படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

ஜெயந்தி அங்கப்பன் இல் பதிவிட்டுள்ளார்ஓஷோ தமிழ் ஒலி ( இயற்கையைப் பார், இயல்பான வாழ்வு, இயல்பான அன்பு, எதையோ தேடி எங்கோ போவதில்லை எதுவும்! பூமிக்கு வா! இயல்பாக இரு! கிடைத்த வாழ்க்கையை இழந்துவிடாமல் முழுதாய் வழி நட! மனதின் பேராசைக்கு முக்தியடைவயும் தீனி போடாதே! மனதை விட்டு இதயம் வா! வாழ்வின் வானவில்லை அன்புக்கண் கொண்டு அனுபவித்து ரசி! புலன் சுவை துய், அறிவுக் கூர்மை அறி, நட்புநாடி நனை, பாசச் சிறையைப் பார்! இந்தக் கண நேரமும் மாறும் வாழ்வின்…….. அன்பிலும் அழகிலும் கரைந்து ஒன்றி விடும் கணங்களில், நீ அனுபவிக்கிறாயே….. ஒரு துளி ஆனந்தச் சுவை, இந்த சுவையிலிருந்து பிறக்க வேண்டும்……. உன் ஆர்வமும் தாகமும், அதுவே வழி நடத்தும் ஆரம்பம்! இப்போதுள்ளது பேராசை, அதிகத்தை, அதிகாரத்தை நாடும் அகங்காரம், அதற்கு வழியாய் ஆன்மீகத்தில் சாதிக்க நினைக்கும் தந்திரம்! ஆகவே……. தேடுவதை விடு, அன்பு கொள், வாழு, சிரி! அதிசயம் நடக்கும், பரவசம் பிறக்கும், வாசல் திறக்கும்.

கருத்துகள்