இனிய காலை வணக்கம் ."
‘ஒடிசி’யில் ட்ரோஜன் குதிரை என்கிற ஒரு பதம் இடம் பெற்றிருக்கிறது. உண்மையில் அது கிரேக்கக் குதிரை. கிரேக்கர்கள் ட்ராயைத் தாக்குகிற தங்கள் முகாமிலிருந்து தாங்கள் திரும்பிப்போவதைப் போல ட்ராய் மக்களை நினைக்க வைக்க எண்ணினார்கள். எனவே அவர்கள் ஒரு மிகப்பெரிய மரக் குதிரையைச் செய்தார்கள்.
அந்தக் குதிரைக்குள் தலைசிறந்த வீரர்களைப் புகுச்செய்து அதை ட்ராயின் சந்தைப் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றார்கள். கப்பல்கள் திரும்புவதைப் பார்த்த ட்ராய் மக்களோ அதை உண்மை என்றே கருதிவிட்டார்கள். அது கிரேக்கர்கள் தங்களுக்குத் தந்த பரிசு என்று நினைத்தார்கள். சிலர் அதைத் திறந்து பார்க்க நினைத்தார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் நகரப் பகுதிக்கு அந்தக் குதிரையை இழுத்துச்சென்று, கிரேக்கர்கள் தங்களைத் தோற்கடித்ததற்காகக் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யச் சொன்னார்கள். இரவு நேரத்தில் கிரேக்கர்கள் அந்தக் குதிரையில் இருந்து கீழே குதித்து ட்ராய் நகரைத் தீக்கிரையாக்கினார்கள். மொத்தமாக ட்ராய் அழிந்துபோனது. பத்தாண்டுகள் நேரடியாக முடியாமல்போன படையெடுப்பை இந்தத் தந்திரத்தின் மூலம் கிரேக்கர்கள் சாதித்தார்கள். அழகானவை எல்லாம் பாதுகாப்பானவை என்று நினைக்கக் கூடாது."
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 475.
இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக