இனிய காலை வணக்கம் ."
'அகல்விளக்கு' என்கிற மு.வ. வின் நாவல் முக்கியமானது. அதில் சந்திரன் என்கிற சிறுவன் அழகாக இருப்பான். திறமைசாலியாகவும் இருப்பான். பழம் விற்பவள்கூட அவனுக்கு இரண்டு
பழம் கூடுதலாகத் தருவாள். ஆனால் நாளடைவில் அவன் சிதைந்து சிதறிவிடுவான்.
அவனுடைய நண்பனோ சராசரியாக இருந்தாலும் முயற்சியாலும், பண்புநலத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்டு வருவான். தொடக்கம் முக்கியமல்ல, முடிவே முக்கியம் என்பதை மனித வாழ்க்கை உணர்த்துகிறது. வெளிப்புறத்தை வைத்து முடிவெடுப்பது தவறு என்று அந்தக் கதை ஆழமாக உணர்த்துகிறது
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 475&476.
இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக