பன்முகப் பேராற்றல் மிக்க இனியவர் எழுத்தாளர் சிந்தனையாளர் சிறந்த வாசிப்பாளர் தமிழ்நாடு அரசு தீயணைப்புத் துறை உயர் அலுவலர் பணியாற்றி அண்மையில் பணி நிறைவு பெற்ற கோ. ஏகாம்பரம் பாராட்டு விழாவில் மதுரை காளவாசல் தங்கம் கிராண்ட் ஹோட்டல் மாநாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற இனிய நிகழ்வு.
பன்முகப் பேராற்றல் மிக்க இனியவர் எழுத்தாளர் சிந்தனையாளர் சிறந்த வாசிப்பாளர் தமிழ்நாடு அரசு தீயணைப்புத் துறை உயர் அலுவலர் பணியாற்றி அண்மையில் பணி நிறைவு பெற்ற கோ. ஏகாம்பரம் பாராட்டு விழாவில் மதுரை காளவாசல் தங்கம் கிராண்ட் ஹோட்டல் மாநாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்ற இனிய நிகழ்வு. இலக்கிய நண்பர்கள் எழுத்தாளர்கள் அரசுப் பணியாளர்கள் சின்னத் திரை பெரிய திரை நட்சத்திரங்கள் கவிஞர்கள் எனப் பண்பட்ட பெருமக்களின் வாழ்த்து மழை. மதுரை உலா நற்பணி மன்ற நிறுவனர் மற்றும் தலைவர் ரெ. கார்த்திகேயன் தலைமையில் மதுரை மேனேஜ்மெண்ட் அசோசியேசன் பொறியாளர் சண்முகசுந்தரம் நெறிப்படுத்தி நடத்திய விழாவில் கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் பண்பட்ட பேருள்ளம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகையில் தான் அரசுப் பணியில் மிகப் பெரிய பொறுப்பில் இருந்தாலும் எங்கும் எப்போதும் இயல்பாக இருக்கும் எளிய நண்பர். பல்வேறுபட்ட மனிதர்கள் பேரன்பைப் பெற்று மாநகர் மதுரைக்கு ஒரு புதிய முகமாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பயணப்படும் பண்பாளர். யாரிடமும் முரண்படாமல் நேர்த்தியாக வாழும் கலை ஏகாம்பரத்தின் தனித் தன்மை. ஏராளமான நண்பர்களை நமது கார்த்திக் மூலம் பெற்றிருப்பதும் அதனை மிகச் சரியாகப் பயன்படுத்தி அவர்களுக்கும் முன்மாதிரியாகத் திகழ்வது கூடுதல் சிறப்பு. அன்னைத் தமிழுக்கு அயராது உரம் சேர்த்திடும் உள்ளம் இவர். மிகுந்த பேரன்புடன் உள்ளன்புடன் பழகும் தன்மை இவரது பலம் என்றார். முன்னதாக தியாக தீபம் அ. பாலு, கவிஞர் கோ, வானொலி சதீஷ், மணியம்மை பள்ளி வரதராஜன், திரைப்படக் கலைஞர் ஜெ. விக்டர், நல்லாசிரியர் ஜான் பெலிக்ஸ் கென்னடி, வே. சுவாமிநாதன், த. பரந்தாமன், வீ. ஆதிசிவத் தென்னவன், வீ. காளீஸ்வரன், பொன் பாண்டி, கவிஞர் இரா. இரவி, மீ. ராமசுப்பிரமணியன், சு. பாலகிருஷ்ணன், குடந்தை ரகுநாதன், பி. தங்கமணி, அசோக்குமார், செந்தில்குமார், நஜ்முதீன், எஸ்டி. சுப்பிரமணியன், மூத்த பத்திரிகையாளர் ஆர். கணேசன் , ரப்பர் ஸ்டாம்ப் ராமன், கலாம் சுப்பிரமணியன், மணிகண்டன், ராஜசேகர் உள்ளிட்ட பலர் மின்னல் வேகத்தில் வாழ்த்துரை வழங்கினர். தமிழால் இணைந்து தொடர்ந்து நம் செம்மொழிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் இந்த விழா நமது மதுரையில் நடைபெற்றது எல்லா வகையிலும் சிறப்பு. வாழிய நண்பர் உயர்திரு.ஏகாம்பரம்

கருத்துகள்
கருத்துரையிடுக