கண்ணகி நகர் ஆம்புலன்ஸ் சேவைக்கு குருநானக் கல்வி அறக்கட்டளையின் அன்பளிப்பு

கண்ணகி நகர் ஆம்புலன்ஸ் சேவைக்கு குருநானக் கல்வி அறக்கட்டளையின் அன்பளிப்பு முனைவர் இறையன்பு அவர்களின் வழிகாட்டலில் கண்ணகி நகரில் இயங்கி வரும் முதல் தலைமுறை அறக்கட்டளைக்கு ஸ்ரீநிவாச காந்தி நிலையம் ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளது. கண்ணகிநகர்வாழ் மக்களின் அவசரத் தேவைகளுக்கு இந்த ஆம்புலன்ஸ் உபயோகப்படுத்தப்படவுள்ளது. இந்த ஆம்புலன்சின் அன்றாட, மாதாந்திரச் செலவுகளை ஈடுகட்டுவதற்கு குருநானக் கல்வி அறக்கட்டளை முன்வந்தது. அதற்கான அன்பளிப்பாக ஆறு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அந்த அறக்கட்டளையின் சார்பாக திருமதி ஹர்வீன் கௌர் அவர்கள் முதல் தலைமுறை அறக்கட்டளையின் நிறுவனர் திரு மாரிசாமியிடம் இறையன்பு அவர்கள் மூலம் இன்று அளித்தார். அப்போது இளைஞர் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ராஜா அவர்களும் உடனிருந்தார்.

கருத்துகள்