நிலா ! கவிஞர் இரா .இரவி !

நிலா ! கவிஞர் இரா .இரவி ! மீன் கடித்தும் சிதையவில்லை குளத்து நிலா ! சிறுவனின் கல் உடைந்தது சில நொடி குளத்து நிலா ! குளத்தில் முகம் பார்த்தது நிலா ! தமிழரின் கண்டுபிடிப்பு ஈரமுள்ள நிலா ! பார்க்கப் பரவசம் பார்த்தால் பிரமாண்டம் நிலா ! கிராமத்தின் தெரு விளக்கு மாதத்தின் நாள் கணக்கு நிலா ! ஆம்ஷ்ட்ராங் கால் பட்டது அனைவரின் கண் பட்டது நிலா ! தேய்ந்து வளர்ந்து மாயம் காட்டி துன்பம் இன்பம் கற்பித்தது நிலா ! தொலை தூரத்தில் இருந்தாலும் நெஞ்சத்தின் அருகில் நிலா ! கவிஞர்களின் கருப்பொருள் கவிதைகளின் அட்சயப்பாத்திரம் நிலா ! கண்டு ரசிக்க கவலை நீக்கும் நிலா ! சூரிய ஒளியை உண்டு உமிழும் நிலா ! உலகில் உவமை இல்லா உயர்வு நிலா !

கருத்துகள்