. ஆணாதிக்க சிந்தனைக்க முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெண்ணிற்கு சுயம் உண்டு எனப் சித்தரிக்கும் வரிகள்.
நான் எப்படி என நீ தீர்மானிக்காதே
இடம் மாறி,வலம் மாறி எங்கும் செல்வேன்
வந்து விடு என நீ பணிக்க வருவேன்
என நினைக்காதே
இந்த நூலில் புதுமை என்னவென்றால், புதுக்கவிதை என்றால் சிலர் தலைப்பு தந்து விடுவார்கள். ஆனால் இந்நூலில் புதுக்கவிதைகளுக்கு தலைப்புத் தரவில்லை. தலைப்பு இல்லாததால் கவிதை படிக்க புதுமையாக உள்ளது. நல்ல முயந்சி. பாராட்டுக்கள். சின்னச்கின்ன வரிகளில் சிந்;தையை செதுக்கி விடுகிறார். நல்ல உவமைகள், உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன. உதாரணம் இதோ!
வான் நிலா
என்னுடனே வருகிறது
உன் நினைவுகளைப் போல
நீ, ஒரு புரியாத புதிர், புரிந்தவர்கள் சொன்னார்கள்
சொல்லி விட்டுப் போகட்டும்
புதிர் எனக்குப் பிடிக்கும் புரியாமலேயே
"புதிர் கவிதை" எனக்கு மிகவும் பிடித்தது, புரியாமல் அல்ல புரிந்ததால்.உங்களுக்கும் பிடிக்கும்.
இடறி விழ கற்கள் வேண்டாம்
உன் கண்கள் அற்த வேலையை செய்யும்
இப்படி உள்ளத்து உணர்வுகளை, காதலர்களளின் இயல்புகளை மினவும் நுட்பதாக கவிதையாக்கி வெற்றி பெற்றுள்ளார்.
கடல் கடந்து
நாடு கடந்து
எல்லை கடந்து
என்னைக் கடக்கவில்லை நீ
இப்படி நூல் முழுவதும் ரசித்துப் படிக்க நினைத்துச் சுவைக்க கவிதைகள் ஏராளம் உள்ளது. தன்னை ஒரு கவிஞர் என நூலில் பநைசாற்றி விட்ட இரா.ஆனந்தி அவர்களிடம் சிறிய வேண்டுகோள். முதலில் கவிஞராக, காதல் உணர்வு உதவிடும் என்பது உண்மை. கவிஞரான பிறகு சமுதாய அவலங்களை, அவலங்கள் அழித்தி தீர்வுகளை பாடி மற்றொரு நூல் வெளியிடுங்கள். இந்த நூல் பாராட்டுக்குரிய நூல்..
குறிஞ்சிப் பூக்கள்விமர்சனம் கவிஞர் இரா .இரவி
விமர்சனம் கவிஞர் இரா .இரவி
நூல் ஆசிரியர் : கவிஞர் வீ.தங்கராஜ்
குறிஞ்சிப் பூக்கள், என்ற பெயருக்கு ஏற்றபடி உள்ளது கவிதைகள், மலரைப் பிடிக்காதவர்கள் யாருமில்லை. குறிப்பாக பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே அபூர்வமாக பூக்கும் அழகிய குறிஞ்சி மலர் போலவே கவதைகள் அற்புதமாக உள்ளன. சிலருக்குத்தான் கவிதை எழுதத் தெரியும். வெகுசிலருக்குத்தான் எழுதிய கவிதைகளை நூலாக்கும் துணிவும், வசதியும் வாய்க்கும். படைப்புலகில் தொடர்ந்து இயங்கிவரும் படைப்பாளி நூலாசிரியர் கவிஞர் வீ.தங்கராஜ் இனிய படைப்பாளி. அது போல நூலாசிரியரும் இலக்கியதாகம் கொண்டு செயல்பட்டு வருபவர். இவருக்கு காரணப்பெயர் என்றே கருதுகின்றேன். தங்கமான கவிதைகளைப் படைப்பதில் இவர் இராசா என்ற காரணத்தால் தான் இவருக்கு இவரது பெற்றோர்கள் தொலைநோக்கு சிந்தனையுடன் தங்கராஜ் என பெயரிட்டார்களோ? என எண்ணுகின்றேன். கலைமாமணி கவிப்பேரரசு டாக்டர் பழனி இளங்கம்பன் அவர்கள் மரபுக்கவிதையும் அருவியாக கொட்டுவார். ஹைக்கூ கவிதையும் சிற்பம் போல செதுக்குவார். பல்துறை வித்தகரின் அணிந்துரை இந்நூலுக்கு மகுடம் போல உள்ளது. முனைவர் கவிஞர் சிற்பி. பால சுப்பிரமணியன் பாராட்டுரை அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நூலாசிரியருக்கு கிடைத்து இருப்பதே நூலிற்கு