வியாழன், 11 ஜூன், 2026
புகழ்வணக்கம்
சொந்த மண்ணில் சாய்கிறது இயக்குநர் இமயம்! தேனி வத்தலக்குண்டு பண்ணையில் பாரதிராஜா உடல் இன்று அடக்கம்!
பாரதிராஜா தனது 84-வது வயதில் கா*லமானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த திரையுலகமும் தமிழகமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. சென்னை நீலாங்கரையில் அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியதையடுத்து, அவரது உடல் இறுதிச் ச*டங்கிற்காகத் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்தப் பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் பாரதிராஜாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் கிராமத்து மண்வாசனையையும், யதார்த்த மனிதர்களின் வாழ்வியலையும் உலகத் தியேட்டர்களுக்கு கொண்டு சேர்த்த "இயக்குநர் இமயம்" பாரதிராஜா, தனது 84வது வயதில் கா*லமானார் என்ற செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனிக்கு கொண்டு செல்லப்பட்ட உடல்
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை என காலத்தால் அழியாத காவியங்களைப் படைத்த இமயத்தின் மறைவு, தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு பொன்னான அத்தியாயத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது. அவரது ம*றைவுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ள ஒரு உருக்கமான தகவல், திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி, கண்கலங்க வைத்துள்ளது.
பாரதிராஜாவின் ம*றைவுச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் தேனியை நோக்கித் தன் பார்வையை திருப்பியுள்ளது.
சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பாரதிராஜாவின் உடலுக்கு, தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பாரதிராஜா உடல் இன்று அடக்கம்
மேலும் பாரதிராஜாவோடு சினிமாவில் சரித்திரம் படைத்த இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், மூத்த நடிகர் சிவக்குமார், சூர்யா, இயக்குநர் பாக்யராஜ், மாரி செல்வராஜ் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட அரசியல், திரையுலகப் பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
இயக்குநர் இமயத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாளை ஒருநாள் மட்டும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாகத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
வத்தலகுண்டு பண்ணை
சென்னை நீலாங்கரை இல்லத்தில் நேற்று இரவு 9 மணி வரை பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், பிறகு அவரது சொந்த மாவட்டமான தேனிக்கு நள்ளிரவில் எடுத்துச் செல்லப்பட்டது.
தற்போது, வத்தலக்குண்டு அருகே கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள காட்ரோட் பகுதியில் அமைந்திருக்கும் அவரது சொந்தப் பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டு வந்து தங்களின் மண்ணின் மைந்தனுக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்..
சொந்த மண்ணில் நிரந்தர ஓய்வு
இந்தச் சூழ்நிலையில்தான், பாரதிராஜாவின் ம*றைவுக்குப் பின்னால் இருக்கும் அந்த உருக்கமான கடைசி ஆசை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் உள்ள தனது மகள் ஜனனியின் வீட்டில் பாரதிராஜா தங்கியிருந்தபோது, தனது இறுதிப் பயணம் குறித்து மிகவும் எதார்த்தமாகவும் உருக்கமாகவும் பேசினாராம்.
"நான் இறந்துவிட்டால், என் உடலை சென்னையில் வைக்கக் கூடாது, வத்தலகுண்டுவில் உள்ள என் தோட்டத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும்" என்று தனது மகளிடம் உருக்கமாகத் தனது கடைசி ஆசையைத் தெரிவித்துள்ளார்.
நகரத்தின் ஆடம்பரங்களை விட, தனக்கு முகவரியும் வாழ்வும் கொடுத்த கிராமத்து மண்ணையே தனது இறுதி ஓய்விடமாக அவர் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது அவரது மண் பற்றைக் காட்டுகிறது.
உறுதிசெய்த வைரமுத்து
பாரதிராஜாவின் உடல் அடக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து சொல்லும்போது, "பாரதிராஜாவின் உடல் அடக்கம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலக்குண்டு காட்ரோடு அருகேயுள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் என்று பாரதிராஜாவின். குடும்பத்தார் சார்பில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல பாரதிராஜாவின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடக்கும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி" என்றார்.
இதையடுத்து பாரதிராஜாவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டே, அவரது குடும்பத்தினர் உடலை வத்தலகுண்டு தோட்டத்திற்குத் கொண்டு வந்துள்ளனர்.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிச் ச*டங்குகள் மற்றும் உடல் அடக்கம், இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் வத்தலகுண்டு காட்ரோட் பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது. தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம், தான் நேசித்த அதே கிராமத்து மண்ணின் மடியில் இன்றுடன் நிரந்தரமாக ஓய்வெடுக்கப் போகிறது..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக