முத்துக்கூத்தன் கலைவாணன்
45 ஆண்டுகளுக்கும் மேலாக பொம்மலாட்டக் கலை வடிவத்தைக் கையில் ஏந்தி கை வலிக்க வலிக்கத் தமிழ்நாடு எங்கும் சுற்றுப்பயணம் செய்து பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, சுகாதாரம், குழந்தைகள் நலன், மக்கள் நலன் சார்ந்த செய்திகளைக் கிராமங்கள் தோறும் கொண்டு சேர்த்தவர். கடந்த சில மாதங்களாகப் புற்று நோய் காரணமாகப் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று மீண்டு வந்தாலும், கீமோ தெரபி பெற்றுக்கொண்டு வந்து, நேற்று முன்தினம் வரைக்கும் அடுத்த கட்டப் பொம்மலாட்டக் கலைஞர்களை உருவாக்குவதற்கான பயிற்சியை நடத்தி வந்தவர்.
இரண்டு நாள்களுக்கு முன் கடுமையான தலைவலிக்கு ஆளாகி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு MRI SCAN எடுத்துப் பார்த்ததில் மூளையில் ரத்தம் உறைந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையும் பயனளிக்காத ஆபத்தான நிலையில் இரவு 11 மணியளவில் மறைந்தார்

கருத்துகள்
கருத்துரையிடுக