மின்னல் ஹைக்கூ!
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
மதிப்புரை கவிஞர் கே ஜி ராஜேந்திர பாபு
பெங்களூர்
9444040490
kgrajendrababu49@gmail.com
044 24342810 / 24310769 EMAIL vanathipathippakam@gmail.com
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர். சென்னை-600 017. பக்கங்கள் : 84 விலை : ரூ.80 தொலைபேசி 044 24342810 / 24310769 EMAIL vanathipathippakam@gmail.com
------------------
அழகான விண்மீன்கள்.
* ***
கவிஞர் இரா. இரவியின் “மின்னல் ஹைக்கூ”
ஒரு கருத்துரை
****
இறைக்கிற ஊற்றே சுரக்கும் ;எழுதிக் கொண்டிருக்கும் இரா.இரவியின் கைககளில்
சுரந்து கொண்டே இருக்கின்றன ஹைக்கூ கவிதைகள்
நிறைய ஹைக்கூக்களை அள்ளிக் கொடுப்பதால் அவை ஆடிமாத
ஈக்களல்ல:அழகான விண்மீன்கள்
இரவியின் புதுநூல் “மின்னல் ஹைக்கூ”.
‘மின்னல் ஹைக்கூ’ என் மனச்சன்னலுக்குள் பாய்ந்தது. இது ஹைக்கூ மின்னல்
என்பதால் எரிக்கவில்லை; நிலவாய்க் குளிரூட்டுகிறது.
மாமனிதர் இறையன்பு அவர்களின் தந்தையாருக்கு இந்நூலைக்
காணிக்கையாக்கியுள்ளார் இர., இரவி. இது இரா.இரவி மாமனிதர் இறையன்பு அவர்கள்
மேல் வைத்திருக்கும் மதிப்பின் வெளிப்பாடு. இது சிறப்பு.
முனைவர் T.R..ராமநாதன் (வானதி பதிப்பகம்) அவர்கள் ‘பதிப்புரை’யில் கவிஞர்
இர. இரவியைச் சரியாய் மதிப்பிட்டுள்ளார்.
ஹைக்கூ நூலைப் படத்துடன் வெளியிடச் சொன்னார் எழுத்தாளர் சுஜாதா.’
மின்னல் ஹைக்கூ’ வெண்மேகக் காகிதத்தில் மின்னுகிறது. கவிதைக்கேற்ப படங்களைக்
கொடுத்த திருமதி இர.ஜெயப்பிரியங்கா பாராட்டுக்குரியவர்
** **
அளவு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அதிக வெளிச்சம் கண்ணை இருட்டாக்கும்.
அனுபவ உண்மை இது. இதை ஒரு அழகிய கவிதையாக்கி உள்ளார்
“எதுவும் தெரியாது
இருட்டுத்தான் -அதிக வெளிச்சம்”
* *
உண்மைகள் கவிதையாகும் போது கண்மைபோல் அழிந்துவிடாது.
வாழ்க்கை வசதிக்காகப் பணத்தை உண்டாக்கினான் மனிதன். ஆனால் அந்த
பணமே அவனுக்கு விலங்கிட்டு விடுகிறது.
“மனிதனால் படைக்கப்பட்டு
பாடுபடுத்துகிறது
பணம்”
* **
ஆகா அற்புதமான ஹைக்கூ
'கிடைக்கவில்லை
எங்கு தேடியும்
போதிமரம்”
போதிமரம் கிடைக்காததால் புத்தரும் கிடைக்கவில்லை
** **
“உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மாக்”
ரத்தத்தை வியர்வையாய்க் கொட்டி உழைக்கிறான். வரவு வந்ததும் சித்தம்
டாஸ்மார்க்கில்;
நித்தம் குடித்து மயங்குகிறான்; மொத்த குடும்பமும் வறுமையில்.
** **
இரவியின் இந்த கற்பனை வியக்கவைக்கிறது “பருகிய நோக்கு என்னும் பாசத்தால் பிணித்து” என்னும் கம்பன் பாடலைக்
கேட்டிருக்கிறோம் ஆனால் கண்பரிமாற்றத்தை இரவி புதுமையாய் எழுதியுள்ளார்.
“உயிரோடு
கண்தானம்
காதலர்கள்”
அவள் கண்கள் அவனுக்கு; அவன் கண்கள் அவளுக்கு. இந்த ஹைக்கூவில்
இரவியின் கற்பனை அட்டகாசம்
** **
உயரத்தில் கல்வி துயரத்தில் மக்கள் என்பதை இப்படிச் சொல்கிறார் கவிஞர் இரவி.
“ஆரம்பமானது
பகல் கொள்ளை
கல்விநிறுவனங்கள்”
**
சிந்திக்க வைக்கிறது இந்த முரண்
“கோடிகளும் லட்சங்களும்
கோயிலின் உள்ளே
வெளியே பிச்சைக்காரர்கள்”
***
மருதாணி பூசுவதுபோல சில கவிதைகள் ;மனத்தைக் கிள்ளுவது போல் சில
கவிதைகள்
ஒரு தொகுப்பிலேயே
இர.இரவியின் புகழ்வானில் இன்னொரு விண்மீன் மின்னல் ஹைக்கூ

கருத்துகள்
கருத்துரையிடுக