இனிய காலை வணக்கம் ."
ஒளிவட்ட விளைவு (Halo Effect) என்பது சமூகத்தில் பரவலாகக் காணப்படும் மதிப்பீட்டுக் கோளாறு.
ஒருவரிடம் உள்ள ஒரு குணத்தை வைத்து, மற்ற எல்லாவற்றையும் அதைக் கொண்டே முடிவு செய்து அவற்றைப் பற்றிய கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொள்வதே ஒளிவட்ட விளைவு. எட்வர்ட் தாண்டிக் என்பவரே இப்பதத்தை உருவாக்கியவர்.
இரண்டு இராணுவ அதிகாரிகளை
அவர்களுடைய சிப்பாய்களின் குறிப்பிட்ட தன்மைகளை மதிப்பீடு செய்யும்படி சொன்னார். அவர்கள் அந்தச் சிப்பாய்களை உடலமைப்பு, அறிவு, தலைமைப் பண்பு போன்றவற்றைக் கொண்டு மதிப்பிட்டனர். அவர்கள் பெரும்பாலும் உடலமைப்பை வைத்தே மற்றவற்றையும் மதிப்பீடு செய்தனர் என்பது தெரிந்தது.
அழகாக இருப்பவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள், சிவப்பாக இருப்பவர்கள் சுத்தமாக இருப்பார்கள், நன்றாகப் பேசுகிறவர்கள்
திறமைசாலிகளாக இருப்பார்கள் போன்ற பல ஒளிவட்டக் கற்பனைகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தால், மற்ற எல்லாவற்றிலும் திறமைசாலியாக இருப்பான் என்றெல்லாம் நாம் முடிவு செய்துவிடுகிறோம்.
ஒளிவட்ட விளைவு பல நேர்முகத்
தேர்வுகளிலும், ஆளுமைத் தேர்வுகளிலும் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப 470&471
இந்த நாள் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிரம்பிய நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக