வாழ்க்கையில் நாம் ஒரு படி மேலே உயரும்போது, அது கல்வியாகவோ, வேலையாகவோ அல்லது ஒரு நல்ல உறவின் மூலமாகவோ இருக்கலாம், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பார்வையில் ஒரு சிறு மாற்றம் தெரிவதை உணர முடியும்.
நமது இயல்பான ஒரு சிறிய அமைதிகூட, "அவருக்குத் தலைக்கனம் வந்துவிட்டது" என்று மற்றவர்களை நினைக்கத் தூண்டுகிறது. ஆனால் உண்மையான சூழ்நிலை என்னவென்றால்:
மற்றவர்களை விட அதிகம் படித்தவர்: அறிவைப் பெருக்கிக்கொள்ள முயல்கிறார், யாரையும் தாழ்த்திப் பார்க்க நினைப்பதில்லை.
நல்ல வேலையில் சேர்ந்தவர்: தன் பொறுப்புகளைச் சரியாகச் செய்யப் பாடுபடுகிறார், ஊர் பெருமைக்காக அல்ல.
வசதியான சூழலுக்கு மாறியவர்: தன் குடும்பத்தின் தரத்தை உயர்த்த நினைக்கிறார், பழைய உறவுகளை மறக்க அல்ல.
திறமையால் முன்னுக்கு வந்தவர்: உழைப்பின் பலனை அனுபவிக்கிறார், மற்றவர்களை ஏளனம் செய்ய அல்ல.
ஆக, ஒருவரின் வளர்ச்சி என்பது மற்றவர்களை விட்டு விலகிச் செல்வதல்ல, மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பதற்கே தொடர்ந்து போராடுகிறார். தன் முன்னேற்றத்தை விட, உங்கள் மீதான அவரது அன்பும் மரியாதையும் எப்போதும் மாறாது.
இதைப் புரிந்து வாழ்ந்தால் உறவுகள் இனிக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக