தர்மலிங்கம்
இல் பதிவிட்டுள்ளார்வாங்க... பேசலாம்..!
நதியோடு விளையாடு
அழகிய ஜீவ நதியாம் காவிரி நதி கரையோரம் வாழ்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்
காவிரிநதி என்பது வெறும் நீரோட்டம் மட்டும் அல்ல
அது தர்மபுரி, சேலம், நாமக்கல்,கரூர், திருச்சி,தஞ்சாவூர், கும்பகோணம், நாகர்கோவில் ஊள்ளிட்ட மாவட்ட மக்களின் உயிரோட்டம்
குடகு மலையில் பிறந்து பள்ளத் தாக்குகளைக் கடந்து வயல்களைத் தழுவி ஊர்களுக்கு வளம் சேர்த்து இறுதியில் கடலோடு கலக்கும் காவிரி நதியின் பயணம் மனித வாழ்க்கையைப் போன்றது
அதனால்தான் காவிரி நதியைப் பார்க்கும்போது நமக்குள் ஒரு மகிழ்ச்சியும் அமைதியும் பிறக்கிறது
பொதுவாக நதியோடு விளையாடு என்ற வார்த்தையே நம் குழந்தைப் பருவ நினைவுகளைத் தூண்டுகிறது
ஆற்றங்கரையில் ஓடி விளையாடிய நாட்கள்
தண்ணீரில் கால்களை நனைத்து மகிழ்ந்த தருணங்கள் கற்களை எடுத்து எறிந்து அலைகளை ரசித்த நேரங்கள் என நதியோடு நமக்கு இருக்கும் உறவு மிகவும் பழமையானது
நதிக்கரையில் அமர்ந்து அதன் ஓட்டத்தைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம் நதி ஒருபோதும் ஒரே இடத்தில் நின்று விடுவதில்லை பல தடைகள் வந்தாலும் அவற்றைத் தாண்டி தனது பாதையைத் தேடிக்கொண்டு செல்கிறது அதுபோலத்தான் மனித வாழ்க்கையும் எத்தனை தடைகள் வந்தாலும் பயணத்தைத் தொடர வேண்டும் என்பதைக் கற்றுத் தருகிறது
நதியின் நீர் விவசாயத்தின் உயிர்
வயல்கள் பசுமையாக மாறுவதற்கும், உணவு உற்பத்தி பெருகுவதற்கும் பெரும் பங்கு வகிக்கின்றது எண்ணற்ற கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் குடிநீர் வழங்குகின்றன நதியைச் சார்ந்து வாழும் மக்கள் விவசாயிகள் மீனவர்கள் என பலருடைய வாழ்க்கையும் நதியுடன் பின்னிப் பிணைந்துள்ளது
இன்று நதிகள் பல இடங்களில் மாசுபட்டு வருகின்றன குப்பைகள்
கழிவுநீர்
பிளாஸ்டிக் போன்றவை நதியின் இயற்கை அழகையும் உயிர்ச்சூழலையும் பாதிக்கின்றன
நதியில் குப்பை வீசாமல் இருப்பதும் நீரை வீணாக்காமல் இருப்பதும் கரையோரங்களில் மரங்களை வளர்ப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்
நதியோடு விளையாடுவது என்பது அதன் நீரில் மட்டும் குதித்து மகிழ்ந்து அதன் ஓட்டத்தை ரசிப்பதோடு அல்லாமல் அதனை இயன்ற வரை மாசு படுத்தாமல் எதிர்கால தலைமுறைக்கு பாதுகாத்து தருவது நமது தலையாய பொறுப்பாகும்
நதி நமக்குச் சொல்லும் மிகப்பெரிய பாடம் ஒன்று உண்டு
நின்றுவிடாதே தொடர்ந்து பயணம் செய்
கற்களும் தடைகளும் வந்தாலும் நதி தனது பயணத்தை நிறுத்துவதில்லை அதுபோல நாமும் வாழ்க்கையின் சிரமங்களைக் கடந்து முன்னேற வேண்டும்
நதியை நேசிப்போம் நதியைப் பாதுகாப்போம் அதன் கரைகளைத் தூய்மையாக வைத்திருப்போம் குழந்தைகளுக்கு நதியின் அருமையைச் சொல்லிக் கொடுப்போம்
நதியோடு விளையாடுவோம்
நதியை அழிக்காமல் காப்போம்
நதியைப் போலவே வாழ்க்கையிலும்
தொடர்ந்து பயணிப்போம்...
அருமையான தலைப்பு தந்த அன்பு சகோதரர் முகமது நூர் அலி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி...!!!

கருத்துகள்
கருத்துரையிடுக