மருத்துவமும் எச்சரிக்கையும்..-பா.மகாலட்சுமி-

மருத்துவமும் எச்சரிக்கையும்..-பா.மகாலட்சுமி- இரண்டுமாதம் முன்பு தாடையில் நாக்கின் அடியில் ஏற்பட்ட திடீர் வீக்கம், வலி இன்னதென்று புரியாமல் பல் மருத்துவரைப் பார்த்தால் பற்களில் பிரச்சினை இல்லை, காது மூக்குத் தொண்டை பரிசோதனையின்போதுதான் தெரிந்தது உமிழ்நீர் சுரக்கும் குழாயில் ( salivary duct) கட்டிகள். இதுவரை நான் எதிர்பார்க்காத கேள்விப்படாத பிரச்சினை.. சிறுநீரகக்குழாயில் கற்கள் பொதுவாக ஆண்களுக்கு வருவதை கேள்விப்பட்டிருக்கிறேன். இது புதிதாக இருந்தது என்றாலும் மருத்துவ உலகிற்கு புதிதல்ல.. ஆனால் ரொம்பவே குறைவாக இருக்கும் பிரச்சினை.. உமிழ்நீர் கெட்டியாக மாறும்போது இதுபோன்ற கற்கள் சுரப்பியில் படிந்து கற்களாக மாறி அடைப்பை ஏற்படுத்தி வீக்கத்தையும் பின்னாளில் பெரும் பிரச்சினையில் கொண்டுபோகும் என்பது எனக்கு வந்தபிறகே புரிந்தது.. இதைப் பகிர்வதற்கு மிக முக்கியக் காரணம் வேலை காரணமாக, பயணத்தின்போது நாம அனைவரும் மறந்துபோகும் அடிப்படையான பிரச்சினை " தண்ணீர் " குடிப்பதை மறப்பது அல்லது குறைவாகக் குடிப்பது.. தண்ணீரின் அளவு குறையும்போது ஏற்படுகிற உடல் பிரச்சனைகள் ஏராளமானவை, இதைத் தேட ஆரம்பித்தால் தலை சுற்றுகிறது.. கவிதை மட்டும் போதுமா ரசிக்க, உடல் ஆரோக்கியம் பற்றியும் பேசுவதே உங்களுக்கு நான் செய்யும் நன்மை.. தண்ணீர் குறைவு = Dehydration. உடம்புல 60% தண்ணீர்தான். 1-2% குறைஞ்சாலே அறிகுறி ஆரம்பிச்சிடும். லேசான தண்ணீர் பற்றாக்குறை இருந்தாலே தலைவலி, தலைசுற்றல் களைப்பு, இருதயம் கஷ்டப்பபட்டு வேலை செய்யும்.. சிறுநீர் அடர் மஞ்சளில் வெளியேறும்,கவனச்சிதறுதல் மூளை செயல்பாடு 13% வரை குறையலாம்.. தலைசுற்றி மயக்கம்.. எழுந்திருக்கும்போது BP குறைஞ்சு விழுந்திடலாம்.. வேகமான இதயத்துடிப்பு, மூச்சு வாங்குதல்.. தசைப்போடியம், பொட்டாசியம் பேலன்ஸ் மாறிடும்.. சிறுநீர் வராமல், எட்டுமணி நேரத்துக்கு மேல போகலைனா ஆபத்து.. குழப்பம், எரிச்சல்,மூளை செல்கள் சுருங்க ஆரம்பிக்கும்.. ( இப்பதான் புரியுது) கண் குழி விழுதல், குழந்தைகளுக்கு உச்சந்தலை பள்ளம்.. Heat stroke, வியர்வை நின்னுடும், உடம்பு சூடு 104°F தாண்டும் கிட்னி பாதிப்பு, சிறுநீரகம் செயலிழக்கலாம்.. வலிப்பு, எலக்ட்ரோலைட் குறைபாடு ஷாக், கோமா,உயிருக்கு ஆபத்து..ஆத்தாடி.. தினமும் இரண்டிலிருந்து மூன்றுலிட்டர் தண்ணீர் குடிக்கிறது நல்லது. தாகம் எடுக்குறதுக்கு முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் குடிப்பது நல்லது என்கிறார்கள், ஆனால் நமக்கு ஞாபகம் வரனுமே. உடலென்பது ரத்தமும் சதையுமான உயிருள்ள எலக்ட்ரானிக், எப்பவும் கவனிச்சா ஒழுங்கா ஓடும், இல்ல பஞ்சர்.ஒட்டவேண்டியதுதான் போல.. எப்பவும் இதுபோலவே இருந்திடுவோம், என நாம நினைக்கிற கணக்கு நாற்பத்தைந்து வயது தாண்டினால் தவறாகும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். உடல்நலத்திற்கும், கொஞ்சம் நேரம் ஒதுக்கியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தை காலம் எச்சரிக்கிறது.. இதையெல்லாம் உடல் பிரச்சினை வந்தபிறகே கவனிக்கிறோம். அதிலும் வரிசையாக மூன்று கற்கள் என்பதால் சின்னதாக ஆபரேசன் செய்யவேண்டிய கட்டாயம். சென்னை தாகூர் மருத்துவமனையில் தற்போது ஆபரேசன் முடிந்து மூன்றாவது நாளில் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். தற்போது நலமாக இருக்கிறேன், கொஞ்சம் வலிகளோடும், மருந்துகளோடும்.. விரைவில் குணமாகிவிடும் , சந்திப்போம்.. (முக்கிய பின்குறிப்பு - கொஞ்சநாளைக்கு அரசியல் பக்கம் திரும்பாமல் இருந்தால் தப்பித்தோம், இல்லையெனில் அந்த உளவியல் சிக்கல் இன்னும் உடலைத் தாக்கும்😁.) -பா.மகாலட்சுமி-

கருத்துகள்