வணக்கம் ."
சில நேரங்களில் அனைத்துப் பிரிவினரையும் நிர்வாகத்தில் இடம் பெறச்செய்வது நல்லது. அப்போதுதான் நிறுவனத்தில் குழு மனப்பான்மை குறைந்து பல்வேறுவிதமான தகுதிகள் பெற்றவர்கள் இடம்பெறுவார்கள்.
சீனத்தில் டாங், சாங் சாம்ராஜ்யங்களைப் போல மிங் நாட்டிலும் குடிமைப் பணியாளர்களை அரசுத் தேர்வு மூலம் தேர்வு செய்யும் முறை இருந்தது. தெற்குச் சீனம் வடசீனத்தைவிடப் பண்பாட்டில் மிகவும் முன்னேறியது. எனவே பெரும்பாலும் தென்னினத்தைச் சேர்ந்தவர்களே இந்தத் தேர்வில் வெற்றிபெற்றார்கள்.
1397 ஆம் ஆண்டு நடந்த தேர்வில் ஒரு வட சீனர்கூடத் தேர்வு பெறவில்லை. எனவே வடக்கத்தியர்கள் தலைமைத் தேர்வு அதிகாரியைக் குற்றம் சாட்டினார்கள். மிங் நாட்டு மன்னர் ஜு யுவான் ஸாங் இதுகுறித்து ஒரு விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்போதும் வடக்குப் பகுதியினர் திருப்திப்படவில்லை. எனவே அந்த மன்னர் 62 வடசீனர்கள் அந்தத் தேர்வில் தேர்ச்சிபெறுவதற்கு இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். அதன் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மையையும், சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்ட முயற்சி செய்தார். 65 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ஏற்றத்தாழ்வு சரிசெய்யப்படவில்லை. எனவே ரெங்ஸாங் என்கிற அடுத்த மன்னர் முறையாக இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். நூறு விழுக்காட்டில் நாற்பது வடக்கத்தியர்களுக்கும், அறுபது தெக்கத்தியர்களுக்கும் ஒதுக்கித் தந்தார். இந்தப் புதிய முறையில் வடக்கைச் சார்ந்தவர்கள் தோல்வி மனப்பான்மையுறாமல் உத்வேகத்துடன் தேர்வு எழுதுவார்கள் என்றார்.
அதற்குப் பிறகு வடக்கு, தெற்கு, மத்திய சீனப் பகுதிகள் என இவை மாகாண வாரியாகப் பிரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டது."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 463
இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக