முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

நல்லிணக்கமே நம் ஆனந்தூரின் ஆயுதம்! +++ # ஆனந்தூர் செ அபுதாகிர் # நம்ம ஊரு ஆனந்தத்தை தனக்குள்ள வச்சிருக்கு. அதான், ஆனந்த ஊர், ஆனந்தூர் ஆயிருக்கு. நம் பள்ளிவாசல்களின் பழைய சந்தா புத்தகத்துல ஊருப் பேரு ஆனந்த ஊர் -னு தாங்க இருக்கு.. அன்பை போதித்த புத்தரின் நெருக்கமான சீடர்தாங்க ஆனந்தர். அவரோடு பேரும் ஊருல இருக்கு. அவிகார சுந்தர நல்லூர்னு கல்வெட்டு சொல்லுது, ஆனந்தவள்ளி கோயிலும் இருக்கு, பண்டைய நெடுங்காலத்துல ராஜராஜபுரம்னு இருந்ததா சொல்றாங்க. ஆனாலும் காலம் காலமாக மங்காது, மறையாது இந்த ஊருக்கு பேரு ஆனந்தூர்னுதான் இருக்கு. மாவட்டத்தோட ரொம்பப் பழைய ஊருங்க... எப்போதுமே எந்த வேறுபாடும் இங்கிருந்ததில்லை... அண்ணன் தம்பியாகத்தான் முஸ்லிம்களும், இந்துக்களும் இருக்கிறோம். ஊருக்குள் தென்புறத்தில் ஊரின் முதல் பள்ளிவாசலாக தெற்குப்பள்ளிவாசல், வடக்கு திசையில் வடக்கு பள்ளிவாசல், கிழக்கில் மிகத் தொன்மையான திருமேனிநாதர் சிவன் கோயில், மேற்கில் கிறிஸ்தவர் தேவாலயம். இப்படி திசைகள் தோறும் சமய நல்லிணக்கம் மணக்க சமுதாய ஒற்றுமை ஓங்கி ஒலிக்கிறது நம்மூரோட சிறப்புங்க. ஆனந்தூர்னா ஒரு குறுகிப்போன குக்கிராமமில்லிங்க.. நம்ம பச்சணித்திக்கோட்டை, காட்டுக்குளம், துவார், ஓடக்கரை, மேவயல், கீழக்கோட்டை, திருத்தேர்வளைன்னு முப்பதுக்கும் அதிக ஊருங்களோட தொகுப்புங்க. ஆனந்தூருக்குள் இருந்தவங்களுக்கு இந்த அத்தனை ஊர்களிலும் நில புலன்கள் இருந்துச்சுங்கன்னா பார்த்துக்குங்க. ஊருக்குள் ஒவ்வொரு கோயில்ல இருந்தும் ஜமாத்தோட 9 குடும்பங்களின் வகையறாக்களுக்கும் மரியாதைத் தட்டு போயிருங்க. பள்ளிவாசல்கள்ல ஒரு நிகழ்ச்சின்னா முதல் அழைப்பு மாற்றுமதத்தவரின் ‘கோயில் ஜமாத்’துக்குத்தாங்க. அந்தளவு ஒன்னு மன்னாத்தான் எல்லா காலமுமே நாம இங்கே இருக்கோம்.. ஒவ்வொரு தேர்தல்லயும் சுழற்சி முறையில்தான் இந்துக்களும், இஸ்லாமியர்களும் இந்த ஊரை பஞ்சாயத் தலைவராக இருந்து ஆட்சி புரிஞ்சுட்டு வர்ரோம்... நம்ம ஒற்றுமைக்கு அடிப்படை இது போதாதாங்க? ஊருக்கான ஒவ்வொரு வசதிகளையும், திட்டங்களையும் கைகோர்த்து போராடித்தானே கரை சேர்த்திருக்கோம்? ஆனந்தூரின் சொக்கநாதருடைய அய்யனார் கோயில்ல இன்றைக்கும் முன்னுரிமை முஸ்லிம்களுக்கு தரப்படுகிறதே? 2007 ஆகஸ்ட்ல நடந்த இந்த கும்பாபிஷேகத்திற்கான நெல், தயிர் பொருட்கள் முஸ்லிம்கள் வழங்கினார்களே? கீழத்தெரு, மேலத்தெரு முஸ்லிம் குடும்பங்களை மாலையிட்டு ஊர்வலமாக அழைத்து வந்து மரியாதை தந்தது காலம் காலமாக இருந்ததே? கோயில் விழாக்களுக்கு முஸ்லிம்கள் பங்களிப்பு, பள்ளிவாசல் நோன்புக் கஞ்சிக்கு இந்துக்கள் பங்களிப்புன்னு நம் ஒற்றுமைக்கு வேறென்னங்க சாட்சி வேணும்? ராமேஸ்வரம் கோயில் செலவுகளுக்காக ராமநாதபுரம் சேதுபதி மன்னர் திருமலை சேதுபதி வழங்கிய சாசனத்துல நம்ம ஆனந்தூரும், பாப்பாகுடியேந்தல் வருவாய்தானே அனுப்பி வைக்கப்பட்டது இருக்கிறது. திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் நிர்வாகச் செலவுக்கு மரக்கால் நெல் ஆண்டுதோறும் ஆனந்தூர் காரங்க அனுப்பி வச்சது சமய ஒற்றுமை வரலாறு இல்லையா? சமீபத்தில் நடந்த ஆனந்தூர் திருமேனிநாதர் கோயில் கும்பாபிஷேகத்துல பக்தர்களுக்கு ரோஸ்மில்க் பரிமாறி பாசம் காட்டி முதல் ஆளாக அத்தனை பேரையும் வரவேற்றது தொப்பி போட்ட நம்ம ஆனந்தூர் முஸ்லீம் ஜமாத்கள் தானே? 1942ல் வெள்ளையனே வெளியேறுன்னு ஆகஸ்ட் புரட்சிங்க. திருவேகம்பத்தூர், தேவகோட்டை, திருவாடானைன்னு அத்தனை ஊர்லயும் சுதந்திரக் கலவரம். வெள்ளக்காரன் வீரர் பாலபாரதி, வென்னியூர் முனியப்ப தேவர், சித்தூர் சிவஞானத்தேவர்னு ரொம்பப்பேரை கொலைவெறியோடு தேடுனாங்க. அப்போது, வென்னியூர் முனியப்ப தேவருக்கு பாதுகாப்புத்தந்தது நம்ம ஆனந்தூருதாங்க. நோட்டக்கார சகோதரப் பெரியவங்க பட்டாணியும், சம்சுதீனும் ஆனந்தூர்லயும், பனிக்கோட்டையிலும் மறைச்சு வச்சு பாதுகாத்து கொடுத்து அனுப்பி வச்சாங்களே? இதுக்காக ஊருக்குள் புகுந்த போலீஸ் அண்ணன், தம்பியை பிடிச்சுட்டுப்போனாங்களே? எவ்வளவு பெரிய துணிவு? எத்தனை பெரிய மதம் கடந்த சகோதரத்துவம்? வென்னியப்ப தேவரை சுட்டுக் கொன்றதைத் தெரிந்து ஆனந்தூரின் அத்தனை முஸ்லிம்களும் துக்கம் கொண்டாடுனாங்களே? அந்த அன்பு மறக்கக் கூடியதா? 1947ல் முதல் சுதந்திர தினத்துக்கு ஜமாத்தும், சர்வ மதத்தவரும் சேர்ந்துதானே தேசியக் கொடியேத்துனாங்க? வெள்ளம், நோய், பஞ்சம்னு ஒவ்வொரு காலத்திலும் ஒன்னா சேர்ந்துதான் எதிர்கொண்டோம். 1595ல் இருந்து 1795 வரை நம்மாளுக 24 பஞ்சத்தை பார்த்தாங்க. 1973 முதல் 1975 வரை தொடர் பஞ்சம், 1708ல், 1940, 1955 ல் பெருவெள்ளம் துவங்கி சமீபத்துல கொரோனா வரை நம் சகோதரத்துவம்தான் ஜெயிச்சிருக்கு. 2005ல் சித்தலூர் கிராமமே தண்ணிக்குள் கிடந்தபோது, ஆனந்தூர் இளைஞர்கள் உணவுப்பொட்டலம் தந்து உதவுனதுல இருந்து, மலைக்கு மாலை போட்டு செல்பவர்களை வரவேற்று விருந்தளித்து வழியனுப்புவது வரை இங்கே மதங்கள் கடந்த மனித நேயம்தானே நடந்துக்கிட்டிருக்கு. இரு பள்ளிவாசல்கள், கோயில்கள், சர்ச் என மும்மதம் சங்கமிக்கும் அற்புத சொர்க்மில்லையா நம்ம ஆனந்தூர்? நம் இந்து, முஸ்லிம் உறவு உன்னதமான ஒரு கல்வெட்டு மாதிரிங்க... அது ஒரு ஜீவனுள்ள தொப்புள்கொடி உறவுங்க ... எந்த சூழலிலும் அதுக்கு ஒரு பழுது வராம பார்த்துக்கணும் .... காலம் காலமும் நின்று நிலைச்சு வாழனுங்க... தொடர்ந்து... வாழ வைப்போமுங்க...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு, பாண்டி பசார், சென்னை-600 017.  விலை : ரூ. 180. *****        புதுக்கவிதை என்று சொன்னவுடன் அனைவரின் நினைவிற்கும் மோனையைப் போல முந்தி வந்து நிற்பவர் கவிஞர் மு. மேத்தா.  கவி வேந்தர் பட்டம், பரிசு, விருது, பாராட்டு என்று பல பெற்று இருந்த போதும், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாத எளிய மனிதர், இனியவர், பண்பாளர், பந்தா எதுவும் இல்லாத மாமனிதர், பெரும்பாலும் அவர் மதுரைக்கு வரும்போதெல்லாம் சந்திப்பது உண்டு.  தொடர்வண்டி நிலையம் வரை சென்று வழியனுப்பியதும் உண்டு.        தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுடன் நான் உள்பட பட்டிமன்ற குழுவினர் அனைவரும், கவிவேந்தர் மு. மேத்தா அவர்களின் சென்னையில் உள்ள  இல்லத்திற்கு முன்அறிவிப்பு இன்றி சென்று இருந்தோம்.  அவர் சென்னைக்காரர்கள் போல இல்லாமல் பழங்கள் வழங்கி உபசரித்து கலந்துரையாடி வழிஅனுப்பி வைத்தார்.  அப்போது முனைவர் பட்ட ...

திருமண விழா.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்

நன்றி .கவிஞர் பாரதி சுகுமாரன்

  நன்றி .கவிஞர் பாரதி சுகுமாரன் தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை கொண்டு... தமிழ் மொழியை முன்னெடுத்துச் செல்லும் பணியில் அமைப்புகள்... இயக்கங்கள்... களப்பணிகள்... என்று எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், திடீர் இலக்கியவாதியாகாமல் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்ப்பணிச் செம்மல்களை அடையாளம் காட்டுவதே இப்பதிவின் நோக்கம். 2021 ஜனவரி 24 அன்று உலகத்தமிழ்ப் பண்பாட்டுச்சங்கம் நடத்தும் தமிழ் - தமிழர் எழுச்சி மாநாட்டில், உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கத்தின் தலைவர்.பாவரசு.பாரதிசுகுமாரன் "தமிழ்ப்பணிச்செம்மல்" என்ற விருதினை இவர்களுக்கு வழங்கிட உள்ளார்* *மதுரை மாவட்டம், கவிஞர்.இரா.ரவி* *தமிழ்ப்பணியில் தம்மை முழுமைய ஈடுபடுத்திக்கொண்டு, விமர்சன வித்தகராகி, பல தமிழறிஞர்களின், படைப்பாளர்களின் நூல்களை ஆய்வு செய்து வருபவர், மதுரை மாவட்ட இலக்கிய உலகில் நன்கு அறியப் பட்டவர், அமைதியாக தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றி ஹைக்கூ கவிதை உலகில் தனி முத்திரை பதித்து வரும் ரவி அவர்களுக்கு இவ்விருதை வழங்குவதில் மகிழ்கிறோம்* 1 R Ravi Ravi