27.09.2026. மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு ,பேரவையும் ,புரட்சிப் பாவலர் மன்றமும் இணைந்து மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் &தொடக்கப்பள்ளியில் ஐம்பெரும் நடத்தினர்
27.09.2026. மாமதுரைக் கவிஞர் பேரவையின் நிறுவனர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு ,பேரவையும் ,புரட்சிப் பாவலர் மன்றமும் இணைந்து மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் &தொடக்கப்பள்ளியில் ஐம்பெரும் நடத்தினர்
.தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது .பேரவையின் தலைமைப் பொறுப்பாளர் ஆதிசிவத் தென்னவன் வரவேற்றார் .செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .,புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர் பெரியார் நெறியாளர் பி .வரதராசன் அவர்கள் ,சமூகசேவகர்கள் தியாகதீபம் பேரவை அ.பாலு ,குடந்தை ரகுநாதன் ,சுற்றுச்ச்சுழல் பாதுகாவலர் மீ .இராமசுப்ரமணியன் ,நல்லாசிரியர் சு .நாகவள்ளி,துப்பாக்கி சுடுவதில் மாநிலஅளவில் வென்ற ச .பிரதீசு ராகவ் ஆகியோருக்கு பொன்னைப் போர்த்தி விருதுகள் வழங்கினார் .
கவிஞர் பா .பழனி எழுதிய " உறவுகள் பலவிதம் " கட்டுரை நூலை திருமதி வீர .செந்தாமரை சியாமளாதேவி வெளியிட பி .வரதராசன் பெற்றுக் கொண்டார். கவிவித்தகர் பொற்கைப் பாண்டியன் முன்னிலை உரையாற்றினார் ,நிலா இலக்கிய மன்றம் கவிக்குயில் இரா .கணேசன் ,மதுரை இலக்கிய பேரவையின் தலைவர் சண்முக திருக்குமரன் வாழ்த்துரை வழங்கினார்கள் .
சிந்தனைக் கவியரங்கம் .50.
பேரவையின் தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில்
" ஏடா தமிழா -உனக்கு இன்னும் உறக்கமோ ? என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது .கவிஞர்கள் இரா .இரவி ,கு .கி .கங்காதரன் ,கி. கோ .குறளடியான் ,பொன்பாண்டி ,வீரபாகு ,அரங்ககிரிதரன் ,ரெஜினாபானு ,அ.முரளிதரன் ,கண்ணன் ,சோ .தமிழன்பன் ,கு பால் பேரின்பநாதன் ,ந .சுந்தரம் பாண்டி ,அ.அழகையா,சங்கரநாராயணன் ,ஜோ .மகாலட்சுமி மித்ரா ,பா .பழனி ,ச .லிங்கம்மாள் ,பா .ஜெயசீலன் ,அஞ்சூர்யா ஜெயராமன்,முகமது இப்ராஹிம் ,இந்திரா காந்தி ,நா .குருசாமி ,ச .ராஜஸ்ரீ ,சே .நிறைமதி ,பா .பிரசன்னா,முத்துராஜா ,இளையான்குடி இதயத்துல்லா ,முனியாண்டி ,கி .காயத்ரி ,முனைவர் ஸ்ரீவித்யா பாரதி ,கமலா சந்திரசேகர் மதுரை மைந்தன் ஆகியோர் கவிதை பாடினார்கள் .
"தமிழ் எங்கள் உயிருக்கு மேல் " என்ற தலைப்பில் நடந்த கவிதை போட்டிக்கு நூறு கவிதைகள் வந்தன .ஐவருக்கு பரிசும், பத்துப் பேருக்கு ஊக்கப்பரிசும்,பத்துப் பேருக்கு ஆறுதல் பரிசும் ,எழுபத்திஐந்து பேருக்கு பதக்கமும் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களையும் தமிழன்னை தமிழ்ச்சங்கத்தின் தலைவர் கருங்கல் கி .கண்ணன் அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார் .துணைச் செயலர் கு .கி ..கங்காதரன் நன்றி கூறினார் .மதுரை உலா ரெ.கார்த்திகேயன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்

கருத்துகள்
கருத்துரையிடுக