முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
23.8,2026.பனைவிதைகள் நடும் விழா மதுரை, கோசாகுளம் கம்மாயில் மாணவர் தன்னார்வலர்கள் இயக்கம் மூலமாக 1000 பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமிழ் செம்மல் இரவி தலைமை தாங்கி முதல் பனை விதை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். வழக்கறிஞர் ஜமாலுதீன் மற்றும் ஊக்குவிக்கும் கலாம் வல்லரசு கார்த்தி முன்னிலை வகித்தனர். ஆசிரியரும் சமூக ஆர்வலமான நூருல்லாவின் வழிகாட்டுதலின்படி மாணவர் தன்னார்வலர் இயக்கம் மாணவ மாணவிகள் கோசாகுளம் கம்மாயின் இருபுறங்களிலும் முதல் கட்டமாக 1000 பனைவிதைகள் நட்டு வைத்தனர். அப்துல் ரஹ்மான் மாணவர்களை ஒருங்கிணைத்து நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஊர் தலைவர்கள், பகுதி வாழ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தன்னார்வ மாணவர்களுக்கு கவிஞர் இரா.இரவி தன் நூல்களை வழங்கிப் பாராட்டினார்
கருத்துகள்
கருத்துரையிடுக