மூன்றாம் பார்வை அறக்கட்டளை, அகவிழி பார்வையற்றோர் விடுதி, அழகர் கோவில் மெயின் ரோடு, மதுரை கிழக்கு, மதுரை தமிழ்நாடு, இந்தியா.

படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் ஆகஸ்ட் 15.08.2026 அன்று, தமிழ்நாடு மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள நமது மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் 80வது இந்திய சுதந்திர தின விழா நடைபெற்றது. அதிகாலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய நிகழ்வில் திருமதி. வனிதா தலைவி IMAGE WOMAN'S ASSOCIATION மற்றும் பல நிர்வாகிகள் சிங்கராயர் காலனி பொதுமக்கள் உயர்த்திரு. தமிழ் செம்மல். கவிஞர். இரா. ரவி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரைகளையும் சுதந்திர தின விழா சிறப்புகளையும் எடுத்துரைத்தனர். இந்நிகழ்வில் நம் விடுதியின் மாணவர்களும் கலந்து கொண்டு திருக்குறள், பழமொழி , பொது அறிவு மற்றும் தனித் திறன்களை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். நாட்டுப்பற்றுடன் ஒற்றுமையோடும் சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும் வாழ ஒரு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பல சுதந்திரப் போராட்ட தியாகிகளின் நினைவுகளையும், திறங்களையும் ,பற்றி விழிப்புணர்வு பெற்று தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது. மேலும் அனைத்து மக்களுக்கும் மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையாற்றோர் விடுதியின் சார்பாக இனிய 80 வது சுதந்திர தின விழா வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி. மூன்றாம் பார்வை அறக்கட்டளை, அகவிழி பார்வையற்றோர் விடுதி, அழகர் கோவில் மெயின் ரோடு, மதுரை கிழக்கு, மதுரை தமிழ்நாடு, இந்தியா.

கருத்துகள்