கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் மாலையிட்டு மரியாதை மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.3.6.2026

முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றம் சார்பில் மாலையிட்டு மரியாதை மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் அய்யன் திருவள்ளுவர் இலக்கியம் மன்றம் மாலை. சமூக நீதிக் காவலர் - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 03.06. 2026 புதன் காலை 10மணி அளவில் மதுரை சிம்மக்கல் சுற்றுச் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அய்யன் திருவள்ளுவர் இலக்கிய மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்வில் மன்றத்தின் பொருளாளர் "அகவை முதிர்ந்த தமிழறிஞர் " திரு. க.வெ. நெடுஞ்சேரலாதன், துணைத் தவைர்கள் திரு. டி.வி. அழகர், திரு. ச. செல்வக்குமார், துணைச் செயலாளர் திரு. லெ. முருகேசன், செயற்குழு உறுப்பினர்கள் திரு. ப. பாண்டித்துரை, நிழற்படவல்லுநர் திரு. ரெ. கார்த்திகேயன், .திரு. இல. வெள்ளைச்சாமி, சிறப்பு அழைப்பாளர்கள்.. புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் " பெரியார் நெறியாளர் " திரு. பி. வரதராசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் திரு. இராம. வைரமுத்து, ம.தி.மு.க தொழிற்சங்கப் பேரவைத் தலைவர் திரு. மகபூப்ஜான், குறும்பா கவிஞர் திரு. இராம. இரவி, திரு. கருப்பு ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தன.

கருத்துகள்