படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

திருவோணம் - ஒரு பார்வை* கேரள ராஜ்ஜியத்தை மாவலி என்ற மாமன்னன் ஆண்டு வந்த ஆட்சிக்காலம் ஒரு பொற்காலமாக இருந்திருக்கிறது. இதை விரும்பாத தேவர்கள் எனப்படும் பூசுரர்கள் மகாவிசுணுவிடம் முறையிட, விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து மாவலி மன்னனை மண்ணோடு மண்ணாகும்படி வதைத்து விடுகிறது. மாவலி மன்னன் உயிர் விடும்போது மகாவிஷ்ணுவிடம் கேட்ட வரத்தின் மூலம் அவர் நினைவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதாக சொல்லப்படுகிறது. நல்லாட்சி நடத்திய மாவலி மன்னனை வஞ்சகத்தையே வாழ்வாகக் கொண்டவர்கள் சூழ்ச்சியால் அழித்து விட்டாலும், நன்றியுணர்வோடு கேரள மாநில மக்கள் அந்த மாவலி மன்னனின் புகழ் போற்றி, வீடுகளை அலங்கரித்து, வாசலில் அத்தப்பூ கோலமிட்டு, ஆண்டுதோறும் ஓணம் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். சங்கத்தமிழர்களின் பெருவிழா எனவும், அது தமிழர்களிடம் வழக்கொழிந்து இன்று அவர்களது கோயில்களில் மட்டுமே நிலைபெற்றிருக்கிறது எனவும் கருத்து நிலவுகிறது. இது தமிழர்களின் மரபில் கொண்டாடும் பண்டிகை திருவிழா என்று பண்டைய இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. பல நாகரிகங்களை, பல பண்டிகைகளை கற்று தந்த தமிழர்களே மறந்த பிறகும் தமிழ் வழியில் வந்தவர்கள், முன்னெடுத்து கொண்டாடுவது தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தான். இன்றைய நாகரிகம், பண்பாடுகளை, பண்டை திருவிழாக்களை ஓரங்கட்டி மறக்கடித்து, மழுங்கடித்து கொண்டிருக்கிறது என்பது வேதனையளிக்கிறது. அதேசமயம் கேரள மக்கள் தங்கள் பண்பாட்டின் அடையாளமாக இன்றுவரை கொண்டாடி வருவது ஆறுதளிக்கிறது. ஆக மலையாளிகள் மட்டுமல்ல இத்தேசத்தின் தெய்வீக ஞானமரபினை, இந்த மண் சொல்லிய மிகபெரிய தத்துவத்தை, அராஜகம் அத்துமீறினால் தெய்வம் இறங்கிவந்து அதை சரிசெய்யும் எனும் மாபெரும் நம்பிக்கையினை கொடுக்கும் இந்த விழாவினை ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் கொண்டாடலாம். *இனிய ஓண பண்டிகை வாழ்த்துகள்* இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கருத்துகள்