அணி சேர்க்கின்றது. திருநாவுக்கரசரையே மகனாகப் பெற்றவர் நூல் ஆசிரியர். அதனால் தமிழ்மொழிப் புலமை குற்றலா அருவியாகக் கொட்டுகின்றது. நூலைப் பதிப்பித்த அன்னை இராஜேஸ்வரி பதிப்பக உரிமையாளர் கவிஞர் பா. உதயக்கண்ணன் அவர்களின் தொகுப்பு நூ�லால் வெளிச்சத்திற்கு வந்த பலரில் நானும் ஒருவன். பதிப்புப் பணியினை தொழிலாகச் செய்யாமல் சேவையாகச் செய்திடும் நல்ல மனிதர். பொதுவாக ஒரு கவிஞர் தனது கவிதைகளை நூலாக வெளியிடுகிறார் என்றால் கண்டனக்குரல் முதலில் குடும்பத்தில் தான் ஒலிக்கும். ஆனால் நுலாசிரியருக்கு விதி விலக்காக நூல் வடிவம் பெற குடும்பத்தினர் காட்டிய ஆர்வத்தையும் அக்கறையையும் என்னுரையில் அழகாக பதிவு செய்துள்ளார்கள். அவருடைய குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக திகழ்கின்றது. நவீன யுகத்தில் மனிதன் புறத்தில் வளர்ச்சி அடைந்து விட்டான். ஆனால் அகத்தில் வீழ்ச்சி அடைந்து வருகிறான் என்பதை விளக்கும் அழகிய ஹைக்கூ மனிதனுக்குள் மிருகம் நல்ல வேளை மிருகத்துக்குள் மனிதன் இல்லை மரபுக் கவிதைகளில் தமிழ்மொழி, திருக்குறள், பாரதி பற்றி பல்வேறு கவிதைகள், என்னவளம் இல்லை நம் தமிழ் மொழியில் ஏன்? கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் என்பதைப் பறைசாற்றும் விதமாக உள்ளது. மூவடி முப்பது என்ற தலைப்பில் 3 பகுதியாக உள்ள 90 ஹைக்கூகளும் படிக்கும் வாசகர்கள் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றன. எண்ண அலைகளை உருவாக்குகின்றன. அது தான் நூலின் வெற்றி உண்மையில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. ஏழ்மையை விளக்கும் காட்சிப்படுத்தும் உன்னத ஹைக்கூ. குப்பையைக் கிளறுவது கோழியல்ல கோணியுடன் சிறுவன் இன்றைய தேர்தல் விதிகளும். ஆனால் நாட்டில் நடைபெறும் நடைமுறைகளும் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதனை எள்ளல் வகையில் விளக்கிடும் ஹைக்கூ. தேர்தல் கமிஷன் பெயரே சரியில்லை தேர்தலுக்குப்பின் எல்லாமே கமிஷன் மயம் நூலாசிரியர் ஆசிரியராக இருப்பதால் மொழி வளம் குன்றாமல் உள்ளது. நயாகரா அருவியென கொட்டுகின்றது. குறிஞ்சிப்பூக்கள் என்று நூலிற்கு 12 வருடங்கள் ஆக்காமல் உடன் அடுத்த நூலைத் தாருங்கள் காட்டு கடைவிழி குமரேசா என்று தொடங்கி கர்ப்பிணி பெண் போலகவிதைக்கரு தமக்கும் கவிஞன் பிரசவ எதிர்பார்ப்புடன் ஹைக்கூ கவிதை வரை அனைத்து கவிதைகளும் அற்புதமாக வருகின்றது. ஹைக்கூ கவிதை இன்று பரவலாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று எல்லோராலும் விரும்பப்பட்டு பலர் இன்று ஹைக்கூ எழுதி வருகின்றனர். ஹைக்கூ கவிதை ஒன்றுக்குத்தான் படிக்கும் வாசகனையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் உண்டு. மரபு அறிந்த கவிஞர்களான நூலாசிரியர் வீ.தங்கராஜ் பழனி இளங்கம்பன் ஆகியோர் ஹைக்கூ வடிக்கும் போது அதில் ஆழம் மிக அதிகமாகவே உள்ளது. சொற்கள் நடந்தால்த வசனம் சொற்கள் நடனமாடினால் கவிதை. இந்த நூலில் சொற்கள் களி நடனமாகின்றன. தேவையற்ற சொற்கள் எதுவுமில்லை.கடலில் மூழ்கி முத்து எடுப்பதைப் போல தமிழ்க்கடலில் மூழ்கி சொற்களை எடுத்து கவிதை முத்துக்களைக் கோர்த்து பாமாலை தந்து இருக்கிறார்.த ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரே நூலில் மரபும் உள்ளது. ஹைக்கூவும் உள்ளது. பழமையும் உள்ளது. புதுமையும் உள்ளது. கவிதை நேசர்களால் நேசிக்கப்படும் நூலாக உள்ளது
| |
ஞாயிறு, 17 அக்டோபர், 2010
பார்த்து மகிழுங்கள் கன்னிக்கோயில் ராஜா வலைப்பூ
பார்த்து மகிழுங்கள் கன்னிக்கோயில்
ராஜா வலைப்பூ
சனி, 16 அக்டோபர், 2010
ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி
ஹைக்கூ – கவிஞர் இரா.இரவி
ஏவுகணை சோதனை வெற்றி
விலைவாசி குறைப்பில் படு தோல்வி
இந்தியா
அறிவு விளக்கை அணைத்து விட்டு
அணையா விளக்கு
காமராசருக்கு
தூரத்தில் தர்ம தரிசனம்
அருகில் நடப்பது
அதர்ம தரிசனம்
இலஞ்சம் ஒழிப்பவரே
இலஞ்சம் வாங்கி கைது
காவல்துறை
ஏறும் விலைவாசி
இறக்கிட யோசி
மக்கள் விருப்பம்
அன்று ஊறுகாய்
இன்று சாப்பாடு
திரைப்படங்களில் ஆபாசம்
நாட்டில் ஓடியது
தேனும் பாலும்
திருப்பதிக்கு தங்கக் கோபுரம்
பேச ஆரம்பித்தனர்
மதுவிலக்கு
அருகில் தேர்தல்
வெற்றி பெற்றன
ஊடகங்கள்
பண்பாட்டுச் சீரழிப்பில்
போதித்தன
மிருக குணம்
தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள்
குடிபோதையில்
குடும்பத்தலைவன்
தள்ளாடும் குடும்பம்
வந்தாரை வாழ வைத்தே
வீடு இழந்தவன்
தமிழன்
கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
வாழ்க இந்தியா
சக நடிகர் கைது
கண்டிக்காத திரைஉலகம்
சுயநலவாதிகள்
தன்னம்பிக்கை ஹைக்கூ
*
வாழ்க்கைத் தத்துவம்
யானைக்குத் தும்பிக்கை
மனிதனுக்கு தன்னம்பிக்கை!
இமயம் செல்லலாம்
இரு கால்களும் இன்றி
தன்னம்பிக்கை இருந்தால்
முடியாதது முடியும்,
நடக்காதது நடக்கும்
தன்னம்பிக்கை இருந்தால்…
தாழ்வு மனப்பான்மையை தகர்த்து
தன்னம்பிக்கையை நிறுத்து
வெற்றி பெற
வெற்றியை
வெறியோடு சாதிக்க
துணை தன்னம்பிக்கை!
வயது தடையல்ல!
எந்த வயதிலும்
புரியலாம் சாதனை.
உடல் ஊனம்
அகற்றிடும்
தன்னம்பிக்கை.
உள்ளத்து ஊனம்
தகர்த்திடும்
தன்னம்பிக்கை
குறைந்த காரணத்தால்
மலிந்தது குற்றங்கள்
தன்னம்பிக்கை
உருவம் இல்லாத உறுப்பு,
உள்ளத்தில் இருப்பதே சிறப்பு
தன்னம்பிக்கை
இழந்தவன் வீழ்வான்
இருப்பவன் வெல்வான்
தன்னம்பிக்கை
தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள்
மனதில் தீ வேண்டும்,
திட்டமிட வேண்டும்
புரியலாம் சாதனை
மலர் மதிப்புரை :முனைவர்.ச.சந்திரா
மலர் மதிப்புரை :முனைவர்.ச.சந்திரா
நூல் :மணி விழா மலர்
முனைவர்இரா.மோகன்,முனைவர் நிர்மலா மோகன்
பதிப்பாசிரியர்கள் :கவிஞர் இரா.இரவி
முனைவர்.வனராசா இதயகீதன்
மலர் மதிப்புரை :முனைவர்.ச.சந்திரா
ஈரைந்து மாதங்கள் ஆகும் ஒரு கரு உலகத்தை தரிசிக்க
ஓரைந்து மாதங்களில் ஒர் உன்னத மலர் இலக்கிய உலகில் பூத்துள்ளது.”சும்மா இருப்பதே சுகம் ” -என்று மனிதர்கள் பொழுதைப்போக்கும் இக்காலத்தில் சுற்றியிருப்போர் ஏந்துபுகழெய்த முனைப்புடன் செயல்பட்டு அனுபவ மலர்களை அபூர்வ மாலையாகத் தொடுத்த பதிப்பாசிரியர்களாம் கவிஞர் இரா.இரவி அவர்களுக்கும் முனைவர் இதய கீதன் அவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களின் சார்பாய் மனமார்ந்த பாராட்டுக்கள்.
