முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

: திருக்குறள் 100 நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 050. பக்கங்கள் : 152 ; விலை ரூ.150

நூல் : திருக்குறள் 100 நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 050. பக்கங்கள் : 152 ; விலை ரூ.150 ****** திருக்குறள் பற்றி பல்வேறு நூல்கள் வந்துள்ளன. இந்த நூல் வித்தியாசமாக கேள்வி-பதில் வடிவில் 100 கேள்விகளும் விரிவான பதில்களும் வந்துள்ளன. நூலாசிரியர் முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடு மிக்கவர். அவருடைய முனைவர் பட்ட ஆய்வுகள் மூன்றில் இரண்டு திருக்குறள் பற்றியவை. ‘திருவள்ளுவரும் ஷேக்ஸ்பியரும்’ ஒப்பீடு ஒரு ஆய்வு, ‘திருக்குறளில் மனிதவள மேம்பாடு’ மற்றொரு ஆய்வு. திருக்குறளை இருமுறை ஆய்வு செய்த அனுபவத்தின் வெளிப்பாடாக வழக்கம்போல கேள்வியும் நானே, பதிலும் நானே என்ற பாணியில் அவரே கேள்வியும் பதிலும் வழங்கி உள்ளார். திருக்குறள் பற்றிய கனிச்சாறு எனலாம். திருக்குறள் பற்றிய ஆகச்சிறந்த நூல் எனலாம். திருக்குறளுக்கு உரை எழுதுகிறேன் என்று சிலர் அரைத்த மாவை அரைத்து வருகின்றனர். ஆனால் இது வித்தியாசமான முயற்சி. பாராட்டுகிறேன். முதல் கேள்வி : திருக்குறளில் முதல் குறளான ‘அகர முதல’ என்பதில் ஏதேனும் தனிச்சிறப்பு உள்ளதா? அகரம் என்பது பல மொழிகளில் முதல் எழுத்தாக இருக்கிறது. கிரேக்க எழுத்து வடிவத்திலும், சிரிலிக் லிபியிலும். அரபிக்கிலும். தேவநகரியிலும் அகமே எழுத்துகளில் முதன்மை வகிக்கிறது. ஃபினிஷியன் எழுத்துகளில் 3500 ஆண்டுகளுக்கு முன்பே முதல்எழுத்தாக இருந்தது அகரம். அலெஃப் என்று அது அழைக்கப்பட்டது. ‘அ’ என்பது வாயைத் திறந்தாலே வருகிற ஓசை. எந்த பிரயத்தனமும் இல்லாமல் அகரத்தை உச்சரித்துவிட முடியும். ‘ழ’கரத்தைப் போன்றோ, ‘ன’கரத்தைப் போன்றோ சிரமப்படாமல் உச்சரித்து விடலாம். எழுத்துகளுக்கு மட்டும் அகரம் முதன்மையல்ல. குழந்தைகள் முதலில் உச்சரிக்கும் எழுத்தும் அகரம் தான். இறைமை என்பது உலகத்தில் உள்ள பொருட்களுக்கு மட்டுமல்ல, ஓசைகளுக்கும் முதன்மையானதாக இருக்கிறது என்கிற பொருளில் கையாளப்படும் குறளிது. திருக்குறளின் முதல்குறளே அகரத்தில் தொடங்குவது அதன் சிறப்பு.” இப்படி அகரம் எந்தெந்த மொழிகளில் இருந்தது என்ற புள்ளி விபரங்களுடன் அகரத்தின் சிறப்பை உணர்த்தியது சிறப்பு. இப்படி 100 கேள்விகளும் திருக்குறளின் சிறப்பை மேன்மையை எடுத்து இயம்பும் விதமாக உள்ளன. கேள்வி : அந்தணர் என்போர் அறவோர் என்பதில் உள்ள நுட்பத்தைக் கூற முடியுமா? மூன்று குறட்பாக்களில் அந்தணர் என்கின்ற சொல்லைத் திருவள்ளுவர் பயன்படுத்தி இருக்கிறார். (1) அறவாழி, (2) அந்தணர் நூற்கும், (3) அந்தணர் என்போர். திருவள்ளுவரைப் பொறுத்தவரை யாரெல்லாம் உயிர்களிடத்தில் அன்பு கூட அல்ல, கருணையைப் பொழிகிறார்களோ அவர்களே அந்தணர்கள். இப்படி அந்தணர் என்பது சாதியைக் குறிக்கும் சொல் அல்ல. குணத்தைக் குறிப்பது. கருணை உள்ளம் படைத்த அனைவருமே அந்தணர் தான். கருணையைற்றவர்கள் யாராக இருந்தாலும், அந்தணர் இல்லை என்பதுதான் திருவள்ளுவர் கருத்து என்பதை நன்கு உணர முடிந்தது. கேள்வி : தக்கார் தகவிலர் என்பது வாரிசுகளைக் குறிக்குமா? எச்சமென்பது வாரிசுகள் அல்ல. அவர்கள் விட்டுச்செல்கின்ற செயல்கள் அவர்கள் விட்டுச் செல்வது சுவடுகளையல்ல ; பாதங்களை என்பதைப் பயன்பெற்றோர் பகுத்தறிவர். அவர்கள் உலகத்தினர் அனைவரையுமே வாரிசுகளாக வரித்து கொண்டவர்கள் அவை நிறுவனங்களாக இருக்கலாம். நூல்களாக இருக்கலாம். சட்டங்களாக இருக்கலாம், கண்டுபிடிப்புகளாக இருக்கலாம். வாழ்ந்ததன் பயனை ஒருவர் உலகத்தில் விட்டுச் சென்றிருக்காரா என்பதை வைத்தே தக்காரா, தகவிலரா என்று நாம் அவருக்கு வக்காலத்து வாங்க முடியும்”. என்படி, தக்கார் தகவிலர் பற்றிய சிறப்பான விளக்கம் நன்று. நூலாசிரியர் இறையன்பு அவர்கள் தக்கார் தான். 