மதுரை வாசகர் வட்டம் நூல் வெளியீடு மற்றும் நினைவஞ்சலிக் கூட்டம், வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பாளர் பா. சண்முகவேலு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். சென்ற மாத வாசகர் வட்டச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜி. ராமமூர்த்தி அறிக்கை அளித்தார். வானதி இராமனாதன் வாழ்த்துரை வழங்கினார்.
மதுரை வாசகர் வட்டம் நூல் வெளியீடு மற்றும் நினைவஞ்சலிக் கூட்டம், வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பாளர் பா. சண்முகவேலு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். சென்ற மாத வாசகர் வட்டச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஜி. ராமமூர்த்தி அறிக்கை அளித்தார். வானதி இராமனாதன் வாழ்த்துரை வழங்கினார். மருத்துவர் தினேஷ் குமார், கவிஞர் இரவி எழுதிய "இறையன்பு கருவூலம்" நூலை வெளியிட்டு மதிப்புரை வழங்கினார். அவர் தான் மதிப்புரையில், 22 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் என்றும், அரிய தகவல்களை தாங்கி வந்துள்ளது என்றார். இவையெல்லாம் பல்கலை மாணவர்களுக்கு பயன்படும் செய்திகள் என்றார். இந்நூல் அவருக்கு அணியும் சிறிய பூமாலை என்றார். கவிஞர் இரவி எழுதிய "கு. ஞானசம்பந்தன் கருவூலம்" என்ற நூலை வெளியிட்டு, தமுஎகச பாஸ்கரன் தன் மதிப்புரையில், அங்குசாமி என்ற இயற்பெயர் கொண்ட ஞானசம்பந்தன், சிறு வயதில் தந்தையின் மூலம் தேவாரம், திருவாசகம் கற்றுத் தெளிந்தார். அவர் தந்தை வாழ்க்கையில் சிக்கனத்துடன் வாழவும் கற்றுக் கொடுத்துள்ளார். தமிழ் தேனீ மோகன் பற்றிய தகவல்களையும் கொடுத்துள்ளார். தமிழறிஞர் ஆறுமுக நாவலர் தான் ஞானசம்பந்தன் என்று பெயரிட்ட வரலாற்றையும் கூறினார். நூலாசிரியர் இரவி ஏற்புரை வழங்கினார்.
நூலாசியர் கவிஞர் இரா. இரவியின் இணையர் ஜெய் சித்ரா சமீபத்தில் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்ததை ஒட்டி நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில், பெரியார் தொண்டர் வரதராஜன், பேரா. முத்து சிதம்பரம், ஆசிரியர்கள் செந்தூரன், அழகுராஜ், வாசகர் பிரியதர்சினி, தோழர் பன்னீர் செல்வம் போன்றோர் அஞ்சலி செய்தி வாசித்தனர். பா. சண்முகவேலு நன்றி கூறினார்.






கருத்துகள்
கருத்துரையிடுக