நூல் :- கலைமாமணி கு.ஞானசம்பந்தன் கருவூலம், வருடம் 2026. நூலாசிரியர்:- கவிஞர் இரா.இரவி. வெளியீடு : வானதி பதிப்பகம். நூல் மதிப்புரை: ப.மகேஸ்வரி, பிரிவு அலுவலர், பாரதியார் பல்கலை, கோவை

நூல் :- கலைமாமணி கு.ஞானசம்பந்தன் கருவூலம், வருடம் 2026. நூலாசிரியர்:- கவிஞர் இரா.இரவி. நூல் மதிப்புரை: ப.மகேஸ்வரி, பிரிவு அலுவலர், பாரதியார் பல்கலை, கோவை. வெளியீடு வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு ,தியாகராயர் நகர் ,சென்னை 600 017. தொலைபேசி 044 24342810/24310769 பக்கம் 68 விலை ரூபாய் 70 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com அனுதினமும் தமிழ் சார்ந்த, நூல்கள், நிகழ்வுகள், கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், நூல் மதிப்புரைகள் என்று நேரிடையாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்து கொண்டே இருக்கும் கவிஞர் இரவி அவர்கள் தனது அடுத்த முயற்சியாக அவர் மிகவும் விரும்பும் பேராசிரியர் எழுத்தாளர், நடிகர், பட்டிமன்ற நடுவர் என பன்முகம் கொண்ட முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் நூல்களுக்கு தான் எழுதிய மதிப்புரைகளைத் தொகுத்து கலைமாமணி கு.ஞானசம்பந்தன் கருவூலம்" எனும் நூலாக வெளியிட்டுள்ளது சிறப்பு. கலைமாமணி முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் ஒன்பது நூல்களுக்கு கவிஞர் இரவி அவர்கள் அவ்வப்போது மதிப்புரை கொடுத்து வந்துள்ளார்கள். சினிமாவுக்கு போகலாம் வாங்க" நூலில் சினிமா குறித்த அத்தனை விசயங்ளையும் தவறாமல் மிகசுவையாக பதிவு செய்துள்ளதை அழகாக விவரித்துள்ளார் தன் மதிப்புரையில். மதிப்புரையே நூலின் ஆழத்தைச் சொல்கிறது சிறப்பு. "எந்தையும் தாயும்!" நூலின் மதிப்புரையிரல் ஞானசம்பந்தன் ஜயா அவர்களின் பெற்றோர் குறித்த தகவல்கள் அனைத்தையும் சொல்லி, அவர்கள் தன்னை வளர்த்தெடுத்தததையும் விளக்கி, உயர்வான நிலைக்கு பெற்றோர்கள் கொடுத்த ஊக்கத்தையும் பகிர்ந்துள்ளதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் கவிஞர் இரவி. முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களின் நகைச்சுவை உணர்வை மிகவும் பாராட்டியதோடு அவர் தனது “மேடைப் பயணங்கள்” நூலில் பகிர்ந்துள்ள விதவிதமான தலைப்புகளிலான மேடைப்பேச்சுகள், பட்டிமன்றங்கள், அதில் அவர் கூறிய தகவல்கள் கருத்துகள் அனைத்தையும் கவிஞர் இரவி அவர்கள் தனது மதிப்பிரையில் சிலாகித்து உள்ளார். மேலும், ஜெயிக்கப் போவது நீதான்;! உன்னோடு போட்டி போடு, எனும் தன்னம்பிக்கை தரும் நூல்கள் குறித்து சொல்லும்போது நூல்களின் பெயரே ஊக்கம் கொடுக்கும் வண்ணம் அமைத்துள்ளது மற்றும் நூலில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளும் மிகச்சிறப்பாக உள்ளது எனவும், திருக்குறளை மேற்கோள் காட்டி தன்னம்பிக்கை விதைகளை விதைத்துள்ளார் என மதிப்புரையில் மெருகூட்டியுள்ளார் கவிஞர் இரவி. பேராசிரியராகிய கு.ஞானசம்பந்தன் அவர்கள் தன் அனுபவப்பிழிவைத் தமிழ் சாராகக் கொடுத்துள்ளார் தனது “ இலக்கிய சாரல்” நூலில் என்று சிறப்பித்துள்ளார் கவிஞர். கற்றதை சொல்லவா? மற்றதையும் சொல்லவா? பார்த்தேன்… படித்தேன்… ரசித்தேன் ஆகிய இரண்டு நூல்களிலும் தனது பலதரப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து நூல் வாசிப்போரையும் அனுபவம் கொள்ளச் செய்கிறார் என்று ஞானசம்பந்தன் ஜயா அவர்களின் ஆழ்ந்த எழுத்தாற்றலை பெருமைபட வைக்கிறார் கவிஞர் அவர்கள். “பழம் ஒன்று சுவை நூறு” என்ற தலைப்பில் கவிஞர் இரவி அவர்களின் இறையன்பு கருவூலம் நூல் குறித்த மதிப்புரையும் வாழ்த்துரையும் மிக அற்புதம். கவிஞர் இரவி அவர்களின் செயல்பாடுகளை சூரியனோடு ஒப்பிட்டு சிறப்பித்துள்ளது அருமை! நூலில் நடிகர் கமல்ஹாசன் குறித்த மலரும் நினைவுகள் சிறப்பு! தனது சொந்த ஊரான சோழவந்தான் குறித்தும் ஊரில் அமைந்துள்ள ஜெனகை மாரியம்மன் கோவில் குறித்த வரலாற்றையும் மிக அழகாக தனது நூலில் விவரித்துள்ளதை வெகுவாகப் பாராட்டி, கலைமாமணி கு. ஞானசம்பந்தன் ஜயா அவர்களின் ஒட்டுமொத்த சிறப்புகளையும் சுவையாகவும், நூலை வாசிக்கும் அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் மதிப்புரைகளைச் செதுக்கி நூலை வரவமைத்துள்ளார் கவிஞர் இரவி அவர்கள். கலைமாமணி கு.ஞானசம்பந்தன் ஐயா அவர்களுக்கும், கவிஞர் இரவி அவர்களுக்கும் நல்வாழ்த்துகள்!!! ப. மகேஸ்வரி, கோவை.

கருத்துகள்