படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

சென்னை தினம் - சிறுகுறிப்பு* சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள். இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூறப்பட்டு வருகிறது. கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும். வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது. சென்னைக்கு இன்று 387 ஆவது வயது. திருவொற்றியூர் (தேவாரம்), திரு மயிலை (தேவாரம்) , திருவல்லிக்கேணி (திவ்வியபிரபந்தம்) , திருவான்மாயூர் (தேவாரம்), கேளம்பாக்கம், திருவிடவந்தை (திவ்வியப் பிரபந்தம்), திருப்போரூர், செம்மணஞ்சேரி, திருப்பெரும்பூதூர் போன்ற ஒவ்வொரு கிராமமும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உடையவை. தேவாரங்கள் திவ்வியப் பிரபந்தங்கள் இயற்றப் பட்ட காலம் கி.பி 6–8 நூற்றாண்டு வரை. இந்த சமய இலக்கியங்களை வைத்து கணக்கிட்டாலே சென்னை 1400 ஆண்டுகள் பழையது. தாராளமாக சென்னை 2000 ஆண்டு பழையது என்று சொல்லலாம். 1998ல் கருணாநிதி அவர்கள் "மெட்ராஸ்" என்ற அரபு மொழிப் பெயரை சென்னை என்று பெயர் மாற்றி தன் "தமிழ் பற்றை" பறை சாற்றினார். உண்மையில் மேற்படி மகத்தான கிராமங்களில் ஒன்றின் பெயரை எடுத்து சென்னைக்கு "திருமயிலை" "திருவான்மியூர்" என்று ஏதாவது பெயர்தான் வைத்திருக்க வேண்டும். சென்னையின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் வளர்ச்சியைப் போற்றும் வகையில் சென்னை தினம் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிற இந்த நாளில்.., நமது நகரின் வரலாற்றையும் பெருமையையும் அறிந்து, அதைத் தூய்மையாகவும் அழகாகவும் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இங்கிலாந்திலிருந்து சங்கர்🎋

கருத்துகள்