படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு. கால்வாசியை ஆசான்களிடமும், கால்வாசியைச் சுயமாகவும், கால்வாசியைச் சக மாணவர்களிடமும், கால்வாசியைக் காலப்போக்கிலும் கற்றுக்கொள்கிறோம் என்பதே அது. தொடர்ந்த பயிற்சி ஒருவருடைய அறிவை அகலமாக்கப் பேருதவியாக இருக்கும். எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. நிறுவனத்தின் கடைசி ஊழியரும் ஒரு நிகழ்வு பற்றி மிகச் சரியான தீர்வைச் சொல்ல முடியும். யாரும் புறக்கணிக்கக்கூடிய வர்கள் அல்ல. இந்த அடிப்படையில்தான் ஜப்பானில் ‘மூளைப்புயல்’ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நிறுவனத்தில் உள்ள ஒரு சிக்கலைத் தீர்க்க எல்லாப் பணியாளர்களும் ஒன்றுகூடுகிறார்கள். அவர்கள் தயக்கமில்லாமல் கருத்துகளைக் கூறலாம். எந்தக் கருத்தின் மீதும் விமர்சனம் செய்யாமல் அதைப் பற்றி அலச வேண்டும். சாத்தியமா? சாத்தியமில்லையா? என்பதைப் பற்றி மட்டும் ஆராய வேண்டும். சொல்லப்படுகிற கருத்தே முட்டாள்தனமானது என்று, சொன்னவரை ஒருபோதும் புண்படுத்தக்கூடாது. இதைப் போன்ற வழிமுறைகளை ஜப்பானில் பயன்படுத்தியதன் காரணமாகப் பணியாளர்கள் அனைவருக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டில் அவர்களும் பங்கு வகிப்பதன் உணர்வு ஏற்பட்டபோது நிறுவனம் பற்றிய முழுமையான தகவல்களும் தெரிந்தன." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 489. இந்த நாள் கற்றுக்கொள்ளும் இனிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்