Sarojini R
பெண்மை ஒரு வரம்...
மாதராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டும்....
இது நூற்றுக்கு. உண்மை....
பெண் இல்லை என்றால் உலகில் எதுவுமே இல்லை.
என் பெண் பிறந்த பொழுது நாங்கள் இந்த உலகத்திலேயே இல்லை ஒரு சொர்க்கத்தில் மிதந்தது போன்ற உணர்வை பெற்றோம்...
பெண் என்பவள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்
பெண்னின் மடி மென்மையானது தான் ஆனால் மலையிலும் வலிமையானது....
தான் வலிமையான வள் என்பதை காட்டிக் கொள்ளாமல் பிறர் வாழ்க்கையில் வசந்தத்தை தெளிப்பவள்...
தான் உடைந்தாலும் குடும்பத்தை உடையாமல் பார்த்துக் கொள்ளும் உன்னதமானவள்
பிறர் காயங்களுக்கு கனிவென்னும் மருந்து பூசி....
பிறர் கண்ணீருக்கு தன் மனதை தொட்டில் ஆக்கிக் கொள்பவள் ஒரு அன்னையாக...
பெண்கள் ஒரு கையில் கண்ணீரை துடைத்துக் கொண்டே ஒரு கையில் மற்றவர்கள் கனவுகளுக்கு வண்ணம் தீட்டுபவாள்... ஒரு தன்னலமற்றவளாக....
பூவில் இதழில் உறங்கும் மென்மையும் புயலின் வேகத்தை விழிகளில் தாங்கும் வீரமும் ஒன்று கலந்தவள்....
எத்தனை வரங்களும்ஒன்றாக கலந்த ஒரு உன்னதமான பிறப்பு பெண்மையின் பிறப்பு....
பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள்... பெண் பிள்ளைகள் இருப்பதால் வீடு அழகாகிறது பெண்களால் நாடே அழகா இருக்கிறது....
பெண்களால்தான் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் இதை ஆண்களுக்கு எப்போதும் உதாரணமாக சொல்ல மாட்டார்கள்...
ஆதலால் பெண்மை மிக அழகான வரம் என்பதை எங்கள் குடும்பத்தில் என் மகள் பிறந்த பொழுது நாங்கள் கண்ட மிகப்பெரியஉண்மை...
மிகவும் அழகான தலைப்பினை தந்த தோழமை
செ.இலட்சுமணக்ககுமார் அவர்களுக்கு மிக்க நன்றி...

கருத்துகள்
கருத்துரையிடுக