ஹலோ பண்பலை F .M.வானொலி நிகழ்ச்சியை கேட்டுவிட்டு அறிஞர்கள் நண்பர்கள் எழுதிய கருத்துகள் .
தங்கள் வாழ்க்கையை அழகாக அருமையாக வானொலி மூலம் ஒலிபரப்பியமைக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள். மோகன்தாஸ் இ.ஆ.ப.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எனக்கொரு சந்தேகம் இருந்தது. அதனாலேயே குரல் பதிவை அனுப்பச் சொன்னேன். மே மாதம் முழுவதுமாக நீங்கள் அனுப்பியிருந்த பலனச் செய்திகளைப் பார்த்தேன். எந்த இடத்தும் சகோதரியின் இறப்பைப் பற்றித் தகவலாகக்கூட எதுவும் காணோம். மே 14 அன்று சண்டக்கோழி படத்தில் ராஜ்கிரணிடம் நான் பேசுகிற வசனத்தை அனுப்பியிருக்கிறீர்கள்! திரும்ப, 18 ஆம் தேதியிலிருந்து உங்கள் செய்திகள் வருகின்றன. அந்தத் தகவல் மட்டுமே இல்லை. எப்படிப் பரிந்துகொள்வது? நீங்கள் உங்கள் சித்திரத்துடன் முப்பத்திநான்கே கால் ஆண்டுகள் மகிழ்வுடன் வாழ்ந்திருக்கிறீர்கள். நான் என் செண்பகத்துடன் பதினேழே கால் ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தேன். அதனால்கூட தகவல் சொல்லவில்லையா? நானும் 28 அரை ஆண்டுகளாக என் செண்பகத்தின் நினைவுகளைச் சுமந்துகொண்டு ' உள்ளமெலாம் நிறைந்திருந்தும் உயிர்மீட்கும் திறனறியேன்! உங்கள் கற்பனைக்கு உயிரூட்டும் காரியங்கள் நானறிவேன்' என்று என்னை நானே இயக்கிக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் அப்படியானவராய்த்தான் தெரிகிறீர்கள். நமக்குப் பிடித்த முறையில் இந்தச் சமூகத்திற்காகச் செயற்பட்டுக் கொண்டே இருப்போம்! அறமே சிறக்க! நலமே சூழ்க!🙏 பேராசிரியர் மு.இராமசாமி
------------------------------------------------------------------------------------------------------------------------------------
வணக்கம் பிரதர் முழுவதுமாக கேட்டேன் நெகிழ்வாக இருந்தது. பகிர்ந்து கொள்ள ஒரு தளம் கிடைத்ததும் அதை நீங்கள் கண்ணியமாக பயன்படுத்திக் கொண்டதும் மிகச் சிறப்பு. உங்கள் மனவலியை உணர முடிகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வலிகள். அதை பகிர்ந்து கொள்ள நட்பு இருப்பதும் கரிசனத்தோடு கேட்பதும் பேறு. அந்தப் பேற்றினை பெற்றிருக்கிறீர்கள். அமைதியும் மகிழ்ச்சியும் என்றும் நிரந்தரமாகட்டும் பிரார்த்தனைகளுடன்... ப திருமலை.எழுத்தாள
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பேரன்புமிக்க எழுத்தாளர் இரா இரவி அவர்களுக்கு
தங்கள் வாழ்விணையரை நீங்கள் எப்படி நேசித்து இருக்கிறீர்கள் என்பதை உணர்வுபூர்வமாகவும் எதார்த்த பதிவு செய்திருக்கிறது சிறப்பாக இருக்கிறது தன் இணையரை சக மனுசியாக பாவிக்கும் மாண்பு நாத்திக குணம் கொண்டவர்கள்தான் அதிகம் இருக்கும் அதே சமயம் அவர்களின் சுதந்திரத்தில் எந்த விதத்திலும் நாம் தலையிடக்கூடாது என்பதையும் உணர்ந்தவர்கள் தான் நாத்திகர்கள்
அப்படி நீங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைபாதையின் நின்று கொண்டு உங்கள் இணைகளின் சுதந்திரத்திற்கும் இடம் கொடுத்திருப்பது அவர் மீது நீங்கள் வைத்திருக்கும் பேரன்பை காட்டுகிறது
எழுத்துக்கும் வாழ்விற்கும் கொள்கைக்கும் இடையில் எந்தவித சமரசம் இல்லாமல் வாழும் வாழ்க்கை தான் கவிஞர். இரா.இரவி அவர்களின் வாழ்க்கை என்பது ஒரு நண்பராக தோழராக மகிழ்கிறேன்
ஒரு நாத்திகன் தான் முழுமையான மனிதாபிமானி ஒரு நார்த்திகன் தான் உயிர்களின் நேசன் அதை முழுமையாக வாழ்வது இந்த காலகட்டத்தில் கடினமான ஒன்று அதையும் நீங்கள் அன்போடு கடந்திருக்கிறீர்கள் என்பது வாழ்வின் அர்த்தத்தை திடப்படுத்துகிறது
உங்களின் தொடர் செயல்பாடுகளை கண்டு கேட்டு உணர்ந்து இருக்கும் என்னைப் போன்ற தோழன் உங்கள் கரங்களை பற்றிக்கொள்கிறேன்
நிறைந்த நேசத்துடன் கவிஞர் கவிவாணன்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------மகிழ்ச்சி .தோழர் . .
