வணக்கம் ." என்னதான் அறிவியல்பூர்வமான முறைகளைக் கொண்டு திறமைகளை மதிப்பீடு செய்தாலும் சில நேரங்களில் ஒரே மாதிரியான தன்மை கொண்ட பலரில் ஒருவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது நம்முடைய தனிப்பட்ட தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பீட்டர் டிரக்கர் திறமையான நிர்வாகி, பலவீனங்களைக் குறைக்கவும், பலத்தை அதிகப்படுத்தவும், பணியாளர்கள் குறித்த முடிவுகளை எடுப்பான் என்று குறிப்பிடுகிறார்.
பணியாளர் தேர்வில் ஏழு பகுதிகள் இருக்கின்றன. அவை, பணி ஆய்வு, பணியாளரிடம் எதிர்பார்க்கும் பணித்தன்மை, தகுதி ஆய்வு, பணி விவரிப்பு, ஆற்ற வேண்டிய பணிகளின் விவரம், தேவைப்படுகிற நபர் பற்றிய குறிப்பு, தேவைப்படும் பயிற்சி பற்றிய தகவல் ஆகியவை ஆகும்."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 459&460
இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக