உரைகல்லின்உரைக்கோவை
********************************************
பொறியாளர் தினம் செப்டம்பர் 15
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
**விஸ்வேஸ்வரய்யா - பொறியாளர்... பிறந்ததினம் செப்டம்பர் 15
**இவரின் பிறந்த நாளை இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாப்படுகிறது.
**விஸ்வேஸ்வரய்யா - மேட்டூர் அணை வரக் காரணமான பொறியாளர்...
**எம். விஸ்வேஸ்வரய்யா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் .
** பாரத ரத்னா விருதைப் பெற்ற ஒரே பொறியாளர்.
**இவர் பொறியாளர்களின் பொறியாளர்', "இந்திய நீர்மின் திட்டங்களின் தந்தை'
பிறப்பிடம்
^^^^^^^^^^^^
விஸ்வேஸ்வரய்யா 1860 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் சிங்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.பெற்றோர் சீனிவாச சாஸ்திரி- வெங்கடலக்ஷ்மியம்மா .இவர் எளிய குடும்பத்தில் பிறந்தார்.
கல்வி
^^^^^^^
சிக்கபல்லபுராவில் தொடக்கக் கல்வியைக் கற்றார் விஸ்வேஸ்வரய்யா. பின்னர் இவரது குடும்பத்தினர் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தார்கள்.விசுவேசுவரய்யாவின் மூதாதையர்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கிட்டலூருக்கு அருகிலுள்ள மோக்சகுண்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.அதனால் இவரின் மூதாதையர்கள் வாழ்ந்த ஊரை மறக்காமல் இருப்பதற்காக மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா என்று இவரை அழைத்தனர் . தனது 15-ஆம் வயதில் தந்தையை இழந்தார்.
உயர்கல்வி
^^^^^^^^^^^^^
இவர் தந்தையை இழந்த பின்னர் இவரது குடும்பம் வறுமையில் வாடியது.இவர் பிள்ளைகளுக்கு டியுஷன் எடுத்து தன் கல்வியை தொடர்ந்தார். இவர் பெங்களூரில் உயர்நிலைப் பள்ளிவரை படித்தார். அதைத் தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றார் பூனாவில் ஒரு அறிவியல் கல்லூரியை ஆங்கிலேயர் நடத்தி வந்தனர். அங்கு பொறியியல் கல்லூரியில் சிவில் பொறியியல் கல்விக் கற்றார்..1883 நவம்பரில் பொறியியல் கல்வியை முடித்தார்.இவர் சிவில் பொறியியல் துறையில் தங்கப்பதக்கம் பெற்றார்.பெர்க்லே விருது பெற்றார்.
பணி
^^^^^^
ஆங்கிலேய அரசின் பொதுப்பணி துறையில் 1884 மார்ச்சில் மும்பையில் பொதுப் பணித் துறையில் அரசு வேலையில் சேர்ந்தார். இதற்குப் பிறகு இந்திய நீர்ப்பாசன ஆணையத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு பணியாற்றினார்.
குடிநீர் பஞ்சம் தீர்தல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இவர் பணியில் அமர்ந்த உடன் செய்ய முதல் பணி குடிநீர் பஞ்சத்தைத் தீர்த்தது. காண்டேஷ் மாகாணத்தில் துலியா காட்டாறு அடிக்கடி ஆற்றுவெள்ளம் மூலம் சொல்லொண்ணாத் துயரங்களை மக்களுக்குத் தந்தது. ஆங்கிலேயே அதிகாரிகளால் மதயானை என்றழைக்கப்பட்ட அந்த ஆற்றின் உபரி நீரைக் கொண்டு காண்டேஷ் மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்கள் முழுவதும் குடிநீர் பஞ்சத்தைத் தீர்த்தார்.
தானியங்கி மதகு
^^^^^^^^^^^^^^^^^^^^
ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு நீரைகொண்டு போய் சேர்க்கும் பைப் சிபானை வடிவமைப்பை உருவாக்கினார்.இவர் வெள்ள நீரால் அணையைக் காப்பாற்றும் விதமாக அணையில் தானியங்கி மதகுகளை முதன்முதலில் வடிவமைத்தார். இந்த மதகுகளை 1903-ல் புனே அருகில் உள்ள கடக்வாசல நீர்த்தேக்கத்தில் நிறுவினார். இதன் வெற்றிகரமான செயல்பாடு காரணமாக இதே வகை மதகுகள் கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நிறுவப்பட்டது.
சிந்து நதியிலிருந்து நீரை அருகிலிருந்து ஒரு மலையிலிருந்த பெரிய குளத்துக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து குழாய்கள் மூலம் அப்பகுதியின் குடிநீர்ப் பஞ்சத்தைத் தீர்த்து வைத்தார்.
நவீன வடிகால் அமைப்பு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இவர் ஹைதரபாத் நகரில் நவீன வடிகால் அமைப்பை உருவாக்கினார். ஹைதராபாத்தில் இவர் மேற்கொண்ட பணிகள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.
கடல் அரிப்பு தடுக்க திட்டம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விசாகப்பட்டினத்தின் கடலோரப் பகுதிகளைக் கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க அவசியமான திட்டங்களைச் செயல்படுத்தியதில் இவர் முக்கியப் பங்காற்றினார்.
வெள்ளத்திலிருந்து மக்களை பாதுகாக்க வெள்ளதடுப்புமுறை அமைப்பையும் மற்றும் துறைமுகங்களை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் தடுப்பு அமைப்பையும் வடிவமைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
ஆசியாவில் மிகப்பெரிய நீர்தேக்கம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஆசியாவிலேயே மிகப்பெரிய நீர்தேக்க அணைகளில் ஒன்றாக கருதப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணையை காவிரியின் குறுக்கே உருவாக்கி பெரும் புகழ் பெற்றார்.மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் நீர் மின் உற்பத்தி ஆலை அமைக்கவும் உறுதுணையாக இருந்தார்.
தொழில் நிறுவனம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இவர்1912 ஆம் ஆண்டு, மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார்.மேட்டூர் அணை வரக் காரணமான பொறியாளர்..மாநில கல்வி மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கு உழைத்தார். ஸ்ரீ ஜெயசாமராஜெந்திரா பாலிடெக்னிக், மைசூர் பல்கலைக்கழகம், சாண்டல் எண்ணை நிறுவனம், உலோக தொழிற்சாலை, குரோமிய வழி பதனிடுதல் தொழிற்சாலை, பத்ராவதி இரும்பு மற்றும் ஸ்டீல் தொழிற்சாலை, கர்நாடக சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம், பெங்களுரு அரசு பொறியியல் கல்லுரி என பல நிறுவனங்கள் உருவாகக் காரணமாக இருந்தார்.
பொறியியல் கல்லூரி நிறுவுதல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1917 ல் பெங்களூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க காரணமானார். பின்பு இது விசுவேசுவரய்யா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப் பொறியியல் கல்லூரி பெங்களூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.இந்த பல்கலைக்கழகம் பெங்களூர், குல்பர்கா, மைசூர் ஆகிய இடங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது.
1923 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராகவும் பணியாற்றினார். 1934 ஆம் ஆண்டு, ‘இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்’ என்ற நூலை எழுதினார். விசுவேசுவரய்யா. பொருளாதாரத் திட்டமிடுதலை கூறிய முதல் அறிஞர்.
இவர் எழுதிய நூல்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
** இந்தியாவின் மீள்கட்டமைப்பு (1920)
** திட்டமிட்ட இந்தியப் பொருளாதாரம் (1934)
** கிராமங்களைத் தொழில் மயமாக்குதல் பற்றியும் இந்திய நாட்டுத் தொழில் வளர்ச்சிப் பற்றியும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் சில நூல்கள் எழுதினார்.
விருதுகள்
^^^^^^^^^^^^
**1904 ஆம் ஆண்டு “லண்டன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் சிவில் இன்ஜினியரிங்கில்” கௌரவ உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
**1921 ஆம் ஆண்டு டி.எஸ்சி-ல் முனைவர் பட்டம் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது.
**இந்திய அறிவியல் நிறுவனத்தில் “ஃபெல்லோஷிஃப்” வழங்கப்பட்டது.
**1923 ஆம் ஆண்டு இந்திய அறிவியல் காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
**1931 ஆம் ஆண்டு எல்.எல்.டி-ல் முனைவர் பட்டம் மும்பை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.
**1937 ஆம் ஆண்டு டி.லிட்-ல் முனைவர் பட்டம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது.
**1943 ஆம் ஆண்டு இந்திய பொறியியல் நிறுவனத்தின் கௌரவ உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.
**1955 ஆம் ஆண்டு இந்திய அரசின் மிகஉயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
** இவரை பொறியாளர்களின் பொறியாளர்' என்றும் "இந்திய நீர்மின் திட்டங்களின் தந்தை' என்றும் அழைத்தனர்.
மறைவு
^^^^^^^^^
தன்னுடைய ஓய்வுக்குப் பிறகும் கடுமையாக உழைத்தார். நூறு வயத்திற்கும் மேல் அயராது பாடுபட்ட எம். விஸ்வேஸ்வரய்யா 1962 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 ஆம் தேதி தன்னுடைய நூற்றியொன்றாவது வயதில் காலமானார்.
நினைவுச் சின்னங்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
**விசுவேசுவரய்யா தொழில் துறை மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சி யகம், பெங்களுரு.
**விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் கர்நாட மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் நிலையான மாதிரி உருவங்களைக் கொண்டிருக்கும். இங்கு காட்சிப்பொருட்களுடனான இடைவினைகளின் மூலம் அறிவியலின் பல்வேறு விடயங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் இதனை ஒரு அறிவியல் மையம் என்றும் அழைக்கப்படுகிறது.
**விசுவேசுவரய்யா தொழில்நுட்பப் பல்கலைகழகம் (தலைமையகம், பெல்காம்)
**விசுவேசுவரய்யா தேசிய தொழில் நுட்பக் கழகம்,நாகபுரி மராட்டிய மாநிலம்.
விசுவேசுவரய்யா இரும்பு எக்கு தொழிற்சாலை, பத்ராவதி

கருத்துகள்
கருத்துரையிடுக