படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." ஷேக்ஸ்பியரின் ‘மேக்பத்’ நாடகமே அதிக ஆசை ஆபத்தானது என்கிற கருத்தை வலியுறுத்தியே எழுதப்பட்டதுதான். அவனுடைய அவாவைத் தெரிந்துகொள்ளாமல் டங்கன் இன்னொரு பிரதேசத்திற்கு அதிபதியாக்கப்படுகிறான். ஆனால் அவனோ மன்னனாக வேண்டுமென்று முடிவெடுக்கிறான். சிறந்த போர்வீரனாக முதலில் இருந்தவன் விசுவாசமற்ற படைத்தளபதியாக ஆகித் துரோகியாக மாறிக் கொடுங்கோலனாக ஆகிறான். அவா மேலிருப்பவர்களையும் அழிக்கும், அதற்கு அடைக்கலம் தந்தவர்களையும் அழிக்கும். ‘சீவக சிந்தாமணி’யில் வரும் சச்சந்தன், மனோன்மணீயத்தில் வரும் குடிலன் என, அனைவருமே அதிக அவாவால் பீடிக்கப்பட்டவர்கள்தான். அதைத் தெரியாமல் அவர்களை நம்பியவர்கள் பலியானதுதான் காப்பியமாக உருமாறியிருக்கிறது. முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 476&477. இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்