200 நூல்கள் வரை எழுதி உள்ளார். பல நூறு உரைகள் வழங்கி உள்ளார். வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறார். அவர் வாழ்வதற்கான அடையாளத்தை நன்கு பதித்து வருகிறார். பாராட்டுகள். அவருக்கு இரண்டு மகன்கள் தான் வாரிசு என்ற போதும், உலகத்தினர் அனைவரையும் வாரிசுகளாக வரித்துக்கொண்டு இளைய சமுதாயத்தினருக்கு எழுத்தாலும், பேச்சாலும் எழுச்சியும் உத்வேகமும் ஊட்டி வருகிறார் . கேள்வி : பொய்மையும் வாய்மையாகுமா? பதில் விரிவாக சொல்லிவிட்டு முடிப்பு எளிய உவமையுடன் முத்தாய்ப்பாக முடித்துள்ளார். உண்மை - மடியிலிருக்கிற பால். மெய்மை - கறந்த பால். வாய்மை - காய்ச்சிய பால். காய்ச்சிய பாலே பருகச் சிறந்தது. திருவள்ளுவரோடு ஷேக்ஸ்பியர் எப்படி பொருந்துகிறார் என்பதை நன்கு விளக்கி உள்ளார். ஷேக்ஸ்பியர் கருணை, அன்பு, மனிதநேயம், பாசம் போன்ற உயர்ந்த பண்புகளைப் பல பாத்திரங்களின் மூலம் சுட்டிக் காட்டுகிறார். அதே நேரத்தில் துரோகம், பொய் பேசுதல், அவா போன்ற தீயபண்புகளைக் கொண்ட பாத்திரங்களையும் அந்தப் பண்புகளால் அவர்கள் அடைகிற வீழ்ச்சியையும் சுட்டிக் காட்டுகிறார். திருவள்ளுவரைப் போல ஷேக்ஸ்பியரும் தனது பாத்திரங்களின் மூலம் அறத்தை வலியுறுத்துவதை அழகாக விளக்கி உள்ளார். கேள்வி : இடுக்கண் வருங்கால் நகுக என்கிறாரே வள்ளவர். துன்பம் நிகழ்கிறபோது அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல், பொதுவெளியிலும் நாம் துயரப்படுவதை வெளிக்காட்டாமல் புன்னகைக்கிறவர்களே தலைமைப் பண்புக்குத் தகுதியானவர்கள் ஆகிறார்கள். இதனை சொந்தவாழ்விலும் கடைபிடித்து வருபவர் நூலாசிரியர். அவரது அன்னை மட்டுமல்ல, வகுப்பாசியராகவும் இருந்து வளர்த்தெடுத்தவர் மறைந்தபோதும் சோகத்தை உள்ளே வைத்துக் கொண்டு, புறம் காட்டாதவர். பேசவும், எழுதவும் கற்றுத்தந்தவர் மறைந்தபோதும், எழுதிடச் சொன்னவருமான தந்தை மறைந்தபோதும், சோகத்தை வெளிக்காட்டி அழுது புலம்பாதவர். அப்பா இறந்த ஒரு வாரத்தில், எனது இரண்டாவது மகன் திருமணத்திற்கு வந்திருந்து நடத்தி வைத்தவர். அவர் வரமாட்டார் என்று தான் நான் நினைத்து இருந்தேன். ஆனால் முதல் நபராக வந்து நடத்தி வைத்துள்ளார். அப்படிப்பட்ட மாமனிதர் நூலாசிரியர். திருக்குறளை ஆய்ந்து படித்ததோடு மட்டுமன்றி, ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி, வாழ்விலும் கடைப்பிடித்து வரும் காரணத்தால் தான் நூலாசிரியர் இறையன்பு அவர்களால் ஆகச்சிறந்த மனிதராகவும், ஆளுமையாளராகவும் திகழ முடிகின்றது. அவரது வெற்றிக்கு மூலகாரணம் திருக்குறள் என்றால் மிகையன்று. பல கேள்விகளின் பதில்களில், திருவள்ளுவரும் ஷேக்ஸ்பியரும் ஒத்த கருத்துள்ளவர்களாக இருந்தனர் என்பதை உணர முடிகின்றது. கேள்வி-பதில் வடிவில் அமைத்தது நல்ல யுத்தி. படிப்பதற்கு எளிமையாகவும், மனதிற்கு சுகமாகவும் உள்ளது. கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு சிலை எழுப்பி, 25 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, தமிழக அரசும் ‘திருக்குறள் திருப்பணிகள்’ ஒரு வருடம் தொடர்ந்து நடத்தி வருகின்றன. சுனாமியால் கூட தொட்டுப் பார்க்க முடியாத அளவிற்கு வலிமையாக திருக்குறள் போலவே கலைஞர் அமைத்த திருவள்ளுவர் சிலையும் வலிமையாக, தென்னாட்டின் அடையாமாக வானளாவி உயர்ந்து நிற்கிறது. இருபத்திஐந்தாம் ஆண்டில் திருவள்ளுவருக்கு புகழ்மாலை சூட்டி உள்ளார். இந்த நூல் திருக்குறள் என்ற மகுடத்திற்கு பரிசுத்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது. பாராட்டுகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பசார், சென்னை-600 017.  விலை : ரூ. 180. *****        புதுக்கவிதை என்று சொன்னவுடன் அனைவரின் நினைவிற்கும் மோனையைப் போல முந்தி வந்து நிற்பவர் கவிஞர் மு. மேத்தா.  கவி வேந்தர் பட்டம், பரிசு, விருது, பாராட்டு என்று பல பெற்று இருந்த போதும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர், இனியவர், பண்பாளர், பந்தா எதுவும் இல்லாத மாமனிதர், பெரும்பாலும் அவர் மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்திப்பது உண்டு.  தொடர்வண்டி நிலையம் வரை சென்று வழியனுப்பியதும் உண்டு.        தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுடன் நான் உள்பட பட்டிமன்ற குழுவினர் அனைவரும், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் சென்னையில் உள்ள  இல்லத்திற்கு முன்அறிவிப்பு இன்றி சென்று இருந்தோம்.  அவர் சென்னைக்காரர்கள் போல இல்லாமல் பழங்கள் வழங்கி உபசரித்து கலந்துரையாடி வழிஅனுப்பி வைத்தார்.  அப்போது முனைவர் பட்ட ...

திருமண விழா.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

நன்றி .கவிஞர் பாரதி சுகுமாரன்

  நன்றி .கவிஞர் பாரதி சுகுமாரன் தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை கொண்டு... தமிழ் மொழியை முன்னெடுத்துச் செல்லும் பணியில் அமைப்புகள்... இயக்கங்கள்... களப்பணிகள்... என்று எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், திடீர் இலக்கியவாதியாகாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்ப்பணிச் செம்மல்களை அடையாளம் காட்டுவதே இப்பதிவின் நோக்கம். 2021 ஜனவரி 24 அன்று உலகத்தமிழ்ப் பண்பாட்டுச்சங்கம் நடத்தும் தமிழ் - தமிழர் எழுச்சி மாநாட்டில், உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவர்.பாவரசு.பாரதிசுகுமாரன் "தமிழ்ப்பணிச்செம்மல்" என்ற விருதினை இவர்களுக்கு வழங்கிட உள்ளார்* *மதுரை மாவட்டம், கவிஞர்.இரா.ரவி* *தமிழ்ப்பணியில் தம்மை முழுமைய ஈடுபடுத்திக்கொண்டு, விமர்சன வித்தகராகி, பல தமிழறிஞர்களின், படைப்பாளர்களின் நூல்களை ஆய்வு செய்து வருபவர், மதுரை மாவட்ட இலக்கிய உலகில் நன்கு அறியப் பட்டவர், அமைதியாக தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி ஹைக்கூ கவிதை உலகில் தனி முத்திரை பதித்து வரும் ரவி அவர்களுக்கு இவ்விருதை வழங்குவதில் மகிழ்கிறோம்* 1 R Ravi Ravi