படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! இனிய காலை வணக்கம் ." ஐ.பி.எம் போன்ற நிறுவனங்கள் பயிற்சியில் அதிக முதலீடு செய்கின்றன. தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் நிகழ்கால முன்னேற்றங்களை அறிந்து கொள்ளும் பயிற்சியே சரியான வழி. பயிற்சியில் பணியாளர்கள் தங்களுக்குள்ளான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதால் அது அவர்களுக்கு மிகப்பெரிய மாறுதலாக இருக்கிறது. அவர்கள் உள்ளம் புத்துணர்ச்சியும் பெறுகிறது. பல நேரங்களில் அரசுப் பயிற்சிக்குத் துறை அலுவலர்கள் ஆட்களைச் சரியாக அனுப்புவதில்லை. தேவையில்லாத நபர்களைப் பயிற்சிக்கு அனுப்புவதும், குறிப்பிட்ட துறையில் பயிற்சி முடித்தவர்களை உடனடியாக வேறு துறைக்கு மாற்றுவதும் பயிற்சியின் நோக்கத்தை முனை மழுங்கச் செய்து விடுகின்றன." முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 488 இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்