படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

தன் வாழ்நாளை பெண்கல்விக்காகவே அர்ப்பணித்த இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை " சாவித்ரிபாய் பூலே" அவர்களின் நினைவுகளைத் தொட்டு , கரண்டியை பிடுங்கிவிட்டு கைகளில் புத்தகம் தாருங்கள் என்கிற புரட்சியை முன்பே முன்னெடுத்தவரின் பின்வந்த கல்வியின் திறவுகோல் கொண்டு தங்கள் வாழ்வை மாணவர்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பேரன்பு வாழ்த்துக்களும் நன்றிகளும்..💐🙏 அரசுப்பள்ளியில் கல்வியை மட்டுமல்ல சமூகத்தை, சக மனிதர்களை நேசிக்கக் கற்றுத்தந்த எங்கள் ஆசிரியர்கள். போஸ், பேகம் டீச்சர், தயாளன் சார், சாந்தி டீச்சருக்கு நன்றி..🙏❤. கல்வி என்பது மதிப்பெண் பெற வைப்பதில்லை, வாழ்வை கற்க வைப்பதும், சிறந்த மனிதனாக வாழ வைப்பதும் கூட. முதலில் நல்ல மனிதனாக, நல்ல மாணவனாக, நல்ல நட்பாக, நல்ல துணையாக , வீட்டையும் சமூகத்தையும் நேசிப்பவர்களாக உருவாக்குவது மட்டுமே கல்விக்கான முழு வெற்றி. கல்வி வியாபாரமாகிவிட்ட சூழல் மாறவேண்டும். அரசும் பெற்றோர்களும் இணைந்து மாற்றத்திற்கு வழிவகுக்கவேண்டும் என்கிற பேராசையோடு, " ஆசிரியர் தின வாழ்த்துகள் " 💐💐. -பா.மகாலட்சுமி-

கருத்துகள்