தலைநிமிர வைக்கும் நம் தமிழ்! கவிஞர் இரா. இரவி !
உலகமே போற்றுகின்றது நம் தமிழ்!
உலகமே வழிமொழிகின்றது மூத்தமொழி தமிழ்!
பகைவர்களும் பாராட்டிடும் மொழி தமிழ்!
பண்பாட்டைப் பயிற்றுவிக்கும் மொழி தமிழ்!
உலகம் தோன்றியபோதே தோன்றியது தமிழ்!
உலகம் வியந்து பார்க்கும் சிறப்புமிகு தமிழ்!
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா!
நாமக்கல் கவிஞரின் வரிகளுக்கு உயிர் வந்ததடா!
உலகமொழிகளின் தாய்மொழி நம் தமிழ்!
உலகமொழிகளுக்கு சொற்கள் தந்தது நம் தமிழ்!
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய
மூத்தமொழி முதல்மொழி நம் தமிழ்!
உலகில் முதல்மனிதன் உரைத்திட்ட மொழி நம் தமிழ்!
உலகில் மொழி ஆய்வாளர்கள் ஏற்றிட்ட மொழி நம் தமிழ்!
இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் நம் தமிழ்!
எண்ணிலடங்கா சொற்களைப் பெற்ற மொழி நம் தமிழ்!
தொல்காப்பியத்திற்கு முன்பே இலக்கியங்கள் உள்ள தமிழ்!
தோன்றின் புகழோடு தோன்றிய மொழி நம் தமிழ்!
ஒப்பற்ற திருக்குறள் எழுதப்பட்ட மொழி நம் தமிழ்!
ஓங்கிய சங்க இலக்கியங்கள் உள்ள மொழி நம் தமிழ்!
பன்னாட்டு மொழியாக கோலோச்சி வருவது நம் தமிழ்!
பன்னாட்டு அறிஞர்கள் போற்றிப்புகழும் நம் தமிழ்!
எல்லாவளமும் நிறைத்திட்ட மொழி நம் தமிழ்!
எல்லா மொழிகளின் தாய்மொழியே நம் தமிழ்!
--
.

கருத்துகள்
கருத்துரையிடுக