30/08/2026 மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் 49 தலைப்பு : எங்கும்தமிழ் எதிலும் தமிழ் என்றாகவேண்டும் ! ுகைப்படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கைவண்ணம்

30/08/2026 மாமதுரைக் கவிஞர் பேரவை சிந்தனைக் கவியரங்கம் 49 தலைப்பு : எங்கும்தமிழ் எதிலும் தமிழ் என்றாகவேண்டும் ! மதுரை வடக்கு மாசி வீதி, மணியம்மை மழலையர் தொடக்கப் பள்ளியில் நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மன்றத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். மன்றத்தின் தலைவர் பேராசிரியர் சி . சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. துணைத் தலைவர் இரா.வரதராஜன் முன்னிலை வகித்தனர். ஆதிசிவத் தென்னவன் வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் இரா.கல்யாணசுந்தரம்,நன்றி கூறினார். கவிஞர்கள் இரா.இரவி, இரா.கல்யாணசுந்தரம், இரா.வரதராஜன், , கி.கோ.குறளடியான், சுந்தரம்பாண்டி, பால் பேரின்பநாதன், முனியாண்டி, அஞ்சூர்யா செயராமன், மு, இதயத்துல்லா, சோ.தமிழன்பன், பா.பழனி,க .கலையரசன் , கவிதாயினிகள் , லிங்கம்மாள், போ .சத்யா ,முனிவர் ந .வாசுகி ஆகியோர் கவிதை படித்தனர். கவிஞர்கள் க .கலையரசன் ,பா .பழனி இருவரும் இணைந்து எழுதிய "ஆவணத் தமிழ் மொழி " நூல் வெளியிட்டனர். நூலாசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து 'கவிமாமணி சி.வீரபாண்டியத் தென்னவன் விருது' வழங்கினர். சிறப்பாக கவிதை பாடிய தமிழன்பன், இருவருக்கும் பரிசு வழங்கப்பட்டன. மாதாமாதம் கவியரங்கம் நடத்துவதற்கு பள்ளியைத் தந்து உதவும் புரட்சிப்பாவலர் மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் அனைவரும் நன்றி கூறினார்கள். புகைப்படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கைவண்ணம்.

கருத்துகள்