மலருக்குள் மலர் :
தெள்ளுதமிழ் பேசும் தென்பாண்டி நாட்டில் இலக்கிய தென்றலாய் உலா வரும் இணையரது மணிவிழா மலர் தனக்கு மட்டுமில்லாமல் தரணிக்கே நறுமணம் பரப்பும் தாழைமலர்.இணையரின் பண்புநலன்கள் ஒளிர்விடும் பொழுதில் இது பாரிஜாதமலர்.பட்டிமன்ற அனுபவங்கள் சொல்லும் வேளையில் இது இரவிலும் மின்னிடும் நிஷாகந்தி மலர்.உள்ளத்திற்கு மருந்தாய் மகிழம்பூ போல அறிவுறுத்தலோடு கூடிய சில வாழ்த்து மடல்கள்.மயக்கும் மல்லிகையாய் கவிதைப் பூக்கள்.கற்பகச்சோலையில் மலரும் மந்தார மலர் போல் அயல்நாடு வாழ் அறிஞர்களின் ஆசியுரைகள்.மொத்தத்தில் கொன்றை மலர் போல அடுக்கடுக்காய் அழகிய இலக்கிய அனுபவங்கள்.
கதம்ப மாலை:
அன்பு கட்டளையாய் ” இன்னும் ஒரு நூற்றாண்டு இரும் ” எனும் குரல் ,”நான் வாழும் நாள் வாழிய” எனும் பாசக்குரல், “அந்தண்மை செல்வம் தேடு ” என ஆணையிடும் குரல் ,”எல்லைக்கோட்டை உற்று நோக்குக ” எனும் நேசக்குரல் ,”பதவி,விருதுகளை பொருட்படுத்தாமல் படைத்தல் வினைப்பாட்டில் கவனத்தைச் செலுத்துக ” எனும் ஆர்வக்குரல் -என அடுக்கு மல்லியாய் சற்றே வித்தியாசமான வாழ்த்துரைகள் .
பொற்றாமரை:
இணையரைக் குறித்து கவிஞர் பொன் ரவீந்திரன் எழுதியிருக்கும் கட்டுரை வாசிக்கும் அனைவரையும் ஈர்க்கும் பொலிவு நிரம்பிய கட்டுரை.மோகனமான இதனை கட்டுரை என்பதா ?கவிதை என்று சொல்வதா? சிறுகதை என யூகிப்பதா ?உள்ளத்தைக் கொள்ளையடிக்கும் இக்கட்டுரை இந்த மலர்த்தொகுப்பில் பொன்னாய் மிளிர்கின்றது.
மலர்ச்சோலை :
இணையரின் இலக்கிய சமூகப்பொது வாழ்விற்கு சான்றாய் , சாட்சியாய் வண்ண வண்ண புகைப்படங்கள் உதகை மலர் கண்காட்சியாய் காண்போர் விழிகளை அதிசயிக்க வைக்கிறது.இலக்கிய மன்றம் முதல் சட்ட மன்றம் ,இசைத்துறை முதல் இதழியல் ,சின்னத்திரை முதல்வெள்ளித்திரை,கவிக்கோ முதல் கவிப்பேரரசு ,வேழவேந்தன் முதல் வித்தகக் கவிஞன் ,முன்னாள் மூதறிஞர் முதல் இந்நாள் ஆய்வியல் அறிஞர் வரை என அங்கிங்கெனாதபடி எல்லோர் இருதயத்திற்குள்ளும் இணையரின் இலக்கியவாசம்பரவியிருப்பதை உய்த்துணர முடிகிறது.
பூங்கொத்து :
இணையரின் மலர்த்தொகுப்பில் மனதைக்கவரும் மலர்க்கொத்துக்கள் இதோ !
“எண்பது நூல்கள்
இவருக்கு
எட்டாம் படி மட்டுமே
எட்டும் படியோ
பதினெட்டாம் படி .”_ கவிஞர் புவியரசு
வித்தகக் கவியின் வியப்பு !
“அசைச்சொற்களையும்
இசைச்சொற்களாய் மாற்றிய
அழகான கவிதை தொகுப்பு”- பா.விஜய்
பூச்செண்டு :
இவர்கள் இணையர்தான் என்பதனை நான்கே வரிகளில் ‘நச்’ -என்று உரைக்கிறார் குமுதம் பத்திரிகையாளர் ப.திருமலை
” பச்சை மருதாணிக்குள் மறைந்திருக்கும் சிவப்பு
கடல் நீருக்குள் ஒளிந்திருக்கும் உப்பு
உண்மைக்குள் மறைந்திருக்கும் நேர்மை
இதுபோல் தங்கள் வெற்றிக்குள்ளும் சகோதரி”
இதய மலர்கள் :
” மண் மூடிய விதையில் இருந்த என்னை கண்மூடாமல் வளர்த்தெடுத்த என் இரண்டாம் கருவறை” -என மூத்த மாணவராம் முனைவர் குமார் கூற ,”அன்பு அறிவு அடக்கம் இந்த மூன்றும் சேர்ந்த அபூர்வம் “- என அருள் தந்தை பிரான்சிஸ் சொல்ல, “இயன்றதைச்செய்தார் ; எழுந்து நிற்கிறேன் ” என ஆய்வு மாணவர் குருசாமி உணர்வு பொங்க உரைக்க இத்தனையையும் இதய மலர்கள் என்று கூறாமல் வேறு என்னவென்று பகர்வது ?
மலர் மாரி :
.
‘ஆயிரம் பிறை கண்டு அனைவரும் அதிசயிக்கதக்க வாழுங்கள்’ -என்பது முதுமொழியாய் இருக்க ,’ ஆயிரம் நூல்கள் படைத்து அறிவுத்தடாகத்தில் பேரின்பம் பொங்க மலருங்கள் ‘ -என்ற புதுமொழியைக் கூறி மதிப்புரையை நிறைவு செய்கிறேன்.நன்றி.
வெள்ளி, 15 அக்டோபர், 2010
இதயத்தில் ஹைக்கூ
இதயத்தில் ஹைக்கூ
நீளம் சக்கரமானது
தொட்டது சுருண்டது
ரயில் பூச்சி
எருக்கம் பூ
ரோசாப்பூ
பேதமின்றி ஆதவன்
முதலிடம் தமிழகம்
முட்டாள் தினத்தில்
அட்சயதிரிதியில் தங்கம்
வென்றாள் கண்ணகி
சிலப்பதிகாரத்திலும்
சிலை அதிகாரத்திலும்
எதுவும் செய்வான்
செய்யாமலும் இருப்பான்
அவளுக்காக
-கவிஞர் இரா.ரவி
வியாழன், 14 அக்டோபர், 2010
படித்து மகிழுங்கள்
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
திங்கள், 11 அக்டோபர், 2010
காடு அதை நாடு
புதிய ஹைக்கூ - கவிஞர். இரா.இரவி
| புதிய ஹைக்கூ - கவிஞர். இரா.இரவி |
| மனம் வருந்தியது விணாய் போனதற்கு திருஷ்டி பூசணி ஓராயிரம் பொருள் கிடைக்கும் உற்று நோக்கினால் படைப்பதற்கு மேடுகளைத் தகர்த்து பள்ளம் நிரப்பு சமத்துவம் பொதுவுடமை விழி இரண்டு போதாது வனப்பை ரசிக்க வண்ண மலர்கள் ஒய்வதில்லை விண்ணும் மண்ணும் அலையும் ஒய்ந்திடும் மனிதன் வெட்ட வெட்ட வளரும் பனைமரம் பாராட்ட வளரும் குழந்தை குடியால் கோடிகள் திரட்டி கோடித் துணி தந்தனர் ஏழைகளுக்கு புதிய பொருளாதாரம் கல்வி தனியார் மயம் மது அரசுமயம் உருவமின்றியும் தேசப்படுத்தியது வாழையை காற்று அன்றே அநீதி ஆண்களுக்கு கை சிலம்பு பெண்களுக்கு கால் சிலம்பு இருப்புப் பாதையில் இருப்பின்றி பயணம் தொடர் பயணம் கழிவுநீர் உறிஞ்சி இளநீர் தரும் உயர்ந்த தென்னை யார் உயர் திணை மோதி விழும் மனிதன் கூடி வாழும் பறவைகள் விளைவித்தன கேடு கண்ணிற்கும் மனதிற்கும் தொல்(ல்) லைக்காட்சிகள் தரம் தாழ்ந்தால் களையாகும் கலை மாடு செரிப்பதற்கும் மனிதன் மகிழ்வதற்கும் உதவிடும் அசைபோடுதல் போராட்டம் நடிப்பு அரசியலில் பேராட்டமே வாழ்க்கை ஏழைகளுக்கு கண்ணிற்கு குளிர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி இயற்கை மனம் வருந்துவதில்லை மங்கையர் சூடாததற்கு எருக்கம் பூக்கள் சாலை மூடியதும் மரியாதை செலுத்தும் வாகனங்கள் தொடர் வண்டிக்கு பறக்குப்பை உரமாகும் அகக்குப்பை தாழ்த்தி விடும் மெய்பித்தனர் திறமையை பொய் வழக்குப் போடுவதில் காவலல் துறை |
