வியாழன், 11 ஜூன், 2026

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இயக்குனர் பாரதி ராஜா. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி புரட்சி செய்தவர். என் மீது மாறாத அன்பு கொண்டவர். மகன் மனோஜின் எதிர்பாராத மரணத்தால் துவண்டு போனவர். அதன் காரணமாக உடல் நிலையில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதி. சிறிது குணமானதும், அவரின் சூழ்நிலையை மாற்றுவதற்காக, மலேசியா கொண்டு செல்லப்பட்டார், என்று கேள்விப்பட்டேன். பின்பு, அவர் சென்னைக்கு கொண்டுவரப்பட்டார் என்று அறிந்து, அவரைப்பார்த்து விட பலவழிகளிலும் முயற்சி செய்தேன். முடியவில்லை. பழகியவர்களுடன் பேசினால் மீண்டும் அவருக்கு வேதனைகள் ஞாபகம் வந்து விடும் என்று எண்ணியதாலோ என்னவோ அவரிடமிருந்து அலைபேசியையும் எடுத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன். கடைசி வரை, அவரைப் பார்த்துப்பேசிவிட வேண்டும் என்ற என் எண்ணம் நிறைவேறவில்லை. இன்று அடுத்த பயணத்தை துவங்கி விட்டார். அங்காவது அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதைத்தவிர வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக