ி.எம்.எஸ், என்ற தன் சுருக்கப் பெயருக்கு, அவர் தனக்குத்தானே கூறிக்கொண்ட விளக்கம். இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋
டி.எம்.எஸ், என்ற தன் சுருக்கப் பெயருக்கு, அவர் தனக்குத்தானே கூறிக்கொண்ட விளக்கம்.
முதல் விளக்கம்: தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய முப்பெரும் இசைஞானியரின் அனுக்கிரஹம் அமைந்தவன் என்பதாகும். இரண்டாம் விளக்கம்: தியாகராஜ பாகவதர், மதுரை சோமு, சுந்தராம்பாள் ஆகிய தன் முப்பெரும் மானசீக குருக்களின் அனுக்கிரமும் அமைந்தவன் என்பதாகும்.
மலைக்கள்ளன் படத்தில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற பாட்டை பாட வைத்தார். T.M.S. எம்.ஜி.ஆரை கடைசிவரை ஏமாற்றவில்லை. எம்.ஜி.ஆரின் பெரும் புகழுக்கு ஒரு சதவிகிதமாவது T.M.S. குரல் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சின்னப்பயலே சின்னப்பயலே, திருடாதே பாப்பா திருடாதே, சீர்திருத்த கருத்துகளை T.M.S. தன் குரலில் திருத்தமாய் பாடினார். நான் ஆணையிட்டால், உலகம் பிறந்தது எனக்காக, தாயில்லாமல் நானில்லை, ஏன் என்ற கேள்வி, உன்னை அறிந்தால், ஓடி ஓடி உழைக்கனும், சிரித்து வாழ வேண்டும், அச்சம் என்பது மடமையடா, ஆஹா என்ன ஒரு சாரீரம்.
தூக்குத்துக்கி படத்தில் எட்டு பாட்டுக்கு 4000 ரூபாய் திருச்சி லோகநாதன் கேட்க, தயாரிப்பாளர் பட்ஜெட் இல்லை என சொல்ல அப்படின்னா ஒன்னு பண்ணுங்க, மதுரையில் இருந்து செளந்தர்ராஜன்னு ஒரு புதுப்பையன் வந்திருக்கான். அவனை கூப்பிட்டு பாடச் சொல்லுங்க என்று சொன்னார் திருச்சி லோகநாதன். அடுத்த நாள் புதுப்பையனா? ஏன் பலப்பரீட்சை என்றார் சிவாஜி. செளந்தர்ராஜன் அவரிடம் நான் ஒரு ரெண்டு பாட்டு பாடறேன் பிடிச்சிருந்தா தொடரலாம் இல்லைன்னா விலகிடறேன் என சொல்ல, சிவாஜி தலையசைத்து சம்மதம் தர அந்த விநாடி தேவர்கள் பூ மாரி பொழிந்திருப்பார்கள். ஏறாத மலைதனிலே பாட்டு கேட்டதும் அசந்து விட்டார் சிவாஜி. இந்தப் படம் இல்லை இனி என் எல்லாப் படத்திலும் நீங்கதான் பாடறீங்க என்றார் சிவாஜி. தூக்கு தூக்கி படம் T.M.S. ஐ ஒரு தூக்கு தூக்கி விட்டது. இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

கருத்துகள்
கருத்துரையிடுக