படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

லூர்து 1961 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே சென்னையில் அவருக்கு சிலை திறந்து வைத்தார் பாரத பிரதமர் நேரு அவர்கள் உயிரோடு இருக்கும் யாருக்கும் சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கையில் நேரு உறுதியாக இருந்தார் ஆனால் இந்த கொள்கைக்கு மாறாக நடக்க வேண்டிய சூழ்நிலை நேருவுக்கு ஏற்பட்டது சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த திமுக வை சேர்ந்த வி முனுசாமி என்பவர் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்தவர் இவர் சென்னை மாநகராட்சியில் பெருந்தலைவர் காமராஜருக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினார் ஆனால் காமராஜர் சிலையை திறந்து வைக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நேருவை தமிழக அமைச்சராக இருந்த சி விசுப்பிரமணியம் அவர்கள் சந்தித்து கேட்டு கொண்டார் தனது கொள்கைக்கு எதிராக இருந்தாலும் காமராஜர் சிலையை திறக்க பாரத பிரதமர் நேரு அதற்கு ஒப்புக்கொண்டார் சென்னையில் அரசு பேருந்து போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு எதிரில் காமராஜரின் முழு அளவு வெண்கல சிலை நிறுவப்பட்டது 1961-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவில் பாரத பிரதமர் நேரு கலந்து கொண்டு காமராஜரின் சிலையை திறந்து வைத்து காமராஜருக்கு புகழ் மாலை சூட்டி பேசினார் ‌ மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் காமராஜரின் சிலையை நான் திறந்து வைக்க வேண்டும் என்று சி சுப்பிரமணியம் என்னிடம் வந்து சென்னை மாநகராட்சியின் சார்பில் கேட்டபோது இந்த அழைப்பை ஏற்று கொள்வதில் எனக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது எனது நெருங்கிய நண்பரான காமராஜ் உருவ சிலையை திறந்து வைக்கும் இந்த விழாவில் நான் கலந்து கொள்ள விரும்பிய போதிலும் வாழுகின்ற தலைவர்களுக்கு சிலை வைக்க கூடாது என்று நான் கூறி வந்திருப்பதாலேயே எனக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டது எனது மனதில் மிகப்பெரிய போராட்டமே ஏற்பட்டது இறுதியாக இந்த விழாவில் கலந்து கொள்வது என்று முடிவு செய்து நான் வந்து விட்டேன் நாட்டில் பல தலைவர்களுக்கும் காமராஜருக்கும் நிறைய வித்தியாசம் உண்டு காமராஜரின் தலைமை என்பது தனி சிறப்பு பெற்றதாகும் காமராஜர் மக்களிடையே இருந்து மக்களின் தலைவராக தோன்றி மக்களுக்காக பணிபுரிந்து வருகின்றார் முன்பெல்லாம் ஒரு ஜாதியை சேர்ந்தவர்கள் தான் தலைவராக திகழ முடிந்தது ஆங்கிலம் படித்தவர்கள் தான் அந்த ஜாதியினர் (பிராமணர்) அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவார்கள் அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் மக்கள் கேட்டு கொண்டார்கள் இதை மக்களுக்கு புரியக்கூடிய நமது தேசிய மொழிகளில் தான் பேச வேண்டும் என்று காந்தியடிகள் அப்போதே வற்புறுத்தினார் காமராஜர் ஆங்கிலத்தில் பேசுவதை நல்ல முறையில் புரிந்து கொள்வார் ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலும் காமராஜர் பெற்றிருக்கிறார் அவர் என்னுடன் ஆங்கிலத்தில் தான் பேசுவார் ஆனாலும் அவர் ஆங்கிலம் படித்தவர்கள் என்ற ஜாதியை சேர்ந்தவர் இல்லை காமராஜரின் தலைமை நாட்டுக்கு புதுமையானது காமராஜர் ஆற்றல்மிக்க ஒரு தலைவராக விளங்கி கொண்டிருக்கிறார் இப்படி அவர் ஒரு முன்மாதிரி தலைவராக இருக்கின்றார் தொண்டராக பொது வாழ்க்கையை துவக்கி தமது உழைப்பால் உயர்ந்த அவருக்கு உருவச்சிலை எழுப்பியது மிக பொருத்தமானதாகும் எனவே இந்த விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அடைகிறேன் அவர் நீண்ட காலம் வாழ்ந்து நாட்டிற்கு தொண்டு புரிய வேண்டும் என்று விரும்புகிறேன் என்று புகழ் மாலை சூட்டி நேரு காமராஜர் சிலையை திறந்து வைத்தார் 7 அடி உயரமுள்ள இந்த வெண்கலையை உருவாக்கிய ஆர் வெங்கடேசனுக்கு நகரசபை சார்பில் நேரு ஒரு வெள்ளி கோப்பையை பரிசளித்தார் இந்த சிலை 11 ஆயிரம் செலவில் அப்போது தயாரிக்கப்பட்டது தேசிய கீதத்திற்கு பிறகு சுமார் 300 அடி தூரத்தில் இருந்து சிலையை நோக்கி நடந்து சென்று சிலையை பார்வையிட்டார் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காமராஜர் சிலையை நின்று பார்த்து கொண்டே இருந்தார் இந்த விழாவில் ஆளுநர் மேதி மத்திய அமைச்சர் டாக்டர் சுப்பராயன் அமைச்சர்கள் என் பக்தவச்சலம் சி சுப்ரமணியம் கக்கன் மாணிக்கவேலு லூர்தம்மாள் சைமன் மேலவை தலைவர் பி வி செழியன் சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் பக்தவச்சலு நாயுடு ஆகியவர்களும் நகர சபை காங்கிரஸ் கட்சி தலைவர் டாக்டர் சீனிவாசன் உறுப்பினர்கள் நகர பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள்

கருத்துகள்