படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

வணக்கம் ஐயா! மதுரை மாநகரில் மேலக்கோபுரத்தெருவில் உள்ள " நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்" வாசகர் வட்டம் சார்பில் மாதந்தோறும் நடக்கும் இனிய எளிய விழாவில் அழைப்பின் பேரில் சாதாரண பார்வையாளராக இன்று 5/9/2026 சனி மாலையில் கலந்து கொண்டு சிறந்த நூல்கள் பற்றிய உங்கள் / எங்கள் நண்பர் & ஹைக்கூ கவிஞர் திரு.இரா.ரவி அவர்களின் ( முதுபெரும் முனைவர் I.AS அதிகாரி & முன்னாள் தலைமை செயலாளர் ஆக பணியாற்றி தற்போது நல்ல எழுத்தாளர் ஆகவும் விளங்கும் திரு இறையன்பு அவர்கள் எழுதிய " சிறுகதைகள் புதிய நூல் பற்றிய விழிப்புணர்வு விமரிசன கருத்துக்கள் பதிவு செய்தவர்)யதார்த்தமான உண்மையான சிறப்பான விமரிசனம் மற்றும் முனைவர் & நூலகர் திரு.ந.முருகேசபாண்டியன் அவர்களின் விமரிசனம் (பேராசிரியர் முனைவர் திரு மா.ஆனந்தகுமார் எழுதிய நூல் பற்றிய விமரிசன கருத்துக்கள் பதிவு) இன்றைய நிலையில்" மதுரை பற்றிய பழைய வரலாறு பதிவுகள் எல்லாம் உலகெங்கும் பரவ காரணமாக அமையும் நல்ல நூல் விமரிசன கருத்தரங்கு கூட்டம் நடத்தி நாவல் பற்றி விபரம் தகவல்கள் அனைத்தையும் புதிய அணுகுமுறை யில் நல்ல விளக்கம் அளித்து பதிவு செய்து உள்ள நல்ல திறனாய்வு ஆய்வாளர்கள் கருத்துக்கள் எல்லாம் எதிர்கால இளைய தலைமுறையினர் மத்தியில் குறிப்பாக மாணவ மாணவிகள் இளைஞர்கள் அனைவரும் விரும்பும் வகையில் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட புதிய புதிய நூல்கள் எல்லாம் கல்வி அறிவு பெற்று நல்ல " வாசிப்பு பழக்கம்" தொடர வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ஆதரவு ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்கி வரும் மதுரை " நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்" மேலாளர் திரு.நா.கிருஷ்ணகுமார் மற்றும் நிர்வாகிகள் திரு அ.கிருஷ்ணமூர்த்தி & திரு.இரா.மகேந்திரன் ஊழியர்கள் ஒத்துழைப்பு உடன் இணைந்து புரிந்துணர்வு கொண்டு தலைமை ஏற்று விழாவை வெற்றிகரமாக நடத்திய கவிஞர் திரு " பேனா" மனோகரன் அவர்களின் யதார்த்தமான பேச்சுக்கலையுடன் தொடர்ந்து ஆதரவு வழங்கும் கவிஞர் திரு மு.செல்லா மற்றும் ஒளி ஓவியர் திரு.கார்த்திகேயன் மற்றும் கலந்து கொண்ட இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறி மகிழும் குடந்தை ரகுநாதன் மதுரை

கருத்துகள்