உங்க துணைவியைப் பற்றிய நெகிழ்வான சம்பவங்கள் சிறப்பு. கவிஞர் மகாலெட்சுமி. த.மு.எ.க.ச.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
இரவி சார் கனத்த இதயத்துடன் இதையும் கடந்து வாங்க. உங்களுக்காக ஹைக்கூ உலகமே காத்திருக்குது. உங்கள் மனைவியின் நினைவுகளுடன் உங்கள் பணியை தொடர்ந்து ஆற்றிட என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். நன்றி சார். புனிதா. மனிதநேயம் மன்றம்
--------------------------------------------------------------வணக்கம் கவிஞர் இரா.ரவி அவர்களே,
ஹலோ எஃப்எம் பண்பலையில் செல்வ கீதா அவர்களின் குரலில் உங்களுடைய வாழ்க்கை வரலாறு மிக அழகாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாகவே இரவு நேரத்தில் ஹலோ எஃப்எம் கேட்பது வழக்கம். அவர்களுடைய வழக்கமான கதை அம்சத்தோடு கூடிய அவருடைய குரல் வளத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கை சரிதமும் பற்பல அனுபவங்களும் மிக அழகாக அனுபவச் செறிவோடு பதிவு செய்யப்படும். அவருடைய குரல் வளத்திற்காகவே அந்தக் கதைகளை நான் கேட்பது உண்டு. பல சமயங்களில் தவிர்க்க முடியாமல் ஹலோ fm கேட்க முடியாது போனதுண்டு. நேற்று தவறவிட்ட அந்த ஒலிப் பதிவை கேட்கக்கூடிய வாய்ப்பை இப்போது கொடுத்த உங்களுக்கு எனது நன்றி. உங்கள் அன்பு மனைவி சித்ரா அவர்கள் நினைவில் வாழும் உங்களுடைய எண்ணப் பதிவுகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் செல்வ கீதா..
இந்த பதிவை வழங்கிய ஹலோ fm வானொலிக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி கவிஞர் 🙏🏻கவிஞர் ஜி.மஞ்சுளா. ------+++
அன்புடன் கவிஞருக்கு வணக்கம்
நீங்கள் உங்கள் வரிகளால் அழ வைக்கிறீர்கள் செல்வ கீதா மேடம் அவர் குரலால் அப்படியே இதயங்களை பிழிந்து எடுத்துவிட்டார்.
சித்ரா மேடத்தை ஒரு செய்தியாக பார்ப்பவர்களை விட நேரில் பார்த்த எனக்கு மிகவும் மன ம் வேதனை பட்டுவிட்டது. தெரிந்தோ தெரியாமலோ உங்களுடைய வருத்தமான நேரங்களை போக்குவதற்கான மருந்தை நீங்களே அதில் சொல்லி இருக்கிறீர்கள் ஆம் பழைய நினைவுகளை புதுமை மாறாமல் அசைபோட்டு பார்க்கும் பொழுது அந்த எண்ணம் மிக மிக சுவையாக இருக்கும். வருத்தப்படாதீர்கள் என்று சொல்வதற்கு முடியாது வருத்தப்படுகின்ற நேரத்தில் மனதை இனிமையாக்க பழைய நினைவுகள் கை கொடுக்கட்டும். மாண்புமிகு மனைவி கவிதை தொகுப்பாக வெளி வருகிறதா? நிச்சயம் ஒரு மனதை விட்டு அகலாத போற்றுதலுக்குரிய நூலாக இது அமையப்போகிறது என்பதில் ஐயமில்லை.கவிஞர் குமாரிலெட்சுமி. வேளாண் அலுவலர் ( விருப்ப ஓய்வு)
-------------------------------

கருத்துகள்
கருத்துரையிடுக