மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பாக நடத்தப்படும் அமைதி சங்கம் மற்றும் சார்ஜா கிரீன் கிளோப் நிறுவனமும் இணைந்து சிறப்புக் குழந்தைகளுக்கான கதை சொல்லல் மற்றும் மரம் நடும் விழாவை நடத்தியது.
மதுரை, காந்தி நினைவு அருங்காட்சியகம் சார்பாக நடத்தப்படும் அமைதி சங்கம் மற்றும் சார்ஜா கிரீன் கிளோப் நிறுவனமும் இணைந்து சிறப்புக் குழந்தைகளுக்கான கதை சொல்லல் மற்றும் மரம் நடும் விழாவை நடத்தியது. இந்நிகழ்வுகளுக்கு சார்ஜா கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் தலைமை தாங்கி சிறப்பித்தார். ரேஸ்கோர்ஸ் தாமரைத் தொட்டி பூங்காவில் அமைந்துள்ள சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் கதை சொல்லல் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு கதை சொல்லி சரவணன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கதைகள் கூறி மகிழ்வித்தார். இந்நிகழ்விற்குப் பின் சிறப்பு குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மதிய உணவு கீரின் குளோப் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி, நல்லாசிரியர் சிவராமன், சிவா மற்றும் அமைதி சங்கத்தின் குழந்தைகள் பலரும் கலந்து கொண்டனர். சார்ஜா கிரீன் கிளோப் நிறுவனர் ஜாஸ்மின் அவர்கள் பேசும்போது ஒவ்வொரு ஆண்டும் சார்ஜாவில் இருந்து வரும் பொழுதும் பிறந்து வளர்ந்த மதுரை மண்ணிற்கு தொண்டு செய்வதை கடமையாக கொண்டுள்ளேன் அந்த வகையில் இந்தமுறை சிறப்பு குழந்தைகளுக்கு கதை சொல்ல நிகழ்வும் உணவு வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. குழந்தைகள் முகத்தில் பூக்கும் புன்னகை பார்க்கும் போது கடவுளின் சிரிப்பை கண்டேன். சரவணன் அவர்கள் குழந்தைகள் நிலையில் இறங்கி சிறப்பு குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி எளிய கதைகள் கூறும்போது வியந்து பார்த்தேன். குழந்தைகள் கதைகள் ஊடாக பயணிப்பதும்,, கதை சொல்லி சரவணனுடன் பேசுவதும் மனநிறைவான நிகழ்வாக அமைந்தது. மாணவர்களிடம் இயற்கை சார்ந்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை காக்கவும் கற்றுக் கொடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து அமைதி சங்க குழந்தைகளுடன் இணைந்து மரம் நடு விழாவை நடத்தி வருகின்றோம். சென்ற முறை நட்டு வைத்த மரங்களை வளர்ந்து இருப்பதை பார்க்கும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் போகிறது இந்த முறையும் 50க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வைத்துள்ளோம் அடுத்த முறை இவை வளர்ந்து இருக்கும் இதற்கு உறுதுணையாக இருக்கும் காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் செயலர் நந்தராவ் அவர்களுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் தொடர்ந்து எங்களோடு இணைந்து செயல்படும் அமைதி சங்கத்தின் தலைவர் சரவணன், காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் கல்வி அலுவலர் நடராஜன் அவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். சிறப்பு பள்ளியின் முதல்வர் சந்திரசேகர் அவர்கள் நன்றி கூறினார்






கருத்துகள்
கருத்துரையிடுக