வியாழன், 11 ஜூன், 2026
புகழ்வணக்கம்
வெள்ளித் திரையில் வெண்பா எழுதியவனே..
உனது ஒவ்வொரு படைப்பும் வாசிக்கப்பட வேண்டிய காவியம்!
நேசித்து நாங்கள் பாராட்டிய திரைக்கருவூலங்கள்!
என் இனிய தமிழ் மக்களே என்று தொடங்கும் உன் திரைப்படம்
வெறும் திரைகளில் ஓடிவெற்றி பெற்றதன்று! – அவை
மனித மனங்களில் இன்றும் நிலைத்த பொக்கிஷங்கள்!
தமிழ் சினிமாவிற்கு புதிய பாதை வகுத்தளித்தவனே!
சீர்மிகு குரலால் சிந்தைகளைக் கொள்ளையடித்தவனே!
யாருக்கு வரும் உந்தன் சிறப்புத் தோற்றமும் இயக்கமும்!
அறிவுக் கண்ணை மட்டும் வைத்து நீ திரையளக்கவில்லை..
அன்பின் ஜுவாலையில் வடித்த பாத்திரங்கள் – மனக்
கண்களைவிட்டு என்றும் நீங்குவதேயில்லை!!
முதல் மரியாதை, வேதம் புதிது.. இவையெல்லாம்
"உன் அடிமனதில் முளைத்த கற்பகவிருட்சங்கள்!"
இயக்குனர் இமயம் என்று
உன்னை அழைத்து மகிழ்ந்தோமே...
இன்று அந்த இமயம் சரிந்தாலும்
அதன் நிழலில் வளர்ந்த
கலைவனங்கள் அழியாதே!
16 வயதினிலே முதல்.. உன்
ராஜாங்கம் தமிழ்மண்ணில் பற்பல ஆண்டுகளாய்!
"உன் உதவி இயக்குநர்கள் பலர்
உச்சங்களைத் தொட்டுள்ளனர்!"
குரங்கு பொம்மை முதலான படங்களில்
உன் செறிவான நடிப்பும் உண்டு!
கரிசல்காட்டு மண்ணின் வாசம் மாறாமல்..
நகரங்களுக்கும் சேர்த்து விருந்து வைத்தவன்!
விண்ணிற்குச் சென்றாயோ விந்தைகள் புரிய!
வணங்கி விடைதருகின்றோம் பாரதிராஜாவே!
காவிரிமைந்தன்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக