" தமிழ்த் தென்றல் " திரு.வி.க அவர்களின் பிறந்த நாள் அய்யன் திருவள்ளுவர் இலக்கியம் மன்றம் மாலை அணிவித்து மரியாதை. எழுபது ஆண்டுகள் தமிழ்த் தென்றலாய் தவழ்ந்து - தமிழர்களுக்கு குளிர் தரும் தருவாக தமிழ் மண்ணில் வாழ்ந்த திரு.வி.க அவர்களின் 144 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அய்யன் திருவள்ளுவர் இலக்ககிய மன்றம் சார்பில் 26. 08. 2026 காலை 10 மணி அளவில் மதுரை மணியம்மை மழலையர் பள்ளியில் "தமிழ்த் தென்றல்" திரு.வி.க அவர்களின் திருவுருவப் படத்திற்கு இலக்கிய மன்றத் தலைவர் திரு. என்.எம். மாரி அவர்கள் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் " பெரியார் நெறியாளர் " திரு.பி. வரதராசன் அவர்கள் புகழுரை ஆற்றினார். நிகழ்வில் மன்றத்தின் துணைத் தலைவர்கள் திரு. டி.வி. அழகர், திரு. ச. செல்வக்குமரன், துணைச் செயலாளர் திரு. லெ. முருகேசன், செயற்குழு உறுப்பினர்கள் திரு. இல. வெள்ளைச்சாமி, திரு. எஸ். வரதன், திரு. ப. பாண்டித்துரை சிறப்பு அழைப்பாளர்கள் குறும்பா கவிஞர் திரு. இரா. இரவி, திரு. கோ. கருப்பு, திரு. முத்திருளன், திரு. மனோகரன் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தன











கருத்துகள்
கருத்துரையிடுக