வணக்கம் ."
பொதுவாகவே நாம் உருவ அமைப்பை வைத்து முடிவு செய்பவர்களாக இருக்கிறோம். ஒருவர் எடுப்பாக இருந்தால் அவர்களை மிகவும் சிறந்தவர்கள் என்று கருதிக்கொள்ளும் மனப்பான்மை பலரிடம் இருக்கிறது. ஏற்கனவே மனத் தயாரிப்பு செய்த அடிப்படையில் அவ்வாறு சிந்திப்பதும் உண்டு. திருவள்ளுவரோ ஒருவரை எந்தக் காலத்திலும் உருவத்தை வைத்து முடிவு செய்யக் கூடாது என்று தெளிவாகச் சொல்கிறார். வண்டிக்கு அச்சாணி போல ஒவ்வொருவரும் ஒவ்வொரு கால கட்டத்தில் நிறுவனத்திற்கு இன்றியமையாதவர்களாக இருப்பார்கள் என்பது அவருடைய கூற்று.
‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து’ (667)
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 467
இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக