படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
வி.உ. இளவேனில் அம்மாவிற்கு மகளிர் தினமெல்லாம் தெரியாது. விடிகின்ற தினங்களை துலக்கி மெருகேற்றி அவளுடைய தினங்களாக மாற்றுவாள் . அவளை அவளே சமைத்து பரிமாறுவாள் வறுமை பெருந்தீயாய் எரிந்த சூட்டிலும். அவளின் அடிவயிற்று நெருப்பு சிறிய வடலூர் அடுப்பாகத்தான் பசிக்கெதிராக எரிகிறது. ஒவ்வொரு விடியலிலும் கொண்டாட்டத்தின் சாளரங்களை அவள் மூச்சுக் காற்றே திறந்து வைக்கிறது. இவ் வாழ்வின் உயரங்களின் வேர்கள் ஈரமாயிருப்பது அவளின் வியர்வைத் துளிகளால். பிராயங்களில் அவள் உடலையே அமுதாக்கி ஊட்டினாள். அந்தத் தனங்கள் வழியே அவளது கனவுகள் நுழைந்தன நமக்குள். உலகின் எந்த அதிசயங்களுக்கும் அவள் கருப்பையாகத்தானிருக்கிறாள். அவளின் தீட்டு நான். சாயம் போன நிறத்தில் கசங்கிய அவளி்ன் புடவை வாசத்தை எந்த மலரால் தர இயலும்? அவள் வாழ்வது தினங்களில் அல்ல. மனங்களில்.

கருத்துகள்