வணக்கம் ."
திருக்குறளைப் பொருத்தவரை முறையாக ஒருவனைப் பரிசோதித்த பிறகுதான் அந்தப் பணிக்கு அமர்த்த வேண்டும், எல்லாவிதமான தகுதிகளையும் ஆராய்ந்து குறிப்பிட்ட பணிக்கு அவன் பொருந்துவானா இல்லையா என்பதைத்
தீர்க்கமாக ஆய்வு செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் அவனைத் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக இருக்கும்.
தேற்றற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். (509)
எதிர்மறையாக வேறுபடுத்துவதைத் திருக்குறள் வலியுறுத்தவில்லை. ஆனால் வாய்ப்பற்றவர்களையும், வசதி படைத்தவர்களையும் சமன்படுத்துவதற்கான வேறுபாட்டை அது முன் மொழிகிறது. ஒருவர் எக்காரணம் கொண்டும், அவருக்குத் தகுதியானவற்றிலிருந்து ஒதுக்கி வைக்கப்படக்கூடாது. திறமைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின் (111)
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 462
இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக