வணக்கம் ." மேலாண்மையில் முக்கியமானது மனிதவள மேம்பாடு. எத்தனை மூலாதாரங்கள் இருந்தாலும் மனிதவளம் சரியாக அமையாவிட்டால் அந்த நிறுவனம் கரைதேற முடியாது. இன்று பணியாளர்களைப் பாரமாகக் கருதாமல் சொத்தாகக் கருதும் மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. மனிதவளம் குறித்து நிறைய கருத்தரங்குகளும், பணிப்பட்டறைகளும் நடந்தவண்ணம் இருக்கின்றன.
1998 ஆம் ஆண்டு இரண்டாயிரம் நிறுவனங்களில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இருபத்தெட்டாயிரம் பணியாளர்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டனர். எந்த இடத்தில் மனிதவள மேம்பாடு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அங்குப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் எல்லா அதிகாரிகளுமே மனிதவள மேம்பாட்டுப் பணியாளர்களாகச் செயல்படுகிறார்கள் என்பது தான் உண்மை.
மனிதவள மேலாண்மை என்பது ஊழியர்களை நியமித்தல், அவர்களுக்கு அறிமுகப் பயிற்சி தருதல், பணியிடம் தருதல், பணியை ஆய்வு செய்தல், பயிற்சி தருதல், பணிக்கேற்ற ஊதியம் தருதல், ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது.
பணியாளர் தேர்வுதான் மனித வளத்தின் செம்மையைத் தீர்மானிப்பதாக இருக்கிறது."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 459.
இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக