படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
இனிய காலை வணக்கம் ."
மேலாளர்கள் வெளித்தோற்றத்தைக் கண்டு ஏமாந்துவிடக்கூடாது. எப்போதுமே தோற்றங்கள் நம்மை ஏமாற்றிவிடும் ஆற்றல் உடையவை. ஒருவருடைய பளபளப்பு, முக வசீகரம், உயரம், இனம், தோலின் நிறம், அங்க லட்சணங்கள் ஆகியவற்றைக் கொண்டு அவர் தகுதியை மதிப்பிடக் கூடாது. ஆனால் உலகெங்கிலும் இவை பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றன என்பது உண்மை. மேற்கத்திய நாடுகளிலும் இனம் ஒரு முக்கியமான பங்கை ஆற்றுகிறது. பிரைத் வெயிட் என்பவர் மிகச்சிறந்த தகுதியிலிருந்தும் பல நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்டதைப் பற்றி அவருடைய 'டு சார் வித் லவ்' என்கிற நூலில் குறிப்பிடுகிறார். கருப்பின மக்களின் இரத்தமும், கருப்பாக இருக்கும் என்று இங்கிலாந்தில் இருக்கின்ற அந்தப் பள்ளி மாணவர்கள் நினைக்கிறார்கள். அவர் ஓர் எலும்புக்கூட்டைக் கொண்டு வந்து அவர்களுக்கு உண்மையைப் புரிய வைக்கிறார்.
வேண்டியவர், வேண்டாதவர் என்பதை முன்கூட்டியே தெரிந்ததால் மட்டும் ஒருவன் முடிவு செய்வதில்லை. அவர்களுக்குள் ஏற்கனவே ஊறிப்போய் இருக்கின்ற எண்ணங்களும் இதற்குக் காரணம். சமூகம் தொடர்ந்து சிலவற்றை நம் மீது திணித்துக்கொண்டேயிருக்கிறது. சாதி, மதம், இனம், உருவ அமைப்பு போன்றவை அத்தகைய
வன்திணிப்புகளின் சில பரிமாணங்கள்."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 469
இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக