படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

*உலக மிதிவண்டி தினம்.,* கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக மிதிவண்டி மனிதர்களின் மிக எளிய மற்றும் அவசிய வாகனமாக இருப்பதையும், உடல் பருமன், உடல் கொழுப்பு, நீரிழிவு போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு, மிதிவண்டி உபயோகிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் 2018 ல் ஐ.நா. சபை மிதிவண்டி தினத்தை அறிவித்தது. மிதிவண்டி தினத்தைக் கொண்டாடுவதன் முக்கியத்துவம் என்னவென்றால், மக்களின் உடற்தகுதிக்கான இலக்குகளை நாம் உருவாக்க வேண்டும், மேலும் நமது சாலைகளையும், போக்குவரத்தையும் இரைச்சல் மற்றும் காற்று மாசுபாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும். உலக மிதிவண்டி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3 அன்று கொண்டாடப்படுகிறது. அடிப்படைப் போக்குவரத்து, அன்றாடப் பயணம் ஆகியவற்றிற்காக மிதிவண்டி ஓட்டும் பழக்கத்தை வளர்ப்பதற்கும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. உடற்தகுதியுடனும்,ஆரோக்கியத்துடனும் இருக்க விரும்பினால், உடற்பயிற்சியுடன், மிதிவண்டியும் முக்கியமானது. மிதிவண்டி என்பது ஒரு எளிய, மலிவான, நம்பகமான, தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த போக்குவரத்து சாதனமாகும். இந்த உலக மிதிவண்டி தினத்தில், நமது நினைவுகளை மிதிவண்டியில் பயணித்து, மிதிவண்டிகளை நமது வாழ்க்கை முறையின் ஒரு அங்கமாக மாற்றுவோம். பறவைகளின் பறத்தலுக்கு மிக நெருக்கமான உவமையாக நமக்கு தெரிந்த மிதிவண்டி ஓட்டுதல் இருப்பதை, நம் பள்ளிப்பருவத்தில் மிதிவண்டி ஓட்ட கற்றுக்கொண்ட அனுபவத்தை இன்றைய நாளில், நம் நினைவுக்கு கொண்டு வருவோம். நண்பன் சேட்டு தான் எனக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தவன். நான் நம்பிய அவன் அன்று கைவிட்டான், நான் விழாமல் ஓட்டுவேன் என்கிற நம்பிக்கையில். அவன் நம்பிக்கை வீண்போகவில்லை. இங்கிலாந்திலிருந்து சங்கர்

கருத்துகள்