தமிழா நீ பேசுவது தமிழா ( கவிஞர் இரா.ரவி )
| தமிழா நீ பேசுவது தமிழா ( கவிஞர் இரா.ரவி ) |
| தமிழா நீ பேசுவது தமிழா? தமிங்கிலம் நீ பேசுவது அழகா? உணவுக் கலப்படம் உடலுக்குக் கேடு மொழிக் கலப்படம் மொழிக்குக் கேடு என்ன வளம் இல்லை நம் தமிழ்மொழியில் ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் தமிழைப் பிழையின்றித் தமிழாகவேப் பேசு தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு தொலைக்ககாட்சியில் தினமும் தமிழ்க்கொலை நடக்குது தொல்லைக்காட்சி நிலை காண நெஞ்சம் கொதிக்குது பத்துச் சொற்களில் இரு சொல் தமிழ் பெயரோதமிழ் மாலை என விளம்பரங்கள் தமிழா உன் அடையாளம் தமிழ் தமிழ் சிதைந்தால் தமிழன் சிதைவான் உணர் தமிழா உன் முகவரி தமிழ் தமிழ் அழிந்தால் தமிழன் அழிவான் எழு நமக்கென்ன என்று நீ இருந்து விட்டால் நாளைய வரலாறு உன்னைப் பழிக்கும் உலகின் முதன்மொழி தமிழ்மொழி உலக மொழிகளின் தாய்மொழி தமிழ்மொழி பிறமொழிகலந்து பேசுவதை விட்டுவிடு பண்டைத் தமிழ்மொழிக் காத்திட நீ விழித்திடு செம்மொழி நம் மொழி சிறப்பை உணர்ந்திடு செந்தமிழ்மொழி காக்க உடன் அணிவகுத்திடு |
ஞாயிறு, 10 அக்டோபர், 2010
மாற்றுத் திறன் படைத்தோரின் மனசு -கவிஞர்.இரா.இரவி
| மாற்றுத் திறன் படைத்தோரின் மனசு -கவிஞர்.இரா.இரவி |
| கலக்குவோம் கலக்குவோம் இந்த உலகத்தையே கலக்குவோம் நாங்கள் மாற்றுத்திறன் படைத்தோர் நாங்கள் உலகில் மட்டற்ற சாதனை படைத்திடுவோம் என்றும் கை கால் குறையின்றி நாளும் உழைக்காமல் உண்ணும் சோம்பேறிகள் உண்டு கை கால் குறையிருந்தும் என்றும் உழைக்காமல் உண்பதில்லை நாங்கள் பார் புகழ்ந்திட உழைப்போம் நாங்கள் பரிசுகள் பல வெல்வோம் நாங்கள் கவலைக்கு இடம் கொடுப்பதில்லை நாங்கள் கலை வளர்க்கவும் தவறுவதில்லை நாங்கள் ஆடுவோம் பாடுவோம் என்றும் ஆனந்தக் கூத்தாடுவோம் நாங்கள் கருணை கேட்கவில்லை நாங்கள் கனிவோடு நடத்திடுங்கள் நீங்கள் உடல்குறை குறையே அன்று உள்ளத்தின் குறையே பெரும் குறையாகும் குறையை குறையாக நினைப்பதில்லை நாங்கள் குறையையும் நிறையாக நினைப்பவர்கள் நாங்கள் பிறக்கும் போதும் குறை உண்டு பிறந்த பின்னும் குறை உண்டு கல்வியிலும் படைத்தோம் பல சாதனை விளையாட்டிலும் வென்றோம் கடந்தோம் சோதனை சகலகலா வல்லவர்கள் உண்டு எங்களில் நடனக் கலைஞர் மறைந்த குட்டியும், வாழும் சுதாசந்திரனும் எங்களினம் பார்வையின்றி பார் புகழ வாழ்கின்றார் பலர் பார்வை இருந்தும் பயனற்று வாழ்ளகின்றார் பலர் மண்ணுக்கும் தீயுக்கும் இரையாகும் விழிகளை மனிதனுக்கு வழங்கும் உள்ளம் பெறுங்கள்... |
விலங்கு - இரா.இரவி
| விலங்கு - இரா.இரவி |
![]() |
| விலங்கு என்று விரட்டாதே வீண்பழி அதன்மேல் சுமத்தாதே தேனைச் சேர்ப்பது தேனியாகும் தேனைச் சிதைப்பது நீயாகும்! இறைச்சி உண்பதில்லை ஆடு இறைச்சியே உனக்கு ஆடு! நீயும் மானும் ஓடிப்பார் நிச்சியம் தோற்பாய் நினைத்துப்பார் கொடியது பாம்பு என்றாலும் கடிக்காது நீ அதைச் சீண்டாமல் பாலைவனக் கப்பல் ஒட்டகமே பாதை கடப்பது அதன் இனிமே! நீரை விடுத்துப் பாலை அருந்தும் நிறைந்த மதியுடைய அன்னம் நினைத்ததை உன்னால் மறப்பதாலே நீ அல்ல நிறைமதி அன்னம் எறும்பின் வேகத்தை உற்றுப்பராது எதிர்காலம் சேமிக்கும் குணத்தைப்பார் சினைமாடு என்று தெரிந்துவிட்டால் காளைமாடு சற்றே ஒதுங்கிவிடும் |
மாற்றம் வேண்டும் - கவிஞர்.இரா.ரவி
| மாற்றம் வேண்டும் - கவிஞர்.இரா.ரவி |
![]() |
| ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் இன்னல்கள் யாவும் தீர்ந்திட வேண்டும் பன்னாட்டு நிறுவனங்கள் விரட்டப்பட வேண்டும் பாட்டாளியின் கரங்கள் உயர்த்தப்பட வேண்டும் அரசியலில் ஊழல் அகற்றப்பட வேண்டும் அரசியலில் நேர்மை விதைக்கப்பட வேண்டும் உழவனின் உழைப்பு போற்றப்பட வேண்டும் உழவுத் தொழில் மதிக்கப்பட வேண்டும் ஏற்றத் தாழ்வுகள் தகர்க்கப்பட வேண்டும் ஏங்கும் சமநிலை ஏற்படுத்தப்பட வேண்டும் பண்பாட்டுச் சீரழிவு தடுக்கப்பட வேண்டும் பண்பில் சிறந்தோராக மாற்றப்பட வேண்டும் சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்திட வேண்டும் சந்தோச வாழ்க்கை பரவலாக்கப்பட வேண்டும் சாதிமத சண்டைகள் ஒழிக்கப்பட வேண்டும் சகோதர உணர்வுகள் மலர்ந்திட வேண்டும் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட வேண்டும் இல்லாதோர் இல்லை என்றாக்கிட வேண்டும் மூடநம்பிக்கைகள் முற்றாக தடை செய்திட வேண்டும் மூளையை பகுத்தறிவிற்கு பயன்படுத்திட வேண்டும் ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் வேண்டும் இனவெறி பிடித்த சிங்களர்கள் திருந்திட வேண்டும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக தடுக்கப்பட வேண்டும் ஏழைகள் மேலும் ஏழைகளாவது நிறுத்தப்பட வேண்டும். |
புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் - கவிஞர் இரா.இரவி
| புவி வெப்பமயமாதலைத் தடுப்போம் - கவிஞர் இரா.இரவி |
![]() |
| காந்தியத்தைக் கடைபிடித்தால் நலம் பயக்கும் கைத்தொழில் பெருகுதல் வளம் சேர்க்கும் மின்சார பயன்பாட்டை குறைத்திட வேண்டும் மனித ஆற்றலைiயே பெருமளவு பண்படுத்திட வேண்டும் எரிபொருள் சிக்கனம் என்றைக்கும் வேண்டும் எண்ணெய் வளம் வருங்காலத்திற்கும் வேண்டும் மரம் வெட்டுதல் தடை செய்திட வேண்டும் மரம் வளர்த்தல் கடமையாக்கிட வேண்டும் சுற்றுச்சூழல் மாசு இன்றி காத்திட வேண்டும் சுகாதாரமான காற்றை சுவாசித்திட வேண்டும் இயற்கையை இயற்கையாக இருக்க விட வேண்டும் இயற்கையை இல்லாமலாக்குவதை நிறுத்திட வேண்டும் செயற்கையை முடிந்தளவு அகற்றிட வேண்டும் செயல்கள் மனிதனால் நடந்திட வேண்டும் விவசாய உற்பத்தியை பெருக்கிட வேண்டும் விசம் கக்கும் தொழில்கள் நிறுத்திட வேண்டும் இயற்கை உரங்களை பயன்படுத்திட வேண்டும் இரசாயண உரங்களை தவிர்த்திட வேண்டும் உடலுக்கும் உலகிற்கும் நலம் மிதிவண்டி உலகம் செழிக்க குறைப்போம் விசைவண்டி மகத்தானது மனித ஆற்றல் உணர்ந்திடுவோம் மாசுக் கட்டுப்பாட்டிற்கு உதவிகள் புரிந்திடுவோம் வெப்பமயமாதலைத் தடுக்க எல்லோரும் உதவிடுவோம் வெப்பமாகும் செயல்களை உடன் நிறுத்திடுவோம் எங்கும் இயந்திரமயமாதலை ஒழித்திட வேண்டும் எங்கும் மனிதமயமாதலை வளர்த்திட வேண்டும் நவீனமயமாதல் உடலுக்கு உலகிற்கும் கேடு பயக்கும் நவீனத்தில் நல்லதை எடுத்து அல்லதை விட்டுவிடுவோம் எப்போதும் துணிப்பை ஒன்று வைத்திருப்போம் எங்கும் பிளாஸ்டிக் பை இல்லாது ஒழித்திடுவோம் மக்காத குப்பையாகி மாசுபடுத்துகின்றது மண்ணில் நீரை இறங்க விடாமல் தடுக்கின்றது பாலித்தீன் பயன்பாட்டை உடன் குறைத்திடுவோம் பாதிப்பு இல்லா உலகம் நாம் அமைத்திடுவோம் முயன்றால் முடியாது எதுவுமில்லை உலகில் முயன்றிடுவோம் யாவருமே வெப்பத்தைக் குறைக்க |
ஹைக்கூ - கவிஞர் இரா.இரவி
| ஹைக்கூ - கவிஞர் இரா.இரவி |
![]() |
| நல்ல விளைச்சல் விளை நிலங்களில் மகிழ்ந்து நிறுவனங்கள் கத்துக்குட்டி உளறல் நதிநீர் இணைப்பு எதிர்ப்பு நல்ல முன்னேற்றம் நடுபக்க ஆபாசம் முகப்புப் பக்கத்தில் இன்று குடிநீர் நாளை சுவாசக்காற்று விலைக்கு வாங்குவோம் பெட்டி வாங்கியவர் பெட்டியில் பிணமானவர் பிணப்பெட்டி உணவு சமைக்க உதவும் ஊரை எரிக்கவும் உதவும் தீக்குச்சி நடிகை வரும் முன்னே வந்தது ஒப்பனை பெட்டி தனியார் பெருகியதால் தவிப்பில் உள்ளது அஞ்சல் பெட்டி தாத்தா பாட்டியை நினைவூட்டியது வெற்றிலைப்பெட்டி நகைகள் அனைத்தும் அடகுக் கடையில் நகைப்பெட்டி? மூடநம்பிக்கைகளில் ஒன்றானது புகார்ப்பெட்டி |
வியாழன், 7 அக்டோபர், 2010
சிந்திப்பாயா? இரா .இரவி
அலகு குத்தி பால்குடம் எடுத்து
தீச்சட்டி ஏந்தி ரத யாத்திரை நடத்தி
கட்டவுடிற்கு பாலபிசேகம் செய்து
திரை அரங்கில் நுழைந்த ரசிகனிடம்
திரை அரங்கின் பணியாளர் சொன்னார்
ருபாய் ஐநூறு கொடு டிக்கட்
இல்லாவிட்டால் கெட் அவுட்
மனிதனாக வாழக் கற்றுக் கொடுங்கள் இரா .இரவி
சட்டக் கல்லூரி சண்டியர்கள் கல்லூரி ஆனது
பொறியியல் கல்லூரி மதி இலார் கல்லூரி ஆனது
கலைக் கல்லூரி களைகளின் கல்லூரி ஆனது
கல்வி கற்பிப்பது இருக்கட்டும் முதலில்
மனித நேயத்தோடு மனிதனாக வாழக் கற்றுக் கொடுங்கள்
--
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
வெள்ளி, 1 அக்டோபர், 2010
காந்தியடிகள் ஹைக்கூ
காந்தியடிகள் ஹைக்கூ
அகிம்சையை உணர்த்திய
அறிவு ஜீவி
காந்தியடிகள்
ரகசியம் இல்லாத
அதிசய மாமனிதர்
காந்தியடிகள்
கொண்ட கொள்கையில்
குன்றென நின்றவர்
காந்தியடிகள்
திருக்குறள் வழி
வாழ்ந்த நல்லவர்
காந்தியடிகள்
சுட்ட கொடியவனையும்
மன்னித்த மாமனிதர்
காந்தியடிகள்
உலகம் வியக்கும்
ஒப்பில்லாத் தலைவர்
காந்தியடிகள்
வன்முறை தீர்வன்று
வையகத்திற்கு உணர்த்தியவர்
காந்தியடிகள்
நெஞ்சுரத்தின் சிகரம்
நேர்மையின் அகரம்
காந்தியடிகள்
அரை ஆடை அணிந்த
பொதுஉடைமைவாதி
காந்தியடிகள்
வெள்ளையரின்
சிம்ம சொப்பனம்
காந்தியடிகள்
மனித உரிமைகளின்
முதல் குரல்
காந்தியடிகள்
அமைதியின் சின்னம்
அடக்கத்தின் திரு உருவம்
காந்தியடிகள்
அன்றே உரைத்தவர்
உலக மயத்தின் தீமையை
காந்தியடிகள்
மனிதருள் மாணிக்கம்
மாமனிதருக்கு இலக்கணம்
காந்தியடிகள்
-- அன்புடன் கவிஞர் இரா .இரவிwww.eraeravi.comwww.kavimalar.comeraeravi.wordpress.comeraeravi.blogspot.com
